PUBG மொபைல் கேம் தடை செய்யப்பட்டால்! உடனே இதைச் செய்யுங்கள் - கவலை வேண்டாம்!

|

சீன ஆப்களை இந்தியா தடை செய்த பின்பு பப்ஜி மொபைல் கேமும் தடை செய்யப்படுமா என்ற கேள்வி தான் அனைவரிடத்திலும் எழுந்துள்ளது. இன்னும் சொல்லப்போனால் இன்னும் பப்ஜி கேமிற்கு தடை வரலையா என்று சில பெற்றோர்கள் குமுறுவதும் நமக்கு கேட்கிறது. இவர்களின் எதிர்பார்ப்பு போல பப்ஜி கேம் தடை செய்யப்பட்டால், இதற்கு நிகரான மூன்று கேமை கீழே குறிப்பிட்டுள்ளோம். உங்களுடைய சாய்ஸ் எதுவென்று படித்துவிட்டுச் சொல்லுங்கள்.

பப்ஜி கேமும் தடை செய்யப்படுமா?

பப்ஜி கேமும் தடை செய்யப்படுமா?

உலகம் முழுதும் இளைஞர்கள் இந்த கேமை விளையாடி வருகின்றனர். ஊரடங்கிற்குப் பின்னர் இந்த கேமில் பெண் பயனாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது என்பது கூடுதல் சுவாரசியம். இந்தியாவில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட கேம்களில் இந்த பப்ஜி கேமும் ஒன்றாகும். சமீபத்தில் விதிக்கப்பட்ட சீன ஆப்ஸ் தடைக்குப் பின்னர், பப்ஜி கேமும் தடை செய்யப்படுமோ என்ற அச்சத்தில் இதன் பயனர்கள் இருக்கின்றனர்.

 கூகிளிடம் அதிகம் கேட்கப்பட்ட கேள்வி?

கூகிளிடம் அதிகம் கேட்கப்பட்ட கேள்வி?

பப்ஜி மொபைல் கேம் தடை செய்யப்படுமா என்கிற கேள்வி தான் சமீபத்தில் கூகிளிடம் அதிகம் கேட்கப்பட்ட கேள்வியாக இருக்கிறது. கூகிளில் இதை பற்றி சர்ச் செய்தவர்களுக்கு உண்மை தெரிந்திருக்கும். பப்ஜி கேமிற்கு இப்போதைக்கு இந்தியாவில் தடை இல்லை, ஏனெனில் இந்த கேம் நிறுவனம் கொரியாவை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வருகிறது என்பது தான் உண்மை. ஆனால், எப்போது வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பது தானே வாழ்க்கை.

1 ஜிபி டேட்டா வெறும் 2 ரூபாய் மட்டுமே! அம்பானிக்கு தண்ணிகாட்டும் இளைஞர்களின் நிறுவனம்!1 ஜிபி டேட்டா வெறும் 2 ரூபாய் மட்டுமே! அம்பானிக்கு தண்ணிகாட்டும் இளைஞர்களின் நிறுவனம்!

பப்ஜி கேமிற்கு நிகரான மூன்று அட்டகாசமான சாய்ஸ்

பப்ஜி கேமிற்கு நிகரான மூன்று அட்டகாசமான சாய்ஸ்

அப்படி ஒரு வேலை எதிர்காலத்தில், ஏதேனும் ஒரு காரணத்திற்காக பப்ஜி கேம் தடை செய்யப்பட்டால் உடனே மனம் சோர்வடையாதீர்கள். பப்ஜி கேமிற்கு நிகரான மூன்று அட்டகாசமான கேம்கள் இந்தியாவில் கிடைக்கிறது. அதில் முதல் கேம் தான் ஃபோர்ட்நைட், பிறகு உங்களுக்குக் கால் ஆஃப் டூட்டி மற்றும் கரேனா ஃப்ரீ ஃபயர் என்ற கேம்கள் ஆண்ட்ராய்டு மற்றும் iOS என இரண்டு தளங்களிலும் விளையாடக் கிடைக்கிறது.

ஃபோர்ட்நைட் (Fortnite)

ஃபோர்ட்நைட் (Fortnite)

எபிக் கேம் நிறுவனத்தின் இந்த ஃபோர்ட்நைட் கேம் தொடக்கத்திலிருந்தே பப்ஜி கேமிற்கு போட்டியாக இருந்து வருகிறது. இந்த இரண்டு கேம்களும் பேட்டில் ராயல் வகையைச் சேர்ந்தது, இந்த இரண்டு கேமிலுமே அதிகளவு பயனர்கள் உள்ளனர். PUBG மொபைல் கேமிற்கு நிகரான தரமான சாய்ஸ் நிச்சயம் ஃபோர்ட்நைட் கேமாக தான் இருக்கும். இந்த ஃபோர்ட்நைட் கேமின் கிராபிக்ஸ் அனிமீ வடிவத்தில் பல சுவாரஸ்யமான வெவ்வேறு கேரக்டர்களுடன் வருகிறது.

கால் ஆஃப் டூட்டி மொபைல் (Call of Duty Mobile)

கால் ஆஃப் டூட்டி மொபைல் (Call of Duty Mobile)

கால் ஆஃப் டூட்டி முதலில் PC கேமாக அறிமுகம் செய்யப்பட்டது. ஸ்மார்ட்போன் பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து இந்நிறுவனம் அதன் மொபைல் வெர்ஷனை பப்ஜிக்கு போட்டியாக வெளியிட்டது. இதுவும் PUBG மொபைல் கேமிற்கு நல்ல மாற்றாகும். பப்ஜி கேமில் உள்ள பேலோடு மோடு போல தான் இந்த ஒட்டு மொத்த கேமும் செயல்படுகிறது. ஹெலிகாப்டர், கேமர் ஷீல்டு என்று பல அம்சங்கள் இதில் இருக்கிறது.

ரூ.365-க்கு 365 நாட்கள் வேலிடிட்டி., தினசரி 2 ஜிபி டேட்டா- பிஎஸ்என்எல் மிரட்டல் அறிவிப்பு!ரூ.365-க்கு 365 நாட்கள் வேலிடிட்டி., தினசரி 2 ஜிபி டேட்டா- பிஎஸ்என்எல் மிரட்டல் அறிவிப்பு!

கரேனா ஃப்ரீ ஃபயர் (Garena Free Fire)

கரேனா ஃப்ரீ ஃபயர் (Garena Free Fire)

கரேனா ஃப்ரீ ஃபயர் என்ற இந்த கேம் தற்பொழுது சமீப காலமாக பிரபலமடைந்து வருகிறது. இதுவும் PUBG கேமிற்கான ஒரு நல்ல மாற்றாகும். பப்ஜி போல் நீண்ட நேரம் இல்லாமல், குறுகிய நேரத்தில் பப்ஜி கேம் போன்ற அனுபவத்தை அனுபவிக்க விரும்புவோர் இந்த கேமை ட்ரை செய்யலாம். இந்த கேமில் ஒவ்வொரு சுற்றும் வெறும் 10 நிமிடம் மட்டுமே நீருக்கும். ஆனால், இதன் கிராஃபிக்ஸ் பப்ஜி போன்று சிறப்பானது இல்லை. ஆனாலும் கூட ஒரு மொபைல் கேமிற்கு போதுமான ஒன்று தான்.

Best Mobiles in India

English summary
This 3 Best Games Are Similar To PUBG Mobile In India : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X