ஃப்ரீ.. ஃப்ரீ..! ஆக்ட் பைபர்நெட் யூஸ் பண்றீங்களா.? அடித்தது அதிர்ஷடம்.!

|

முதலில் முகேஷ் அம்பானி க்கு ஒரு பெரிய நன்றி - "எல்லாம் பயமயம்" என்று தெனாலி திரைப்படத்தில் நடிகர் கமலஹாசன் சொல்வது போல, தற்கால இந்திய டெலிகாம் துறைக்குள் எது நடந்தாலும் அதற்கு நாம் சொல்ல வேண்டிய ஒரே வாசகம் - "எல்லாம் ஜியோமயம்" என்பதே.!

ஃப்ரீ.. ஃப்ரீ..! ஆக்ட் பைபர்நெட் யூஸ் பண்றீங்களா.? அடித்தது அதிர்ஷடம்!

ஆக்ட் பைபர்நெட் நிறுவனமானது இன்று தனது பிராட்பேண்ட் சந்தாதாரர்களுக்கு முழுக்க முழுக்க இலவசமாக ஆறுமாத கால சந்தா ஒன்றை அறிவித்துள்ளது. இந்த திட்டம் கிடைக்கபெறும் ஆறு மாதங்களுக்கும், கூடுதலாக எந்தவொரு கட்டணமும் வசூலிக்கப்ப்பட மாட்டாது என்பது கூடுதல் சிறப்பம்சம்.

அது என்ன சலுகை.? அதை அணுகுவது எப்படி.? என்னென்ன நன்மைகள் கிடைக்கும்.? மற்றும் யாருக்கெல்லாம் கிடைக்கும்.? என்பதை விரிவாக காண்போம்.

ஃப்ரீ டூ ஏர் சேனல்கள்

ஃப்ரீ டூ ஏர் சேனல்கள்

'ஃப்ரீ டூ ஏர் சேனல்கள்' என்று அழைக்கப்படும் இந்த சேவையை, நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ பயன்பாடான ஆக்ட் பைபர் நெட் வழியாக அணுகப்படலாம். இந்த சேவையை வழங்க, ஆக்ட் பைபர்நெட் நிறுவனமானது யப் (Yupp) டிவி உடன் கைகோர்த்ததுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இலவச சந்தா

இலவச சந்தா

வெளியான அறிக்கையின்படி, ஆக்ட் பைபர்நெட் சேவைகள் வழங்கப்படும் 12 நகரங்களிலும் உள்ள நிறுவனத்தின் அனைத்து வாடிக்கையாளர்களும் இந்த இலவச சந்தா கிடைக்கும். இதன்கீழ் மொத்தம் 13 வெவ்வேறு மொழிகளில் 140க்கும் மேற்பட்ட லைவ் டிவி சேனல்களை அனுபவிக்க முடியும்.

ஆண்ட்ராய்டு சாதனங்களில் மட்டுமே

ஆண்ட்ராய்டு சாதனங்களில் மட்டுமே

மேற்குறிப்பிட்டபடி இந்த சமீபத்திய வாய்ப்பிற்காக, வாடிக்கையாளர்களிடம் இருந்து எந்தவிதமான கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படாது. முதலில் இந்த சேவை பீட்டா பதிப்பில் மட்டுமே கிடைத்தது, இப்போது ஆண்ட்ராய்டு சாதனங்களில் மட்டுமே கிடைக்கிறது.

விரைவில் ஐஓஎஸ்

விரைவில் ஐஓஎஸ்

வெளியான ஊடக அறிக்கையில், ஆக்ட் பைபர்நெட் நிறுவனம் கூறியது போல், "இது விரைவில் ஐஓஎஸ்" பதிப்பின்கீழும் தொடங்கப்படும்" என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண்

மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண்

ஆறு மாதங்களுக்கு இலவசமாக கிடைக்கும் இந்த வாய்ப்பை அணுக எந்தவொரு வாடிக்கையாளரும் நிறுவனத்தின் பயன்பாட்டினுள் நுழைந்து தங்களின் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண் கொண்டு உள்நுழைய வேண்டும்.

பிரீமியம் சேனல்கள்

பிரீமியம் சேனல்கள்

அதை நிகழ்த்துவதின் மூலம் பிரீமியம் சேனல்கள், ஒரிஜினல் டிவி தொடர், திரைப்படங்கள், வலைத் தொடர் மற்றும் பலவற்றை வாடிக்கையாளர்கள் பார்வையிட முடியும். இந்த இலவச சந்தா ம் முடிந்த பின்னரும் கூட இதை நீங்கள் தொடர விரும்பினால் மாதம் ரூ.99/- செலுத்தி அனுபவிக்கலாம்.

How to find out where you can get your Aadhaar card (TAMIL GIZBOT)
சிறந்த பொழுதுபோக்கு உள்ளடக்கம்

சிறந்த பொழுதுபோக்கு உள்ளடக்கம்

உடன், ஆக்ட் பைபர்நெட் ஆனது ஹூக் டிவி, பாஸ்ட்பிலிம்ஸ், ஆல்ட்பாலாஜி மற்றும் ஹங்காமா டிவி ஆகியவற்றின் கூட்டணி கொண்டு தனது வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த பொழுதுபோக்கு உள்ளடக்கத்தை வழங்கி வருகிறது. ஆனால் இவைகள் இலவச சந்தா அல்ல, கட்டண சந்தா என்பது குறிப்பிடத் தக்கது.

Best Mobiles in India

English summary
ACT Fibernet Introduces Free to Air Channel Live TV Service for Broadband Users. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X