ஜியோவின் கிரிக்கெட் சீசன் பேக் ஆன ரூ.251, ஏர்டெல் அறிவித்துள்ள இலவச ஐபில் லைவ் ஸ்ட்ரீமிங் சலுகை மற்றும் பிஎஸ்என்ல் அறிவித்துள்ள ஐபில் கிரிக்கெட் ரூ.248/- திட்டம் ஆகியவைகளை தொடர்ந்து ஆக்ட் பைபர்நெட் நிறுவனமும் ஒரு ஐபிஎல் 2018 திட்டத்தை அறிவித்துள்ளது.

நிகழும் ஐபில் 2018 போட்டிகளை எந்த தடங்கலும் இல்லாமல், அதன் பயனர்கள் ஸ்ட்ரீமிங் செய்யும் நோக்கத்தின் கீழ், புதிய ரூ.299 ஸ்போர்ட்ஸ்-ஒன்லி பேக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் பயனர்களால் ஹாட்ஸ்டார் வழியாக ஐபில் 2018 கிரிக்கெட் போட்டிகளை லைவ் ஆக காண முடியும்.
மே 31 வரை மட்டுமே ரீசார்ஜ் செய்ய கிடைக்கும்.!
மொத்தம் 250ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும் இந்த ஆக்ட் பைபர்நெட் ரூ.299/- ஆனது 2018 ஆம் ஆண்டு மே 31 வரை மட்டுமே ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டம், இண்டர்நெட் சேவை வழங்குநரான ஆக்ட் பைபர்நெட் நிறுவனத்திடம் இருந்து கிடைக்குமொரு நல்ல சைகை ஆகும். இது நிச்சயமாக ACT Fibernet சந்தாதாரர்களை மகிழ்ச்சியாக்கி சேவையில் நீடிக்க வைக்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.
ஏர்டெல் டிவி, ஜியோடிவி.!
பார்தி ஏர்டெல் நிறுவனமும் இதேபோன்றதொரு சலுகையை வழங்குகிறது. நீங்கள் ஒரு ஏர்டெல் வாடிக்கையாளராக இருந்தால், ஐபில் லைவ் போட்டிகளை ஏர்டெல் டிவி பயன்பாட்டின் வழியாக பார்க்க முடியும். அதே போல ஜியோ பயனர்கள் ஜியோடிவி ஆப் வழியாகவும் ஐபில் போட்டிகளை லைவ் ஸ்ட்ரீமிங் செய்யலாம்.
விலை ரூ.1,250/- ஆகும்.!
வழக்கமாக, ஒரு வாடிக்கையாளர் கூடுதலாக 250ஜிபி டேட்டா வாங்க விரும்பினால், அது ரூ.1,500/-க்கும் அதிகமாக செலவாகும். உதாரணமாக, 90 நாட்கள் செல்லுப்படியாகும் 200ஜிபி கூடுதல் டேட்டா வழங்கும் திட்டத்தின் விலை ரூ.1,250/- ஆகும். மற்றும் 500ஜிபி கூடுதல் டேட்டா வழங்கும் திட்டத்தின் விலை ரூ 2,500/- ஆகும். ஆனால் இந்த ஐபில் 2018 சலுகையின் கீழ் 250ஜிபி அளவிலான டேட்டா வெறும் ரூ.299/-க்கு வாங்க கிடைக்கிறது.
ஆக்ட் டிவி ப்ளஸ்.!
இதற்கிடையில், ACTTV+ பாக்ஸ் ஆனது அடுத்த இரண்டு மாதங்களில் அறிமுகப்படுத்தலாம் என்றும், அதன் சோதனைகளை வருகிற மே இறுதிக்குள் நிறைவு செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட தகுதி வாய்ந்த ஆக்ட் வாடிக்கையாளர்களை வைத்து பரிசோதிக்கப்படும் ஆக்ட் டிவி ப்ளஸ் சேவையானது, வாடிக்கையாளர்களின் கருத்துக்களை சேகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Gizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.