Home
Gadgets

ஏப்.30 தேதி குறிச்சாச்சு.. 13380mAh பேட்டரி.. 80W சார்ஜிங்.. 12GB ரேம்.. புது OnePlus பேட்.. எந்த மாடல்?

ஒன்பிளஸ் பேட் 4 (OnePlus Pad 4) மாடலின் இந்திய வெளியீட்டு தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக, விற்பனை விவரங்கள் மட்டுமல்லாமல், டிஸ்பிளே, பேட்டரி, சிப்செட் உள்ளிட்ட முக்கிய பீச்சர்களும் உறுதி செய்யப்பட்டு உள்ளன. ஸ்டைலோ மற்றும் கீபோர்ட் ஆகியவற்றுடன் வெளியாக இருக்கிறது. இந்த ஒன்பிளஸ் பேட் 4 மாடலின் முழு விவரங்களை இப்போது பார்க்கலாம்.

இந்திய மார்கெட்டில் ஒன்பிளஸ் பேட் 3 மாடலுக்கு பிறகு அடுத்த டேப்லெட் மாடலாக இந்த ஒன்பிளஸ் பேட் 4 வெளியாக இருக்கிறது. வருகிற ஏப்ரல் 30ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த டேப்லெட்டுடன் ஒன்பிளஸ் ஸ்டைலோ ப்ரோ (OnePlus Stylo Pro) மற்றும் ஒன்பிளஸ் பேட் 4 ஸ்மார்ட் கீபோர்ட் (OnePlus Pad 4 Smart Keyboard) களமிறங்க இருக்கிறது.

ஏப்.30 தேதி குறிச்சாச்சு.. 13380mAh பேட்டரி.. 80W சார்ஜிங்.. மாடல்?

முன்னதாக, ஒன்பிளஸ் பேட் 3 ப்ரோ மாடலாக இது வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஒன்பிளஸ் பேட் 3 மாடலுக்கு அடுத்து ஒன்பிளஸ் பேட் 4 மாடலாகவே வெளியாகும் என்பதை ஒன்பிளஸ் இந்தியா (OnePlus India) நிறுவனமானது, உறுதி செய்துள்ளது. ஆகவே, டேப்லெட் செக்மெண்ட்டில் ப்ரோ மாடல்களில் ஒன்பிளஸ் கவனம் செலுத்தவில்லை என்பது தெரிகிறது.

அமேசான் தளத்தில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. ஆகவே, டிசைன், கலர் மட்டுமல்லாமல், டிஸ்பிளே, பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங், சிப்செட் மற்றும் கேமரா விவரங்களும் அமேசான் தளத்தில் உறுதியாகி இருக்கின்றன. டூன் க்ளோவ் (Dune Glow) மற்றும் சேஜ் மிஸ்ட் (Sage Mist) ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது. வழக்கம்போல சிங்கிள் ரியர் கேமரா சிஸ்டம் கொண்டுள்ளது.

ஒன்பிளஸ் பேட் 4 அம்சங்கள் (OnePlus Pad 4 Specifications): அல்ட்ரா பிரீமியம் பர்ஃபாமென்ஸ் எதிர்பார்க்கும் டேப்லெட் பிரியர்களுக்கு ஏற்ப குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 (Qualcomm Snapdragon 8 Elite Gen 5) சிப்செட்டை இந்த ஒன்பிளஸ் பேட் 4 மாடல் கொண்டுள்ளது. ஃபாஸ்டஸ்ட் மொபைல் சிபியூவாக இந்த ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட் இருக்கிறது.

ஆகவே, ராவ் வீடியோ எடிட்டிங் லேக் ப்ரீயாக இருக்கும். ஹெவி டேட்டா ஹேண்ட்லிங், ஹை-ரெசொலூஷன் கேமிங் உள்ளிட்டவையும் பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும். கிட்டத்தட்ட பிசி லெவல் அவுட்புட்டை இந்த ஒன்பிளஸ் பேட் 4 மாடலில் எதிர்பார்க்கலாம். ஓடிடி மற்றும் கேமிங்குக்கு ஏற்ப 13.2 இன்ச் (3392 x 2400 பிக்சல்கள்) டிஸ்பிளே கொடுக்கப்பட்டு உள்ளது.

3.4K ரெசொலூஷன், 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1000 நிட்ஸ் எச்பிஎம் பிரைட்னஸ் கொண்ட டிஸ்பிளேவாக இது இருக்கிறது. மேலும், 540Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 12 பிட் கலர் டெப்த் கிடைத்து உள்ளது. 98 சதவீத டிசிஐ பி3 (DCI - P3) கலர் காமட் மற்றும் 315 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கிடை்ககிறது. ஆகவே, கலர் அக்கியூரசி மற்றும் கிளாரிட்டி பட்டையை கிளப்பும்படி இருக்கும்.

மேலும், ஓடிடி பிரியர்களுக்கு பிரீமியம் அனுபவம் கொடுக்கும்படி டால்பி விஷன் (Dolby Vision) கிடைக்கிறது. இந்த பிரீமியம் டிஸ்பிளேவுக்கு ஏற்ப 8 ஸ்பீக்கர்களுடன் ஆடியோ சிஸ்டம் கிடைக்கிறது. இதில் 4 ட்வீடர்கள் மற்றும் 4 பேஸ் யூனிட்கள் இடம்பெற்றுள்ளன. ஆகவே, ஸ்பாஷியல் ஆடியோ பக்காவாக இருக்கும். 13380mAh பேட்டரி கொண்ட மாடலாக இருக்கிறது.

80W சூப்பர்வூக் சார்ஜிங் கிடைக்கிறது. 54 நாட்ளுக்கு ஸ்டான்ட்பை டைம் மற்றும் 20 மணி நேரங்களுக்கு வீடியோ பிளேடைம் கொடுக்கும். 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட மாடலாக கிடைக்க உள்ளது. ஒன்பிளஸ் பேட் 4 ஸ்மார்ட் கீபோர்ட் மற்றும் ஒன்பிளஸ் ஸ்டைலோ ப்ரோ ஆகியவை தனித்தனியாக கிடைக்க இருக்கின்றன. ஆகவே, கூடுதல் விலைக்கு கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Pad 4 With 13380mAh Battery 80W Fast Charging 12GB RAM To Launch in India on April 30
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X