ஸ்மார்ட்போன் வரலாறு : ஒரு பார்வை..!

By Meganathan
|

கணினி மூலம் செய்யக்கூடிய பணிகளை மேற்கொள்ள உதவும், அதே சமயம் கையில் அடக்கமாக இருக்கும் சிறிய கருவியை தான் ஸ்மார்ட்போன் என்கின்றனர் தொழில்நுட்ப வல்லுநர்கள்.

டிரைவர்லெஸ் கார் : கூகுள் நம்மை ஏமாற்றுகின்றதா..?

அந்த வகையில் இன்றைய ஸ்மார்ட்போன்களில் ஆக்டாகோர் சிப்செட், 4ஜிபி ரேம் மற்றும் டிஎஸ்எல்ஆர் தரத்தில் புகைப்படங்களை வழங்கும் கேமரா போன்றவைகளை இன்றைய ஸ்மார்ட்போன்கள் வழங்குகின்றன.

டிரான்ஸ்பேரன்ட் டிஸ்ப்ளே ஸ்மார்ட்போன் இனி சாத்தியமே..!?

அப்படியாக உலகின் முதல் ஸ்மார்ட்போன் வெளியானது 1994 ஆம் ஆண்டு ஆகஸ்டு 16 ஆம் தேதி ஆகும், முன்னதாக இதே கருவி 1992 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎம் சைமன் பெர்சனல் கம்யூனிகேட்டர்

ஐபிஎம் சைமன் பெர்சனல் கம்யூனிகேட்டர்

உலகின் முதல் ஸ்மார்ட்போன் சரியாக 21 ஆண்டுகளுக்கு முன் வெளியானது. ஐபிஎம் சைமன் பெர்சனல் கம்யூனிகேட்டர் என்ற கருவியே உலகின் முதல் ஸ்மார்ட்போனாக கருதப்படுகின்றது. மின்னஞ்சல்களை அனுப்புவது, பெறுவது, மோனோக்ரோம் டச் ஸ்கிரீன் போன்ற அம்சங்கள் இந்த கருவியில் இருந்தது.

நோக்கியா 9000 கம்யூனிகேட்டர்

நோக்கியா 9000 கம்யூனிகேட்டர்

1996 ஆம் ஆண்டு நோக்கியா நிறுவனம் ஸ்மார்ட்போன் சந்தையில் கால் பதித்தது. தனது முதல் கருவியாக நோக்கியா 9000 கம்யூனிகேட்டர் என்ற கருவியானது 5 இன்ச் தட்டையாகவும் 397 கிராம் எடையும் கொண்டிருந்தது.

எரிக்ஸன் ஜி8 88 கான்செப்ட்

எரிக்ஸன் ஜி8 88 கான்செப்ட்

பார்க்க 9000 கம்யூனிகேட்டர் போன்ற இருந்த இந்த கருவியில் டச் ஸ்கிரீன் மற்றும் ஸ்டைலஸ் வழங்கப்பட்டிருந்தது.

ப்ளாக்பெரி 850

ப்ளாக்பெரி 850

1999 ஆம் ஆண்டு ரிசர்ச் இன் மோஷன் எனும் நிறுவனம் தனது முதல் கருவியாக ப்ளாக்பெரி 850 வெளியிட்டது. இந்த கருவி மின்னஞ்சல் மற்றும் கீபோர்டுகளில் அதிக கவனம் செலுத்தப்பட்டிருந்தது.

பாக்கெட் பிசி 2000

பாக்கெட் பிசி 2000

முதன் முதலாக வெளியான விண்டோஸ் போன் தான் பாக்கெட் பிசி 2000 என அழைக்கப்பட்டது.

நோக்கியா என்95

நோக்கியா என்95

நோக்கியா நிறுவனத்தின் என் சீரிஸ் வகையில் முதல் ஸ்மார்ட்போன் தான் நோக்கியா என்95, நோக்கியா நிறுவனத்தின் சிம்பயான் ஓஎஸ் கொண்டு இந்த கருவி இயங்கியது.

சோனி எரிக்ஸன் பி990ஐ

சோனி எரிக்ஸன் பி990ஐ

சிம்பயான் இயங்குதளம் கொண்டு பிரபலமாக இருந்த முதல் வேற்ற நிறுவன கருவி என்ற பெருமை சோனி பெற்றது.

டேன்ஜர் ஹிப்டாப்

டேன்ஜர் ஹிப்டாப்

மைக்ரோசாப்ட் தலைமையில் டேன்ஜர் கருவி வெளியானது. இதே கருவி பல நாடுகளில் அமோக வெற்றி பெற்றது.

ஆப்பிள்

ஆப்பிள்

தற்சமயம் இருப்பதை போன்ற ஸ்மார்ட்போன்களை முதன் முதலில் வெளியிட்ட பெருமையும் ஆப்பிள் நிறுவனத்தையே சேரும்.

கூகுள்

கூகுள்

ஆப்பிள் நிறுவனத்துடன் போட்டி போடும் நோக்கில் கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தினை 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிட்டது. இந்த இயங்குதளம் கொண்டு வெளியான முதல் கருவி எச்டிசி ஜி1. இந்த கருவி ஆண்ட்ராய்டு டோநட் அதாவது முதல் வெர்ஷனினை கொண்டிருந்தது.

Best Mobiles in India

Read more about:
English summary
Check out here the Evolution of Smartphone in Pictures. This is interesting and you will like this.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X