Home
Mobile

பின்றானே இவன்.. 189 கிராமில் 7000mAh பேட்டரி.. 80W சார்ஜிங்.. 50MP கேமரா.. புது OPPO போன்.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் ஓப்போ எப்33 5ஜி (OPPO F33 5G) ஸ்மார்ட்போன் வெளியாகி இருக்கிறது. லைட் வெயிட்டில் 7000mAh பேட்டரி கொடுத்து உள்ளது. அண்டர்வாட்டர் போட்டோகிராபி சப்போர்ட் கொண்ட டூயல் கேமரா கிடைக்கிறது. மிலிட்டரி கிரேடு ஷாக், டிராப் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. இந்த ஓப்போ எப்33 5ஜி ஸ்மார்ட்போனின் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

ஓப்போ எப்33 5ஜி மற்றும் ஓப்போ எப்33 ப்ரோ 5ஜி ஆகிய மாடல்கள் வெளியாகி இருக்கின்றன. இதில் மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டைவிட கொஞ்சம் கம்மியான விலைக்கு வெளியாகி இருக்கும் ஓப்போ எப்33 5ஜி ஸ்மார்ட்போன் ஒட்டுமொத்த கவனத்தையும் பெற்றுள்ளது. டிஸ்பிளே தொடங்கி பேட்டரி வரையில் பீச்சர்களில் பட்டையை கிளப்பி இருக்கிறது.

பின்றானே இவன்.. 189 கிராமில் 7000mAh பேட்டரி.. 80W சார்ஜிங்.. மாடல்?

ஓப்போ எப்33 5ஜி அம்சங்கள் (OPPO F33 5G Specifications): 6.7 இன்ச் (2372 x 1080 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே, ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. 397 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் 600 நிட்ஸ் நார்மல் பிரைட்னஸ் கிடைக்கிறது. 1400 நிட்ஸ் எச்பிஎம் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டு உள்ளது.

ஓப்போ மாடல்களுக்கு வழக்கமாக கிடைக்கும் ஏஜிசி டிடி-ஸ்டார் டிபிளஸ் (AGC DT-STAR D+) புரொடெக்சன் கிடைக்கிறது. 50 எம்பி வைடு ஆங்கிள் மெயின் கேமரா + 2 எம்பி மோனோகுரோம் கேமரா கிடைக்கிறது. மெயின் கேமராவுக்கு ஆட்டோ போகஸ் வருகிறது. 16 எம்பி செல்பீ ஷூட்டர் கொடுக்கப்பட்டு உள்ளது. 10X டிஜிட்டல் ஜூமிங், அண்டர் வாட்டர் கேமரா ஷூட்டிங் கொடுக்கிறது.

பின்றானே இவன்.. 189 கிராமில் 7000mAh பேட்டரி.. 80W சார்ஜிங்.. மாடல்?

ஆகவே, IP66 ரேட்டிங் + IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொண்ட மாடலாக இந்த ஓப்போ எப்33 5ஜி ஸ்மார்ட்போன் இருக்கிறது. 6என்எம் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6460 மேக்ஸ் (6nm Octa Core MediaTek Dimensity 6360 MAX) சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) பேஸ்டு கலர்ஓஎஸ் 16.0 (ColorOS 16.0) கொண்டுள்ளது.

6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் வெளியாகி இருக்கின்றன. 80W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 7000mAh பேட்டரி கிடைக்கிறது. வெறும் 189 கிராம் எடை மட்டுமே கிடைப்பதால், லைட் வெயிட் மாடலாகவும் இந்த ஓப்போ எப்33 5ஜி ஸ்மார்ட்போன் இருக்கிறது.

10W ரிவர்ஸ் சார்ஜிங் கிடைக்கிறது. மிலிட்டரி கிரேடு டிராப் மற்றும் ஷாக் ரெசிஸ்டன்ஸ் கொடுத்து உள்ளது. இன்-டிஸ்பிளே ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Optical Fingerprint Sensor), ஆம்பியன்ட் லைட் சென்சார் (Ambient Light Sensor) கிடைக்கிறது. பேர்ல் ஒயிட் (Pearl White) மற்றும் ஃபாரஸ்ட் கிரீன் (Forest Green) ஆகிய கலர்களில் வெளியாகி இருக்கிறது.

ஓப்போ எப்33 5ஜி விலை (OPPO F33 5G Price): 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.31,999ஆக இருக்கிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.34,999ஆக இருக்கிறது. மேலும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட டாப்-எண்ட் வேரியண்ட்டின் விலை ரூ.37,999ஆக இருக்கிறது. ப்ரீ-ஆர்டருக்கு மட்டும் வந்துள்ளது.

அமேசான், பிளிப்கார்ட் மற்றும் ஓப்போ இந்தியா ஆன்லைன் ஸ்டோரில் ப்ரீ-ஆர்டர் செய்து கொள்ளலாம். 10 சதவீத உடனடி கேஷ்பேக் மற்றும் 12 மாதங்களுக்கான ஜீரோ டவுன் பேமெண்ட் ஆகியவை அறிமுக சலுகைகளாக கொடுக்கப்பட்டு உள்ளன. மேலும், 10 சதவீத எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் 180 நாட்களுக்கு ஒன்-டைம் ஸ்கிரீன் ரீபிளேஸ்மெண்ட் ஆஃபரும் கொடுக்கப்பட்டு உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OPPO F33 5G With 6GB RAM 7000mAh Battery 50MP Camera Launched in India Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X