9-ம் வகுப்பு மாணவர் உருவாக்கிய கொரோபாய் மொபைல் கேம்.! என்ன சிறப்பு?

|

இந்த கொரோனா வைரஸ் முதலில் ஜலதோஷம், உடல் வலி, இருமல், தும்மல், காய்ச்சல், நெஞ்சுவலி கடைசியில் மரணம் வரை ஏற்பட வாய்ப்பு உள்ளது. குறிப்பாக இது லேசான காய்ச்சலில்தான் இது துவங்கும் எனக் கூறப்படுகிறது.

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் தொற்று இருப்பவர்களுடன் நேரடி தொடர்பு வைத்திருந்தால் வைரஸ் தொற்று வேகமாக பரவும் அபாயம் இருக்கிறது. இருப்பினும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளை நேரடியாக சோதித்து பார்க்க வேண்டிய கட்டாயத்தில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

9-ம் வகுப்பு மாணவர்

இந்த மோசமான கோரோனா தொற்றுக்கு மத்தியில் மணிப்பூர் மாநிலம் இம்பாலைச் சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவர் பல்தீப் நிங்தோஜம், மொபைல் உருவாக்கி சாதனை படைத்துள்ளார். குறிப்பாக கொரானா தடுப்பு தொடர்பான வழிகாட்டி நெறிமுறைகளை அடிப்படையாக கொண்டு இந்த கேமை உருவாகி உள்ளார்.

ஒரே அறிவுரை: உடனடியாக நோக்கியா 5310-க்கு மாறுங்கள்: ஐபிஎஸ் அதிகாரி டுவீட்!ஒரே அறிவுரை: உடனடியாக நோக்கியா 5310-க்கு மாறுங்கள்: ஐபிஎஸ் அதிகாரி டுவீட்!

கொரோபாய் என்று

மேலும் இந்த கேமிற்கு கொரோபாய் என்று பெயரிடப்பட்டுள்ளது. அதாவது ஆண்ட்ராய்டு பயனர்கள் இந்த கேமை டவுன்லோடு செய்து பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி மாணவர் பல்தீப் தெரிவித்தது என்னவென்றால்,

 ஒரு கேமை உருவாக்க

கொரோனா தொடர்பாக ஒரு கேமை உருவாக்க என் மாமா எனக்கு யோசனை கூறினார், அதனால் நான் இதில் ஆர்வம் காட்டினேன். பின்பு இந்த கேமை உருவாக்கும் பணி கடந்த வாரம் நிறவடைந்தது. நேற்று முன்தினம் அறிமுகம் செய்தேன். இது எனக்கு புதிய முயற்சியாகும். எனவே இந்த கேம் தொடர்பான தகவல்களை முழுமையாக புரிந்துகொள்ள யூடியூப் மூலம் தேடினேன் என்றும், 3,4 வாரங்களுக்கு கட்டுரைகளைப் படித்தேன் என்றும் கூறினார்.

நான் ஒரு நெறிமுறை

மேலும் வருங்காலத்தில் நான் ஒரு நெறிமுறை ஹேக்கர் ஆக விரும்புகிறேன்,அதனுடன் செயற்கை நுண்ணறிவு மற்றும் பிற தொழில்நுட்பங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா

குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் மீண்டும் இரண்டாவது தாக்குதலை ஆரம்பித்ததுள்ளது போல் தோன்றுகிறது. ஏனெனில் இங்கிலாந்தில் சமீப நாட்களாக குறிப்பிட்ட சில பகுதிகளில் நோயின் பாதிப்பு தீவிரமாகி வருகிறது.

 ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான

தற்போது மற்றொரு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்சில், புதிததாக மற்றவர்களுக்கு பரவி வரும் கொரோனா வைரஸ் 65 வயதிற்கு மேற்பட்டவர்களை விட, 40 வயதிற்குட்பட்டவர்களிடமே நான்கு மடங்கு அதிகமாக பரவி வருவதாக சுகாதார அமைச்சர் ஆலிவர் வெரன் எச்சரித்துள்ளார்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Manipur student develops mobile game 'Coroboi' amid COVID-19 pandemic : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X