Home
News

குறைந்த விலையில் மாதம் 5000ஜிபி டேட்டா: ஆக்ட் ஃபைபர்நெட் இருந்தா மட்டும் போதும்!

ஆக்ட் ஃபைபர்நெட் பயனர்களுக்கு அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது. அனைத்து திட்டங்களிலும் அதிவேக இணையத்தில் டேட்டா வரம்பின் வேகம் அதிகமாக கிடைக்கிறது. திட்டங்களில் விலை மற்றும் விவரங்கள் குறித்து பார்க்கலாம்.

ஆக்ட் பைபர்நெட் பல்வேறு புதிய திட்டங்கள்

ஆக்ட் பைபர்நெட் பல்வேறு புதிய திட்டங்கள்

ஆக்ட் பைபர்நெட் பல்வேறு புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளது, குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் அனைத்து திட்டங்களும் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. இந்நிறுவனம் அதன் தற்போதைய மற்றும் புதிய பயனர்களுக்கு திருத்தப்பட்ட திட்டங்களை அறிவித்துள்ளது.

ஆன்லைன் வகுப்புகள்

ஆன்லைன் வகுப்புகள்

இந்தியாவின் 3-வது பெரிய பிராட்பேண்ட் நிறுவனமாக திகழும் ஆக்ட் ஃபைபர்நெட் மொத்தம் 19 நகரங்களில் அதன் சேவையை வழங்கி வருகிறது. தற்போது இந்த சேவை அதிகரிப்பதற்கான நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா ஊரடங்கில் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் நிலை ஏற்பட்டது, அதேபோல் வீட்டில் இருந்த வேலை பார்ப்பவர்கள் எண்ணிக்கையும், மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இணைய வேக வரம்பு திருத்தம்

இணைய வேக வரம்பு திருத்தம்

சமீபத்தில் பெங்களூரு மற்றும் டெல்லியில் திட்டங்களை மாற்றம் செய்து அறிவித்தது. டெல்லி, பெங்களூரு பகுதியில் இணைய வேக வரம்பு திருத்தம் செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது சென்னையில் இணைய வரம்பில் திருத்தம் மேற்கொள்ள தொடங்கியுள்ளது.

அதிகளவிலான டேட்டா

அதிகளவிலான டேட்டா

ஆக்ட் பைபர் நெட் திட்டம் அதிகளவிலான டேட்டாவை குறைந்த விலையில் அறிவிக்கிறது. திட்டங்களின் விரிவாக்கும் குறித்து பார்க்கையில், ஆக்ட் பேசிக் திட்டத்தில் தொடங்கி ஆறு ஃபைபர்நெட் திட்டங்கள் கிடைத்தன. இந்த திட்டத்தில் கிடைக்கும் டேட்டா சலுகைகள் குறித்து பார்க்கலாம்.

750 ஜிபி டேட்டா 50 எம்பிபிஎஸ் வேகம்

750 ஜிபி டேட்டா 50 எம்பிபிஎஸ் வேகம்

ஆக்ட் பேசிக் திட்டத்தை தேர்வு செய்யும்போது ரூ.820 விலையில் 750 ஜிபி டேட்டாவை 50 எம்பிபிஎஸ் என்ற வேகத்தில் வழங்குகிறது. அதேபோல் ரூ.1020 என்ற விலையில் 100 எம்பிபிஎஸ் வேகத்தோடு 1500 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. முன்னதாக இந்த திட்டத்தில் 500 ஜிபி டேட்டாவை மட்டுமே வழங்கியது.

2500 ஜிபி டேட்டா 150 எம்பிபிஎஸ் வேகம்

2500 ஜிபி டேட்டா 150 எம்பிபிஎஸ் வேகம்

ஆக்ட் பிளாஸ்ட் ப்ரோமா திட்டமானது முன்னதாக 1000 ஜிபி டேட்டாவை மட்டுமே வழங்கியது. தற்போது இந்த திட்டத்தில் 2500 ஜிபி டேட்டாவை 150 எம்பிபிஎஸ் வேகத்தில் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் விலை ரூ.1075 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

3000 ஜிபி டேட்டா 250 எம்பிபிஎஸ் வேகம்

3000 ஜிபி டேட்டா 250 எம்பிபிஎஸ் வேகம்

ஆக்ட் ஸ்டார்ம் திட்டத்தில் தற்போது 3000 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இணைய வேகம் 200 எம்பிபிஎஸ் ஆகும். இதன்விலை ரூ.1125 ஆகும். ரூ.1325-ல் கிடைக்கும் ஆக்ட் லைட்னிங் திட்டத்தை பொருத்தவரையில் 3000 ஜிபி டேட்டா 250 எம்பிபிஎஸ் வேகத்தில் வழங்கப்படுகிறது.

350 எம்பிபிஎஸ் வேகத்தில் இணைய சேவை

350 எம்பிபிஎஸ் வேகத்தில் இணைய சேவை

ஆக்ட் இன்கிரிடபிள் திட்டத்தில் 5000 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. 350 எம்பிபிஎஸ் வேகத்தில் இணைய சேவை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் விலை ரூ.1999-க்கு கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Act Fibernet Upgraded its Plans With Extra Data For Same Price: Here the Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X