PUBG கேம் விளையாடிய 16 வயது இளைஞர் தூக்கு.. நண்பர்கள் செய்த விளையாட்டு விபரீதம் ஆனது..

|

ஆன்லைன் கேமில் தோல்வியடைந்ததால், நண்பர்கள் கிண்டல் செய்ததால் சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. PUBG கேம் விளையாடிய 16 வயது இளைஞன் ஆன்லைன் விளையாட்டில் தோல்வியுற்றதால், அவனது நண்பர்கள் கேலி செய்ததைத் தொடர்ந்து இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. உண்மையில், இந்த இளைஞன் எதற்காக இறந்தார், என்ன நடந்தது என்பதை விரிவாகப் பார்க்கலாம்.

காங்கிரஸ் பிரமுகரின் மகன் தற்கொலை

காங்கிரஸ் பிரமுகரின் மகன் தற்கொலை

ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள மச்சிலிப்பட்டினத்தில் ஞாயிற்றுக்கிழமை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. இந்த வாலிபர் உள்ளூர் காங்கிரஸ் பிரமுகரான சாந்திராஜ் என்பவரின் மகன் என்று கூறப்பட்டுள்ளது. சிறுவன் PUBG ஆன்லைன் மொபைல் கேமை நீண்ட காலமாக விளையாடி வந்ததாகக் கூறப்படுகிறது. இறுதியாக அவர், ஞாயிற்றுக்கிழமை தனது நண்பர்களுடன் இந்த கேமை விளையாடியதாகக் கூறப்படுகிறது. அவர் ஆட்டத்தில் தோற்றபோது நண்பர்கள் அவரை கேலி செய்ததாகக் கூறப்படுகிறது.

நண்பர்களின் கேலி வினையானது

நண்பர்களின் கேலி வினையானது

இதனால், அவமானம் அடைந்து மனம் உடைந்த அந்த இளைஞர் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்ததாகக் கூறப்படுகிறது. அந்த இளைஞர் தனது நபர்களை விடுத்து, தனது வீட்டிற்குச் சென்றதாக ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. வீடு திரும்பிய அவர் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று கூறப்பட்டுள்ளது. வீடு திரும்பிய பெற்றோர் இளைஞரின் உடலை பார்த்த பின்னர் கலைத்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தியுள்ளனர்.

இது ரோபோவா? வாகனமா? ஆசால்ட்டா 100 கிலோ எடையை தூக்கி, கொம்புடன் ஓடுது, நடக்குது.. Kawasaki அசத்தல் - வீடியோ.!இது ரோபோவா? வாகனமா? ஆசால்ட்டா 100 கிலோ எடையை தூக்கி, கொம்புடன் ஓடுது, நடக்குது.. Kawasaki அசத்தல் - வீடியோ.!

இந்தியாவிற்குள் களமிறக்கப்பட்ட மொபைல் கேமால் சிக்கலா?

இந்தியாவிற்குள் களமிறக்கப்பட்ட மொபைல் கேமால் சிக்கலா?

சிறுவனின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய மாவட்ட காங்கிரஸ் தலைவர் தந்தியா குமாரி, அவர்கள் உயிரைப் பறிப்பதால், PUBG பாணி விளையாட்டுகளைத் தடை செய்யுமாறு மத்திய மற்றும் மாநில அரசுகளுக்குக் கோரிக்கை விடுத்துள்ளதாக ஐஏஎன்எஸ் தகவலை வெளியிட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டில் இந்தியாவில் PUBG கேம் முற்றிலுமாக தடைசெய்யப்பட்டது. ஆனால், நீண்ட போராட்டத்துக்குப் பிறகு, PUBG கேம் கடந்த ஆண்டு வேறு பெயரில் மீண்டும் இந்தியாவிற்குள் களமிறக்கப்பட்டது.

காங்கிரஸ் தலைவரின் 21 வயது மகன் மரணம்

காங்கிரஸ் தலைவரின் 21 வயது மகன் மரணம்

இதற்கிடையில், ராஜஸ்தானில், காங்கிரஸ் தலைவரின் 21 வயது மகன், PUBG சவாலை முடிக்கத் தவறியதால் தற்கொலை செய்து கொண்டார். ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் காமினி குர்ஜரின் மகன் பிரதம் குர்ஜார், கேமிங் சவாலை முடிக்கத் தவறியதால் சனிக்கிழமை தற்கொலை செய்துகொண்டார்.
வெளிப்படையாக, கேமிற்குள் விளையாடி வெற்றி அடைய வேண்டிய ஒரு பணியை அவரால் முடிக்க முடியாமல் போனதால், அவரது தற்கொலைக்கு PUBG காரணமானது.

Jio, Airtel, Vi, BSNL: ரூ.147 முதல் முழுசா 30 நாள் வேலிடிட்டி கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டங்கள்..இது ஏன் பெஸ்ட்Jio, Airtel, Vi, BSNL: ரூ.147 முதல் முழுசா 30 நாள் வேலிடிட்டி கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டங்கள்..இது ஏன் பெஸ்ட்

எதனால் இந்த விபரீதம்?

எதனால் இந்த விபரீதம்?

இறுதியில், தற்கொலை செய்து கொண்ட இளைஞரின் தொலைப்பேசி கைப்பற்றப்பட்டு, போலீசாரால் விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது போன்ற தற்கொலை செய்திகள் எல்லாம், சிறிது காலம் தலைப்புகளில் வராமல் இருந்தது. இந்த கேம் மீண்டும் இந்தியச் சந்தைக்குள் கால் பதித்தவுடன், இது போன்ற நிகழ்வுகள் அங்கங்கே நிகழ்ந்து வருகிறது என்று பெற்றோர்கள் கவலை அடைந்துள்ளனர். 18 வயதைத் தாண்டிய இளைஞர்கள் கூட தற்கொலைக்கு முடிவெடுப்பது சிக்கலை உருவாக்கியுள்ளது.

Best Mobiles in India

English summary
Teenager hangs himself from ceiling fan after friends mock him over defeat in PUBG : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X