ரூ.365-க்கு 365 நாட்கள் வேலிடிட்டி., தினசரி 2 ஜிபி டேட்டா- பிஎஸ்என்எல் மிரட்டல் அறிவிப்பு!

|

பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.365 ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டம் கிடைக்கும் பகுதிகள் மற்றும் வழங்கப்படும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் புதிய ரூ.365 திட்டம்

பிஎஸ்என்எல் புதிய ரூ.365 திட்டம்

பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) புதிய ரூ.365 திட்டத்தை தேர்ந்தெடுக்கப்பட்ட தொலைத் தொடர்பு வட்டங்களில் கிடைக்கிறது. இந்த புதிய திட்டத்தில் தினசரி 250 நிமிட குரல் அழைப்பு, 2 ஜிபி தினசரி டேட்டா உட்பட ஒரு நாளுக்கு 100 எஸ்எம்எஸ் போன்ற வசதிகளை வழங்குகிறது.

ரூ.2,399 ப்ரீபெய்ட் திட்டம்

ரூ.2,399 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் அறிவித்துள்ள இந்த இலவசமானது 60 நாட்களுக்கு மட்டுமே வழங்குகிறது. சமீபத்தில் பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.2,399 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்த திட்டமானது டேட்டா தரவை வழங்கவில்லை என்றாலும் 600 நாட்கள் திட்டத்தின் செல்லுபடியாகும் நாட்களாகும்.

விண்வெளி வாசனையில் NASA உருவாக்கியுள்ள சென்ட்! உண்மையில் இது விண்வெளி வாசம் தானாம்!விண்வெளி வாசனையில் NASA உருவாக்கியுள்ள சென்ட்! உண்மையில் இது விண்வெளி வாசம் தானாம்!

ரூ.365 ரீசார்ஜ் திட்டம்

ரூ.365 ரீசார்ஜ் திட்டம்

பிஎஸ்என்எல் வழங்கும் ரூ.365 ரீசார்ஜ் திட்டம் கேரள இணையத்தில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் இந்த திட்டானது ஆந்திரா, பீகார் ஜார்கண்ட், அசாம், குஜராத், ஹரியானா, இமாச்சல பிரதேசம், கர்நாடகா, கேரளா, கொல்கத்தா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ஒரிசா, பஞ்சாப், ராஜஸ்தான், தமிழ்நாடு சென்னை உள்ளிட்ட பகுதிகளில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினசரி 250 நிமிட குரல் அழைப்பு

தினசரி 250 நிமிட குரல் அழைப்பு

இந்த திட்டத்தின் கீழ் கிடைக்கும் தினசரி 250 நிமிட குரல் அழைப்பு வரம்பு முடிந்த பிறகு, இணைய வேகம் 80 கேபிபிஎஸ் ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் தினசரி 100 எஸ்எம்எஸ்-களையும் தனிப்பயனாக்கப்பட்ட ரிங் பேக் டோன்(பிஆர்பிடி) சேவையை வழங்குகிறது.

60 நாட்கள் இலவச சலுகைகள்

60 நாட்கள் இலவச சலுகைகள்

இந்த திட்டத்தில் வழங்கப்படும் 60 நாட்கள் இலவச சலுகைகள் முடிந்த பிறகு, குரல் அழைப்பு மற்றும் டேட்டா தேவைகளை பெறுவதற்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்பது அவசியம். இந்த புதிய பிஎஸ்என்எல் பிவி 365 ப்ரீபெய்ட் திட்டத்தை டெலிகாம் டாக் முதலில் கண்டறிந்தது.

தினசரி 3ஜிபி டேட்டா

தினசரி 3ஜிபி டேட்டா

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.78-திட்டம் ஆனது தினசரி 3ஜிபி டேட்டா வழங்குகிறது, பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 8 நாட்கள் ஆகும். மேலும் எஃப்யூபி வரம்பை எட்டும்போது இணைய வேகத்தை 80 கே.பி.பி.எஸ் ஆக குறையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு தினசரி 250 நிமிடங்கள் FUP வரம்பிலான அழைப்புகள், 8 நாட்களுக்கு ஈரோஸ் நவ் எண்டர்டெயின்மெண்ட் சேவைகளுக்கான இலவச அணுகல் உள்ளிட்ட சலுகைகளும் இந்த திட்டத்தில் வழங்கப்படுகின்றன.

பிஎஸ்என்எல் 4 ஜி சேவை

பிஎஸ்என்எல் 4 ஜி சேவை

முன்னதாக பிஎஸ்என்எல் 4 ஜி சேவை பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வந்தாலும், முதற்கட்டமாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி சேவையானது, மும்பை மற்றும் டெல்லி வட்டங்களில் கிடைத்தது. பிஎஸ்என்எல் தற்போது கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் பல பகுதிகளில் அதன் 4ஜி சேவையை வழங்கி வருகிறது. சில வட்டங்களில், பிஎஸ்என்எல் ஏற்கனவே இருக்கும் 3ஜி ஸ்பெக்ட்ரமைப் பயன்படுத்தி 4 ஜி சேவைகளை வழங்குகிறது.

ஜியோவின் அட்டகாச திட்டங்கள்: 150 ஜிபி டேட்டா முதல் 10,000 ஜிபி டேட்டா வரை!ஜியோவின் அட்டகாச திட்டங்கள்: 150 ஜிபி டேட்டா முதல் 10,000 ஜிபி டேட்டா வரை!

3 ஜி ப்ரீபெய்ட் திட்டத்தில் 4 ஜி சேவை

3 ஜி ப்ரீபெய்ட் திட்டத்தில் 4 ஜி சேவை

3 ஜி ப்ரீபெய்ட் திட்டங்களை ரீசார்ஜ் செய்வதன் மூலம் பிஎஸ்என்எல் பயனர்களுக்கு 4ஜி வேக இணைய சேவையை வழங்குகிறது. அதாவது இந்த திட்டம் குறித்து தெளிவாக பார்க்கையில், பிஎஸ்என்எல் 3 ஜி ப்ரீபெய்ட் திட்ட விலையில் ரீசார்ஜ் செய்திருந்தாலும் பிஎஸ்என்எல் 4 ஜி சேவை வழங்கக் கூடிய ஒரு மண்டலத்தில் இருந்தால் 4ஜி நெட்வொர்க் வேகத்தை பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

source: ndtv.com

Best Mobiles in India

English summary
BSNL Rs. 365 recharge plan is now available with 365 days validity!

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X