PUBG கேமிற்கான ஜூலை மாத இலவச Redeem குறியீடுகள்.. எப்படி பரிசுகளைப் பெறுவது?
PUBG மொபைல் லைட் கேமின் ஜூலை மாதத்திற்கான PUBG மொபைல் லைட் ரிடீம் குறியீடுகளை எப்படிப் பயன்படுத்துவது என்று பார்க்கலாம். AKM துப்பாக்கியின் கிளேசியர் ஸ்கின் மற்றும் புதிய லெஜென்டரி ஆடைகளை இலவசமாகப் பெற பயனர்கள் இந்த ரிடீம் கோடுகளை பயன்படுத்தலாம். சரி, இந்த ரிடீம் கோடுகளை எங்கிருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம் என்பதைப் பார்க்கலாம்.

PUBG மொபைல் கேமிற்கான ரிடீம் கோடுகள்
PUBG மொபைல் லைட் என்பது அனைவருக்கும் பிடித்த பேட்டில் ராயல் கேமின் லைட் வெர்ஷனாகும். அதன் அற்புதமான விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் வெகுமதிகளுக்காகவும் ஏராளமான பயனர்கள் இந்த கேமை பயன்படுத்தி வருகின்றனர். PUBG மொபைலின் லைட் வெர்ஷன் சிறப்பாக தயாரிக்கப்பட்ட பதிப்பாகும், இது குறைந்த விவரக்குறிப்புகளுடன் கூடிய லோ-எண்டு சாதனங்களில் இயங்கக்கூடியது.

ரிடீம் கோடுகள் பயன்படுத்தி இலவச பரிசுகளை பெறலாம்
செலவழிக்காமல் கேமில் கிடைக்கும் வெகுமதிகளை இலவசமாகப் பெற மற்றொரு முறை உள்ளது என்றால் அது ரிடீம் கோடுகள் மூலம் கிடைக்கும் பரிசுகள் தான். PUBG மொபைல் கேமிற்கான இந்த ரிடீம் குறியீடுகளை நீங்கள் பயன்படுத்தும் போது அவற்றுக்கு ஏற்ற இலவச வெகுமதிகளை உங்கள் கேம் அக்கௌன்ட்டில் நீங்கள் பெறுவீர்கள். இந்த குறியீடுகளை மீட்டு வெகுமதிகளைப் பெறுவதற்கான படிப்படியான வழிகாட்டுதலைக் கீழே குறிப்பிட்டுள்ளோம்.

PUBG மொபைல் லைட் கேமின் ஜூலை 1 ஆம் தேதிக்கான ரிடீம் குறியீடுகள்
- BMTCZBZMFS
- SD14G84FCC - AKM கிளேசியர் ஸ்கின்
- LEVKIN1QPCZ
- VETREL2IMHX - பம்பல் பீ செட்
- JJCZCDZJ9U - கோல்டன் பான் ஸ்கின்
- TIFZBHZK4A - புதிய லெஜண்டரி ஆடைகள்

Redeem குறியீடுகளை பெறுவதற்கான செயல்முறை
செயல்முறை 1: PUBG லைட் அதிகாரப்பூர்வ Redeem தள இணையப் பக்கத்திற்குச் சென்று, அங்கு கேட்கப்படும் மூன்று உள்ளீட்டு தகவல்களைப் பதிவிடுங்கள். PUBG மொபைல் லைட் ரிடீம் சென்டர் என்று கூகிள் செய்து நீங்கள் இணையதளத்தைப் பயன்படுத்தலாம். நீங்கள் பக்கத்தை அணுக முடியாவிட்டால் VPN ஐப் பயன்படுத்தி ட்ரை செய்து பாருங்கள்.

தேவையான தகவல்களை சரியாக என்டர் செய்யுங்கள்
செயல்முறை 2 - உங்கள் கேம் ஐடி, மீட்டெடுப்புக்குத் தேவைப்படும் ரிடீம் குறியீட்டை அந்தந்த பெட்டிகளில் உள்ளிட்டு கேப்ட்சா / சரிபார்ப்புக் குறியீட்டை நிரப்பவும். ரிடீம்டு என்ற நோட்டிபிகேஷன் உங்களுக்கு வெற்றிகரமான மீட்பின் மீது டிஸ்பிளேவில் தோன்றும்.
செயல்முறை 3- ரிடீம் செய்த வெகுமதிகள் நேரடியாக உங்கள் கேமின் மெயில் இடத்தில் சென்று நீங்கள் ஓபன் செய்யலாம். முக்கிய குறிப்பு அது காலாவதியாகும் முன்பு நீங்கள் அதை அங்கிருந்து சேகரித்திருக்க வேண்டும்.

சிக்கல் ஏற்பட்டால் VPN ஐப் பயன்படுத்தவும்
நீங்கள் என்டர் செய்த ரிடீம் கோடு தோல்வியுற்றால், குறியீடு காலாவதியானது அல்லது நீங்கள் தவறான தகவலை வைத்துள்ளீர்கள் என்று அர்த்தம். இருப்பினும், நீங்கள் மற்ற ரிடீம் மீட்டு குறியீடுகளை ட்ரை செய்து பார்க்கலாம். எந்த கோடு செயல்பாட்டில் உள்ளதோ அந்த வெகுமதி உங்கள் கேம் கணக்கில் வந்து சேரும். ரிடீம் தளத்தை ஓபன் செய்வதில் ஏதேனும் சிக்கல் தோன்றினால் VPN ஐப் பயன்படுத்தவும்.


Click it and Unblock the Notifications