1000 ஜிபி இலவச டேட்டாவுடன் 20% எக்ஸ்டரா டேட்டா வழங்கும் ACT ஃபைபர்நெட்.. கேஷ்பாக் கூட இருக்கு..
ACT ஃபைபர்நெட் இந்த நேரத்தில் நம்ப முடியாத சலுகையைத் தனது குறிப்பிட்ட சில வட்டங்களில் இருக்கும் பயறுகளுக்காக அறிவித்துள்ளது. அட்ரியா கன்வர்ஜென்ஸ் டெக்னாலஜிஸ் அல்லது ACT ஃபைபர்நெட் என்ற நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் அதன் பிராட்பேண்ட் திட்டங்களுடன் வரம்பற்ற தரவை வழங்கத் தொடங்கியது. பின்னர், இது பல்வேறு நகரங்களில் விரிவுபடுத்தப்பட்டுக் கூடுதல் மாத சேவையை அறிமுகப்படுத்தியது.

ACT ஃபைபர்நெட் பிராட்பேண்ட் திட்டம்
ACT ஃபைபர்நெட் டெல்லியில் வசிப்பவர்களுக்கு மட்டும் கூடுதலாக, அதன் கைவசம் மேலும் இரண்டு சலுகைகள் வைத்து இருப்பதாகத் தெரிகிறது. தலைநகரில், ACT ஃபைபர்நெட் தற்போது ரூ .799, ரூ .1,049 மற்றும் ரூ .1,349 விலையில் மூன்று பிராட்பேண்ட் திட்டங்களை 300 எம்.பி.பி.எஸ் வரை வேகத்தில் வழங்குகிறது. ஆக்ட் ஃபைபர்நெட்டில் இருந்து 300 எம்.பி.பி.எஸ் வேகத்துடன் கிடைக்கும் மலிவான திட்டங்களில் ஒன்றாக ரூ .1,349 திட்டம் செயல்படுகிறது.

20% கூடுதல் டேட்டா, 1000 ஜிபி வரை இலவச டேட்டா
மலிவு திட்டங்களுக்கு மேல், இணையச் சேவை வழங்குநர் (ஐஎஸ்பி) வருடாந்திர திட்டங்களைத் தேர்வு செய்யும் பயனர்களுக்கு 20% கூடுதல் தரவையும், 1000 ஜிபி வரை இலவச தரவையும் சந்தா காலத்திற்கு அனுப்பவிக்கும் விதத்தில் நம்பமுடியாத சலுகையை வழங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த சலுகைகளைப் பற்றிய முழு விபரங்களை விரிவாகப் பார்க்கலாம்.

ACT ஃபைபர்நெட் ரூ .799 திட்டம்
ரூ .799 அல்லது ஆக்ட் சில்வர் ப்ரோமோ பிராட்பேண்ட் திட்டத்தைத் தேர்வு செய்யும் வாடிக்கையாளருக்கு மாதம் ரூ. 799 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனை ஒரு வாடிக்கையாளர் ஆறு மாதங்களுக்கு ரூ .4,794 விலையில் இத்திட்டத்தைத் தேர்வுசெய்தால், ஆறு மாதங்களுக்கு 1000 ஜிபி கூடுதல் டேட்டாவை நிறுவனம் வழங்குவதோடு, இன்ஸ்டாலேஷன் கட்டணங்களை ACT தள்ளுபடி செய்கிறது. இந்த திட்டம் வழக்கமாக ஒரு மாதத்திற்கு 1000 ஜிபி அல்லது 1 டிபி FUP டேட்டா வரம்புடன் வருகிறது.

ACT ஃபைபர்நெட் ரூ .1049 திட்டம்
ரூ .1049 திட்டம் அல்லது ஆக்ட் பிளாட்டினம் விளம்பரத் திட்டத்தின் கீழ் மாதத்திற்கு 2000 ஜிபி அல்லது 2 டிபி FUP வரம்புடன் டேட்டா நன்மை கிடைக்கிறது. ஆறு மாத திட்டமாக ரூ .6,294 விலையில் இத்திட்டத்தைத் தேர்வு செய்யும் பொழுது ACT ஃபைபர்நெட் நிறுவல் கட்டணங்கள், 1000 ஜிபி கூடுதல் டேட்டா மற்றும் நெட்ஃபிக்ஸ் சந்தாவில் ரூ. 100 கேஷ்பேக் ஆகியவற்றை ஒவ்வொரு மாதமும் வழங்குகிறது.

ACT ஃபைபர்நெட் ரூ .1349 திட்டம்
ரூ .1349 அல்லது ACT டயமண்ட் திட்டம் உள்ளது, இது பொதுவாக 300 Mbps வேகம் மற்றும் 3TB FUP டேட்டா வரம்புடன் வருகிறது. இந்த பிராட்பேண்ட் திட்டத்திற்கு, ACT ஃபைபர்நெட்டில் இரண்டு அரை ஆண்டு தொகுப்புகள் உள்ளன. முதல் தொகுப்பின் கீழ், பயனர்கள் ஆறு மாத கட்டணங்களை ரூ. 8094 செலுத்த வேண்டும், அதற்குப் பதிலாக, அவர்களுக்கு ஒரு மாத இலவச சேவை (மொத்தம் ஏழு மாதங்கள்), இலவச 1000 ஜிபி டேட்டா ஆறு மாதங்களுக்குச் செல்லுபடியாகும் மற்றும் ACT ஃபைபர்நெட் வழியாக நெட்ஃபிக்ஸ் சந்தாவில் ரூ. 350 கேஷ்பேக் கிடைக்கிறது.

12 மாத திட்ட நன்மை
இரண்டாவது தொகுப்பின் கீழ், வருடாந்திர அல்லது 12 மாத திட்டங்களுடன் மேல் கூறப்பட்ட மூன்று திட்டங்களில் ஏதேனும் ஒரு திட்டத்தைத் தேர்வு செய்யும் பொழுது, ACT ஃபைபர்நெட் ஒவ்வொரு மாதமும் 20% கூடுதல் தரவை முழு சந்தா காலத்திற்கும் வழங்குகிறது. இத்துடன் நிலையான 1000 ஜிபி இலவச தரவுகளைச் செல்லுபடியாகும் காலம் வரை வழங்குகிறது. பிற நன்மைகள் அப்படியே பயனர்களுக்கு மாதம் தவறாமல் கிடைக்கிறது, மேலே குறிப்பிட்டுள்ள விலைகள் வரிகளுக்கு அப்பாற்பட்டவை என்பதை நினைவில் கொள்க.


Click it and Unblock the Notifications