ஆன்லைன் கேம்: 10வயது சிறுமியை கொன்ற 11வயது சிறுவன்.!

|

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆன்லைன் கேமிங்ல் அதிக ஆர்வம் காட்டுகின்றனர், குறிப்பாக சிலர் உணவு கூட இல்லாமல் இரவு பகல் என இதில் மூழ்கியுள்ளனர். அதிலும் இந்த ஊரடங்கு காலங்களில் அனைத்து தரப்பினருக்கும் ஆன்லைன் விளையாட்டுக்களில் ஆர்வம் அதிகரித்துவிட்டது என்றுதான் கூறவேண்டும்.

ஆன்லைன் விளையாட்டால் பல

இந்த ஆன்லைன் விளையாட்டால் பல விபரீதங்களும் நடைபெற்று வருகிறது, அதேபோன்ற விபரீத சம்பவம் ஒன்றுதான் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டம் லசூடியா என்ற பகுதியை சேர்ந்த 11-வயது சிறுவனும் அதே பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமியும் ப்ரி பயர் என்ற ஆன்லைன்கேம் விளையாடி வந்துள்ளனர்.

11வயது சிறுவனை வீழ்த்தி

இந்த கேமில் அந்த 11வயது சிறுவனை வீழ்த்தி 10வயது சிறுமியே தொடர்ந்து வெற்றிபெற்று வந்துள்ளார் என்று கூறப்படுகிறது. பின்பு

ஒரே பகுதி மற்றும் அருகருகே வீடு என்பதால் சில நேரங்களில் இந்த சிறுவன் மற்றும் சிறுமி இடையே சிறுசிறு சண்டைகள் இருந்து வந்துள்ளன.

இந்தியாவில் ஹைபர்சோனிக் ராக்கெட் சோதனை வெற்றி: பிரதமர் மோடி, அமைச்சர் ராஜ்நாத்சிங் பாராட்டு!இந்தியாவில் ஹைபர்சோனிக் ராக்கெட் சோதனை வெற்றி: பிரதமர் மோடி, அமைச்சர் ராஜ்நாத்சிங் பாராட்டு!

10வயது சிறுவன் வளர்த்துவந்த

குறிப்பாக அந்த 10வயது சிறுவன் வளர்த்துவந்த செல்லப்பிராணியான வெள்ளைநிற எலி சமீபத்தில் உயிரழந்ததுள்ளது, செல்லப்பிராணியின் இந்த உயிரிழப்புக்கு 10வயது சிறுமிதான் காரணம் என்று கருதிய அந்த சிறுவன் அடிக்கடி சண்டையிட்டுள்ளான்.

ல்லப்பிராணியின் உயிரழப்புக்கும்

மேலும் செல்லப்பிராணியின் உயிரழப்புக்கும் தனக்கும் எந்த தொடர்பு இல்லை என அந்த சிறுமி கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே சில நாட்களாக மோதல் அதிகரித்து வந்துள்ளது என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று மதியம் 1மணியளவில் சிறுமி தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது அங்குவந்த அந்த 11வயது சிறுவன் ஆன்லைன் கேமில் தன்னை தொடர்ந்து தோற்கடித்துவந்த சிறுமியிடம் மிகுந்த கோபத்தில் சண்டையிட்டுள்ளான். மேலும் அருகில் கிடந்த கற்கலைக்கொண்டு சிறுமி மீது எறிந்துள்ளான்.

 இருவரும் ஒருவரை ஒருவர் மாற்றிமாற்றி

பின்பு இருவரும் ஒருவரை ஒருவர் மாற்றிமாற்றி கல்லால் எறிந்துள்ளனர். அப்போது சிறுவன் எறிந்த ஒரு கல் ஒன்று வேகமாக தலையில் பட்டதில் சிறுமி நிலை குலைந்து கீழே விழுந்துள்ளார். பின்பு சிறுமி தரையில் விழந்தபோதும் ஆத்திரமடங்காத 11வயது சிறுவன் அந்த 10வயது சிறுமியின் தலையில் பெரிய கற்களால் தொடர்ந்து அடித்துள்ளார். 11 வயது சிறுவனின் இந்த கொடூர தாக்குதலால் படுகாயமடைந்த அந்த 10 வயது சிறுமி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

உயிரிழந்த சிறுமியின் பெற்றோர்

பரிதபமாக உயிரிழந்த சிறுமியின் பெற்றோர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர், தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து

சென்ற போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டர். இந்த விசாரணையின்போது சிறுவனுக்கும், உயிரிழந்த சிறுமிக்கும் இடையே சிறுசிறு மோதல்கள் இருந்ததை கண்டுபிடித்தனர். மேலும்இ அங்கு பொறுத்தப்பட்டிருந்த சிசிடிடி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் பதிவான காட்சியில் சிறுவன் அப்பகுதியில் சுற்றித்திரிந்ததை கண்டுபிடித்தனர்.

போலீசார் மேற்கொண்ட

மேலும் சிறுவனிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் ஆன்லைன் கேமில் தன்னை தொடர்ந்து தோற்கடித்ததால் ஏற்பட்ட அத்திரத்தில் அந்த 10வயது சிறுமியை கல்லால் அடித்து கொலைசெய்ததாக அந்த சிறுவன் தெரிவித்தான். இதையடுத்து அந்த சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
MP horror: Minor boy kills 10-yr-old girl who beat him in online games: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X