1 ஜிபி டேட்டா வெறும் 2 ரூபாய் மட்டுமே! ஜியோவிற்கு போட்டியாக களமிறங்கிய இளைஞர்களின் நிறுவனம்!

|

பொது வைஃபை ஹாட்ஸ்பாட் சேவையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு 2017-ல் துவங்கப்பட்ட வைஃபை டப்பா நிறுவனத்தைப் பற்றி அறிந்திருப்பீர்கள் அல்லவா? தெரியாதவர்களுக்கு எளிதில் புரியும்படி சொன்னால் 1 ஜிபி டேட்டாவை வெறும் 1 ரூபாயில் வழங்கிய முதல் இந்திய நிறுவனம் வைஃபை டப்பா மட்டும் தான்.

1 ஜிபி டேட்டாவை வெறும் 2 ரூபாய்

1 ஜிபி டேட்டாவை வெறும் 2 ரூபாய்

வைஃபை டப்பா நிறுவனம் இப்போது தனிநபர்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு முழுவதுமாக, 1 ஜிபிபிஎஸ் இணைய இணைப்பு வேகத்தில், 1 ஜிபி டேட்டாவை வெறும் 2 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யத் தயாராகியுள்ளது. வைஃபை டப்பாவின் புதிய சூப்பர்நோட்களைக் கொண்டு இந்த வேகத்தில் மலிவு விலையில், அதிவேக டேட்டா வழங்க முடியுமென்று நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஷுபெந்து ஷர்மா மற்றும் கரம் லக்ஷ்மன் கூறியுள்ளனர்.

மலிவான விலையில் நல்ல வேகம்

மலிவான விலையில் நல்ல வேகம்

மலிவான விலையில் நல்ல வேகத்தில் இணையச் சேவை வழங்குவது தான் இவர்களுடைய எண்ணம், இதைத் தேடித்தான் இந்தியாவில் பெரும்பாலான மக்கள்தொகை காத்து நிற்கின்றது. இவர்களைக் கருத்தில் கொண்டு தான் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. வைஃபை டப்பா நிறுவனம் கடந்த மூன்று ஆண்டுகளில், சுமார் 1.7 மில்லியன் முதலீட்டுத் தொகையை சூப்பர்நோட் உருவாக்கத்திற்காகச் செலவிட்டுள்ளதாகக் கூறியுள்ளது.

இது புதிய லிஸ்ட்: மீண்டும் 25ஆப்களை தடை செய்தது கூகுள்.! உடனே டெலிட் செய்யுங்கள்.,இதோ முழுவிவரம்.!

ஃபைபர் ஆப்டிக் கேபிள்களுக்கு மாற்றாக சூப்பர்நோட்கள்

ஃபைபர் ஆப்டிக் கேபிள்களுக்கு மாற்றாக சூப்பர்நோட்கள்

வைஃபை டப்பா நிறுவனத்தின் கூற்றுப்படி, சூப்பர்நோட்கள் ஃபைபர் ஆப்டிக் கேபிள்களுக்கு மாற்றாக உள்ளது, இவை தற்போது இந்தியாவில் இணையச் சேவை வழங்குநர்களின்(ISPs) அமைப்புகளுக்கு முதுகெலும்பாக இருக்கின்றது என்று தெரிவித்துள்ளது. இந்த லேசர் கண்களை பாதிக்காது, ஒரு நொடிக்கு 100ஜிபி வேகம் வரை கொடுக்கும் என்றும், ஆப்டிக் ஃபைபர் இல்லாமல் 20 கிலோமீட்டர் வரை இதன் சேவை இருக்குமென்று கூறியுள்ளனர்.

சூப்பர் வேகத்தில்,சூப்பர் டேட்டா

சூப்பர் வேகத்தில்,சூப்பர் டேட்டா

வைஃபை டப்பா நிறுவனம், அதன் சேவையை முதல் கட்டமாகப் பெங்களூரு நகரில் மட்டும் அறிமுகம் செய்துள்ளது. மேலும் இந்த சூப்பர்நோட்களை நிறுவப் பெங்களூரின் மெய்நிகர் இடவியல் வரைபடத்தை உருவாக்கும் பணியில் தீவிரமாக பணிபுரிந்து வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சூப்பர் மலிவான விலையில், சூப்பர் வேகத்தில்,சூப்பர் டேட்டா சேவையை வழங்க நிறுவனம் இப்பொழுது தயாராகிவிட்டது.

தினசரி 5ஜிபி டேட்டா: 90நாட்கள் வேலிடிட்டி.! பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பலே திட்டம் அறிமுகம்.!

1,000-க்கும் அதிகமான ஹாட்ஸ்பாட் டப்பாக்கள்

1,000-க்கும் அதிகமான ஹாட்ஸ்பாட் டப்பாக்கள்

இப்போதைக்கு, வைஃபை டப்பா நிறுவனம் பெங்களூரில் சுமார் 1,000-க்கும் அதிகமான ஹாட்ஸ்பாட் டப்பாக்களை நகரத்தின் பெரும்பாலான இடங்களில் நிறுவியுள்ளது. வைஃபை டப்பா நிறுவனத்தின் படி, 1ஜிபி டேட்டாவுக்கு ரூ.1 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. மேலும், இது நகரத்தில் 10,000-க்கும் மேற்பட்ட இணை-வாழ்க்கை (Co-Living) இடங்களுக்கான இணைப்பையும் வைஃபை டப்பா உருவாக்கியுள்ளது.

வைஃபை பாக்ஸ் ஜிகா ரவுட்டர்

வைஃபை பாக்ஸ் ஜிகா ரவுட்டர்

இந்த ஆண்டு, வைஃபை டப்பா நிறுவனம் புதிய முயற்சியாக நகரம் முழுவதும் சூப்பர் நோடுகளை பொறுத்த திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இல்லங்கள், கடைகள் மற்றும் தொழில் நிலையங்களுக்கு வைஃபை இணைப்புகளைக் கொடுக்க சூப்பர் நோடுடன் இணைக்கும் ஒரு வைஃபை பாக்ஸ் ஜிகா ரவுட்டரையும் தனது பயனர்களுக்கு வழங்கவுள்ளதாக ஷுபெந்து ஷர்மா தெரிவித்துள்ளார்.

2 மில்லியன் மதிப்புள்ள தங்க புதையல் கண்டுபிடிப்பு! ஒருவழியாக நிறைவுக்கு வந்த தேடுதல் வேட்டை!

விரைவில் இந்திய முழுவதும்

விரைவில் இந்திய முழுவதும்

மலிவு விலையில் அதிக டேட்டா பயனை வழங்கிய சூப்பர்நோட்ஸ் தொழில்நுட்பத்திற்கு நன்றி தெரிவித்து, வைஃபை டப்பா விரைவில் 1 ஜிபிபிஎஸ் வேகத்தில் ப்ரீபெய்ட் திட்டங்களைப் பெங்களூரில் அறிமுகப்படுத்தவுள்ளது என்று அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அடுத்தகட்டமாக நாடு முழுவதும் தனது சேவையைத் தொடர தயாரி வருகிறது என்று தெரிவித்துள்ளது. கூடிய விரைவில் பெங்களூர் மட்டுமில்லாமல் இந்தியா முழுதும் வைஃபை டப்பா கிடைக்கும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Wifi Dabba Is Offering 1GB Data At Rs.2 Only, This New Startup Is Challenging Mukesh Ambani : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X