Home
News

சென்னை சூப்பர் கிங்ஸ் உடன் களமிறங்கும் ஆக்ட் பைபர் நெட்.! தோனிய நேர்ல கூட பார்க்கலாம்.!

ஐபிஎல் அணிகளில் சிறந்த அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் ஆக்ட் பைபர்நெட் நிறுவனம் கைகோர்த்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை அறிவித்துள்ளது.

நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டியைத் தொடர்ந்து, ஆக்ட் பைபர் நெட் நிறுவனம் புதிய அறிவிப்பு ஒன்றை ஐபிஎல் ரசிகர்களுக்காக வெளியிட்டுள்ளது. ஐபிஎல் அணிகளில் சிறந்த அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் ஆக்ட் பைபர் நெட் நிறுவனம் கைகோர்த்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை அறிவித்துள்ளது.

அதிவேகமாக வைஃபை சேவை

அதிவேகமாக வைஃபை சேவை

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் ஆக்ட் பைபர் நெட் நிறுவனங்களின் கூட்டாண்மையின் ஒரு பகுதியாக, ஆக்ட் பைபர் நெட் சென்னையில் உள்ள எம்.ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறும் அனைத்து சி.எஸ்.கே போட்டிகளின் போது நம்பமுடியாத அதிவேகமாக வைஃபை சேவையை வழங்கும் என்று அறிவித்துள்ளது.

ஆக்ட் பைபர் நெ மற்றும் சி.எஸ்.கே ரசிகர்களுக்கு உற்சாகம்

ஆக்ட் பைபர் நெ மற்றும் சி.எஸ்.கே ரசிகர்களுக்கு உற்சாகம்

மேலும், ஸ்டேடியம் அனுபவத்தை மேம்படுத்த, ஆக்ட் பைபர் நெட் மற்றும் சி.எஸ்.கே ரசிகர்களுக்கு உற்சாகமான பல போட்டிகள் மற்றும் பல புதிய அனுபவத்தை வழங்குவதற்குத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிர்ஷ்ட வெற்றியாளர்

அதிர்ஷ்ட வெற்றியாளர்

போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிர்ஷ்ட வெற்றியாளர்களுக்கு இலவச டிக்கெட் பெறுவதற்கான வாய்ப்பு, சி.எஸ்.கே வீரர்கள் கையொப்பமிடப்பட்ட அன்பளிப்புகள் மற்றும் அவர்களுக்குப் பிடித்த சி.எஸ்.கே கிரிக்கெட் வீரர்களுடன் சந்திக்கும் வாய்ப்பு என பல பரிசுகளை வழங்கவுள்ளதாகவும் ஆக்ட் பைபர் நெட் சி.ஓ.ஓ சந்தீப் குப்தா தெரிவித்துள்ளார்.

'என்டர்டைன்மெண்ட்' திட்டம்

'என்டர்டைன்மெண்ட்' திட்டம்

இதேபோல் நெட்ஃபிக்ஸ் நிறுவனத்துடனும் ஆக்ட் நிறுவனம் கைகோர்த்துள்ளது. இந்த பங்கின் ஒரு பகுதியாக, ஆக்ட் இன் புதிய மற்றும் பழைய வாடிக்கையாளர்கள் புதிதாகத் தொடங்கப்பட்ட 6 மாத மற்றும் 12 மாத 'என்டர்டைன்மெண்ட்' திட்டத்தை தேர்ந்தெடுக்கப்பட்டால், அவர்களது மாதாந்திர நெட்ஃபிக்ஸ் சந்தாவிற்கு ஆக்ட் பில் மூலம் பணம் செலுத்தும் புதிய சேவையையும் அறிமுகம் செய்துள்ளது.

மார்ச் 6 முதல்

மார்ச் 6 முதல்

இந்த புதிய சேவை மார்ச் 6 ஆம் தேதி முதல் டெல்லி, சென்னை, பெங்களூரு மாற்று ஹைதராபாத்தில் துவங்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
ACT Fibernet extends partnership with IPL team Chennai Super Kings : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X