பொசுக்குனு ரூ.12,000 கம்மி விலைக்கு Samsung போன்.. 4300mAh பேட்டரி.. 50MP, 12MP, 10MP கேமரா.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் ரூ.12,000 தள்ளுபடி போக சாம்சங் கேலக்ஸி எஸ்26 5ஜி (Samsung Galaxy S26 5G) ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. மார்கெட் விலையில் இருந்து கம்மியான விலைக்கு வாங்க கிடைக்கிறது. 4300mAh பேட்டரி, 50எம்பி, 12எம்பி, 10எம்பி ரியர் கேமரா சிஸ்டம் கொண்டுள்ளது. இப்போது, கிடைக்கும் விலை மற்றும் தள்ளுபடி விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
2026 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் சாம்சங் கேலக்ஸி எஸ்26 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.87,999ஆகவும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.1,07,999ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டது. இப்போதும், அறிமுக விலைக்கே விற்பனைக்கு கிடைத்து வருகிறது.

ஆனால், பிளிப்கார்ட் தளத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்குகளின் கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.12,000 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.75,999 விலைக்கு வாங்கி கொள்ளலாம். அதாவது, ஆரம்ப விலை மாடலான 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டை ரூ.87,999 விலைக்கு பதிலாக ரூ.75,999 விலையில் வாங்கி கொள்ளலாம். இதேபோல 512 ஜிபிக்கும் தள்ளுபடி கிடைக்கிறது.
ஆகவே, ரூ.1,07,999 விலைக்கு கொண்ட 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டை ரூ.12,000 தள்ளுபடி போக ரூ.95,999 விலைக்கு வாங்கி கொள்ளலாம். ஈஎம்ஆ ஆப்ஷனில் வாங்கினால், ரூ.12,000 வரையில் தள்ளுபடி கிடைக்கிறது. பிளாக் (Black), கோபால்ட் வயலெட் (Cobalt Violet), ஸ்கை ப்ளூ (Sky Blue) மற்றும் ஒயிட் (White) ஆகிய கலர்களில் வாங்கி கொள்ள கிடைக்கிறது.
சாம்சங் கேலக்ஸி எஸ்25 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy S26 5G Specifications): 6.3 இன்ச் (2340 x 1080 பிக்சல்கள்) இன்பினிட்டி-ஓ டைனாமிக் அமோலெட் (Infinity-O Dynamic AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 120H ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Victus 2) பாதுகாப்பு கொண்டுள்ளது.
டெகா கோர் எக்ஸினோஸ் 2600 (Deca Core Exynos 2600) சிப்செட் மற்றும் எக்ஸ்கிளிப்ஸ் 960 ஜிபியு (Xclipse 960 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் ஒன் யுஐ 8.5 (One UI 8.5) கொடுக்கப்பட்டு உள்ளது. 50 எம்பி மெயின் கேமரா + 10 எம்பி டெலிபோட்டோ கேமரா + 12 எம்பி அல்ட்ரா வைடு கேமராவை கொடுத்து உள்ளது.
டெலிபோட்டோ, மெயின் கேமராவுக்கு ஓஐஎஸ் டெக்னாலஜி கிடைக்கிறது. மேலும், ஆட்டோ போகஸ் 3எக்ஸ் ஆப்டிகல் ஜூமிங், 2எக்ஸ் ஆப்டிகல் குவாலிட்டி ஜூமிங் மற்றும் 30எக்ஸ் டிஜிட்டல் ஜூமிங் கொடுக்கப்பட்டு உள்ளது. 12 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. மெயின் கேமராவில் அல்ட்ரா எச்டி 8K வீடியோ ரெக்கார்டிங் கொடுக்கப்பட்டு உள்ளது.
செல்பீ கேமராவுக்கு 4K ரெக்கார்டிங் கிடைக்கிறது. 4300mAh பேட்டரி மற்றும் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. வெறும் 7.2 எம்எம் தடிமன் மற்றும் 167 கிராம் எடை கொடுத்துள்ளது. IP68 ரேட்டிங்குடன் டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரின்ட், லைட் சென்சார், ஹால் சென்சார், ஜியோமேக்னட்டிக் சென்சார் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








