சன்னி லியோன் பிறந்தநாள் ட்ரீட்- "ஐ ட்ரீம் ஆஃப் சன்னி" வெளியீடு: சன்னியோடு நேரடி கேம், என்எஃப்டி!

|

'ஐ ட்ரீம் ஆஃப் சன்னி' என்பது NFTகள், செயற்கை நுண்ணறிவு (ஏஐ), ரசிகர் வசனம், கேமிங், லக்கி டிரா, வின்னிங் காம்பினேஷன் உள்ளிட்ட பல பயன்பாடுகளை ஒருங்கிணைத்து இதுவரை கண்டிராத தயாரிப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகை சன்னி லியோன் பிறந்தநாள்

நடிகை சன்னி லியோன் பிறந்தநாள்

நடிகை சன்னி லியோன் தனது 41-வது பிறந்த நாளை கடந்த வெள்ளிக்கிழமை கொண்டாடினார். இந்த விழாவில் தனக்கும் தனது ரசிகர்களுக்கும் விருந்தளிக்கும் வகையிலான ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில் NFT, AI, ரசிகர் வசனம், கேமிங், லக்கி டிரா உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளை ஒருங்கிணைத்து வழங்குகிறது. இந்த தயாரிப்புக்கான தொழில்நுட்ப கூட்டாளராக ஆன்லைன் பிரபல தளமான ஹேஹே உடன் கைக்கோர்க்கப்பட்டிருக்கிறது. அதேபோல் சன்னி தனது பிறந்தநாளில், சன்சிட்டி மீடியா மற்றும் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு சொந்தமான "ஐ ட்ரீம் ஆஃப் சன்னி" என்ற ரசிகர் வசனத்தை வெளியிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ ட்ரீம் ஆஃப் சன்னி

ஐ ட்ரீம் ஆஃப் சன்னி

'ஐ ட்ரீம் ஆஃப் சன்னி' என்பதி என்எஃப்டி-கள், செயற்கை நுண்ணறிவு (ஏஐ), ரசிகர் வசனங்கள், கேமிங், லக்கி டிரா, வின்னிங் காம்பினேஷன் உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளை ஒருங்கிமைத்து இதுவரை பார்த்திராத ஒரு தயாரிப்பாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தனது ரசிகர்களுக்கு புதுமையான ஒன்றை வழங்க விரும்பி இந்த பயன்பாட்டை அறிமுகம் செய்வதாக சன்னி லியோன் தெரிவித்துள்ளார்.

சன்னி லியோன் தெரிவித்த கருத்து

இதுகுறித்து சன்னி லியோன் தெரிவித்த கருத்துகளை பார்க்கலாம், அதில், எனது பிறந்தநாளை தெரிவிக்கும் விதமாக தான் தனித்துவமான மற்றும் இதுவரை செய்யாத ஒன்றை தொடங்க விரும்பினேன் என தெரிவித்துள்ளார். மேலும், எனவே இது உதவியாக இருக்கும் என்ற உணர்ந்த காரணத்தால் யூடிலிட்டிஸ் மற்றும் கேமிங் மூலமான என்எஃப்டி உலகில் நுழைய முடிவு செய்தேன் எனவும் தனது ரசிகர்கள் தன்னுடனான தொடர்பை சிறப்பாக பராமரிக்க இது உதவும் எனவும் தெரிவித்துள்ளார். அதேசமயத்தில் இது பயனர்களுக்கு தனித்துவமான மற்றும் வேடிக்கையான விளையாட்டை வழங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

என்எஃப்டி கார்ட்கள் பிரதானம்

என்எஃப்டி கார்ட்கள் பிரதானம்

தனித்துவமான இந்த பயன்பாட்டு சலுகையின் ஒரு பகுதியாக, மே 13 முதல் "ஐ ட்ரீம் ஆஃப் சன்னி" இணையதளத்தில் என்எஃப்டி கார்ட்கள் கிடைக்கும். இதை வாங்குவது அவசியம். இதில் என்எஃப்டி வாங்குபவர்களுக்கு நடிகையின் தனிப்பட்ட டிஸ்கார்ட் சேவையகத்திற்கான அணுகல் வழங்கப்படுகிறது. என்எஃப்டி வாங்குவது என்பது இந்த இணையதள பயன்பாட்டுக்கு பிரதானமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த கேம் விளையாடுவதற்கு என வெள்ளி, தங்கம், பிளாட்டினம் மற்றும் ஜோக்கர் ஆகிய நான்கு வகையிலான என்எஃப்டி கார்ட் வகைகள் உள்ளன. இதன் ஒவ்வொரு கார்டும் போனஸ் அம்சங்களுடன் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ரசிகர் வசனத்தின் கருத்து

ரசிகர் வசனத்தின் கருத்து

இந்த பயன்பாடு குறித்து சன்னி லியோன் தெரிவித்த கருத்துகளை பார்க்கலாம். "ரசிகர் வசனத்தின் கருத்து என்பது என்னை மிகவும் கவர்கிறது. எனவே இதுதொடர்பான ஒரு உலகத்தை உருவாக்க நானும் எனது குழுவும் முடிவு செய்தோம். இங்கு மக்கள் என்னுடன் கேம் மூலமாக இணையலாம். எனது ரசிகர்கள் என்எஃப்டி கார்டுகளை பெற்று பயன்பாட்டில் பங்கேற்பார்கள் என்பதில் ஆவலுடன் காத்திருக்கிறேன். எனது தனிப்பட்ட டிஸ்கார்ட் சர்வரில் நடத்தப்படும் வாராந்திர கேம் பயன்பாட்டை எனது இன்ஸ்டாகிராம் பக்கம் மற்றும் பிற தளங்களில் பகிருவேன். இந்த அற்புதமான புதிய உலகை மிகவும் எதிர்பார்க்கிறேன். இது வெற்றியடைய வேண்டும் என தெரிவித்துள்ளார். ஐ ட்ரீம் ஆஃப் சன்னி கேமிங் உலகில் ஈடுபடுவதற்கு தகுதி பெற என்எஃப்டி கார்ட்கள் வாங்கு முதல் படியாகும்.

வேகமாக வளர்ந்து வரும் என்எஃப்டி தொழில்துறை

வேகமாக வளர்ந்து வரும் என்எஃப்டி தொழில்துறை

பயன்பாட்டு கூட்டாண்மை குறித்து Caleb Franklin நிறுவனர் மற்றும் சிஇஓ HeyHey Global, இதுகுறித்து கூறிய கருத்துகளை பார்க்கலாம். என்எஃப்டி தொழில்துறை வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த நிலையில் என்எஃப்டி மூலம் மேற்கொள்ளப்படும் இந்த பயன்பாட்டின் மூலம் பிரபலங்கள் மற்றும் ரசிகர்களுடனான புதிய வகை உரையாடல்களுக்கும் ரசிகர்களின் வசனங்களுமான ஒரு நுழைவு வாயிலாக இருக்கும். ஹேஹே உடனான இந்த பயன்பாடானது வெப்3 போன்ற புதிய யுக தொழில்நுட்பத்தின் மூலம் தனிப்பயனாக்கப்பட்ட அனுபவங்களை வழங்கும்.

Best Mobiles in India

English summary
DreamofSunny: Sunny Leone Birthday Treat- I Dream of Sunny Launches with NFTs, AI, Fan verse

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X