ஏப்.20 க்கு அப்புறம் இதுதான்.. 6500mAh பேட்டரி.. 18GB ரேம்.. 45W சார்ஜிங்.. IP64 Pro ரேட்டிங்.. எந்த மாடல்?
டெக்னோ நிறுவனத்தின் புதிய பாப் சீரிஸ் மாடலாக டெக்னோ பாப் எக்ஸ் 5ஜி (TECNO POP X 5G) ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. 6500mAh பேட்டரி, 45W ஃபாஸ்ட் சார்ஜிங், 18 ஜிபி ரேம், IP64 ப்ரோ ரேட்டிங் போன்ற பீச்சர்களுடன் விற்பனை விவரங்களும் உறுதியாகி இருக்கின்றன. இந்த டெக்னோ பாப் எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் பட்ஜெட், விற்பனை மற்றும் பீச்சர்களை பார்க்கலாம்.
வருகிற ஏப்ரல் 20ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது. அமேசான் (Amazon) விற்பனையில் கிடைக்க இருக்கிறது. ஆகவே, அந்த தளத்தில் முக்கிய பீச்சர்கள் மற்றும் டிசைன் உறுதி செய்யப்பட்டு உள்ளது. அரிசோன்டல் கேமரா டிசைனில் ஏரோஸ்பேஸ் கிரேடு 6 சீரிஸ் அலுமினியம் கேமரா டெகோ (Aerospace-grade 6-series Aluminium Camera Deco) கொடுத்து உள்ளது.

ப்ளூ மற்றும் க்ரீன் ஷேட்களில் கிடைக்க இருக்கிறது. மிடில் ஃபிரேம் மெட்டாலிக் லுக் பினிஷிங் கொடுத்து உள்ளது. மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி மற்றும் IP64 Pro ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ஸ் கொடுத்து உள்ளது. ஆகவே, டியூரபிலிட்டியை விரும்பும் ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு ஏற்ற பட்ஜெட் மாடலாக இந்த டெக்னோ பாப் எக்ஸ் 5ஜி இருக்கப் போகிறது.
டெக்னோ பாப் எக்ஸ் 5ஜி அம்சங்கள் (TECNO POP X 5G Specifications): 4 ஜிபி ரேம் + 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் மற்றும் 6 ஜிபி ரேம் + 12 ஜிபி விர்ச்சுவல் ரேம் கொண்ட மாடல்கள் கிடைக்க இருக்கின்றன. ஆகவே, 18 ஜிபிக்கான ரேம் அவுட்புட் கொடுக்கப்பட்டு உள்ளது. 6500mAh பேட்டரி மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைத்து உள்ளது. டைப்-சி சார்ஜிங் போர்ட் & 3.5 எம்எம் ஆடியோ ஜாக் கிடைக்கிறது.
எம்ஐஎல்-எஸ்டிடி-810எச் (MIL-STD-810H) சர்டிபிகேஷன் கிடைக்கிறது. 1.5 மீட்டர்கள் டிராப் ரெசிஸ்டன்ஸ் கொடுத்து உள்ளது. கூடுதலாக IP64 Pro ரேட்டிங்குடன் டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ஸ் வருகிறது. 8X நெட்வொர்க் பூஸ்ட் கொடுக்க யுஎஸ்ஆர்பி 3.0 டெக்னாலஜி (USRP 3.0 Technology) கிடைக்கிறது. இந்த பீச்சர்கள் மட்டுமே உறுதி செய்யப்பட்டு உள்ளன.
முன்னதாக டெக்னோ பாப் எக்ஸ் (TECNO POP X) ஸ்மார்ட்போன் வெளியாகியது. 4ஜி மாடலாக இருப்பதால், 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.8,499 ஆக இருந்தது. ஆகவே, டெக்னோ பாப் எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.10,000 முதல் ரூ.12,000 பட்ஜெட்டுக்குள் மட்டுமே இருக்கும். இது ஆரம்ப விலையாக இருக்கவும் வாய்ப்புகள் இருக்கின்றன.
டெக்னோ பாப் எக்ஸ் 4ஜி ஸ்மார்ட்போனில் ஆக்டா கோர் யுனிசோக் டி7250 12என்எம் (Octa Core UNISOC T7250 12nm) சிப்செட் மற்றும் ஹைய்ஓஎஸ் 15 (HiOS 15) மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைத்தது. ஆகவே, பாப் எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) எதிர்பார்க்கலாம். மீடியாடெக் சிப்செட் கிடைக்கவும் வாய்ப்புகள் இருக்கின்றன.
13 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. டூயல் 4ஜி வோஎல்டிஇ கிடைத்தது. பாப் எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ கனெக்டிவிட்டி கிடைக்க வாய்ப்புள்ளது. சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் மற்றும் இன்பிராரெட் சென்சார் கிடைக்கிறது. டெக்னோ பாப் எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் இதை எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








