Home
Deal of the day

பொளக்குது விற்பனை.. ரூ.11,499 போதும்.. 6300mAh பேட்டரி.. 15W ஃபாஸ்ட் சார்ஜிங்.. 120Hz டிஸ்பிளே.. எந்த மாடல்?

அமேசான் மெகா டீல் டேஸ் சேல் (Amazon Mega Deal Days Sale) என்னும் சிறப்பு விற்பனையில், ரெட்மி ஏ7 ப்ரோ 5ஜி (REDMI A7 Pro 5G) ஸ்மார்ட்போனின் விற்பனை தொடங்கி இருக்கிறது. ரூ.12,000 பட்ஜெட்டை விட மலிவான விலைக்கு 6300mAh பேட்டரி, 15W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுத்து உள்ளது. இந்த ரெட்மி ஏ7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் பீச்சர்கள் மற்றும் விலை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

இந்தியாவில் மலிவான விலைக்கு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துவரும், ரெட்மி நிறுவனமானது, ஏப்ரல் 13ஆம் தேதி ரெட்மி ஏ7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனை களமிறக்கியது. ரூ.12,000 பட்ஜெட்டை விட மலிவான விலைக்கு பிரீமியம் லுக் கொடுக்கும்படியான டிசைனை கொடுத்ததால், விற்பனை மீதான எதிர்பார்ப்பு எகிறியது. இப்போது, அமேசான் தளத்தில் விற்பனை தொடங்கிவிட்டது.

பொளக்குது விற்பனை.. ரூ.11,499 போதும்.. 6300mAh பேட்டரி.. 15W சார்ஜிங்!

4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.11,499ஆகவும், 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.12,499ஆக இருக்கிறது. 2 மாதங்களுக்கான நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகையுடன் விற்பனைக்கு கிடைக்கிறது. மேலும், ரூ.10,900 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகை கிடைக்கிறது. அமேசான் பே ஐசிஐசிஐ கிரெடிட் கார்டுக்கு கூடுதல் தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, மேலும் மலிவான வாங்கலாம்.

ரெகல் கேமரா டெகோ (Regal Camera Deco) டிசைனில் மிஸ்ட் ப்ளூ (Mist Blue), சன்செட் ஆரஞ்ச் (Sunset Orange) மற்றும் பிளாக் (Black) ஆகிய கலர்களில் கிடைக்கிறது. 2 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் சப்போர்ட் கிடைக்கிறது. 6 ஜிபி ரேம் மாடலுக்கு 6 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த பட்ஜெட்டிலும் 4 வருடங்களுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் கொடுத்து உள்ளது.

மேலும், 6 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கின்றன. கூகுள் ஜெமினி (Google Gemini), சர்க்கிள் டூ சர்ச் (Circle To Search), சியோமி இன்டர்கனெக்டிவிட்டி (Xiaomi Interconnectivity) போன்ற பீச்சர்களும் கொடுக்கப்பட்டு உள்ளன. ஆம்பியன்ட் லைட் சென்சார் (Ambient Light Sensor), ப்ராக்சிமிடி சென்சார் (Proximity Sensor) கொடுக்கப்பட்டு உள்ளது. விர்ச்சுவலாக கிடைக்கின்றன.

ரெட்மி ஏ7 ப்ரோ 5ஜி அம்சங்கள் (REDMI A7 Pro 5G Specifications): ஆக்டா கோர் யுனிசோக் டி8300 6என்எம் (Octa Core UNISOC T8300 6nm) சிப்செட் மற்றும் பட்ஜெட் ஸ்மார்ட்போன்களுக்கு கிடைக்கும் மாலி ஜி57 ஜிபியு (Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. லேட்டஸ்ட் பீச்சர்களுடன் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் ஹைப்பர்ஓஎஸ் 3 (HyperOS 3) கொடுக்கப்பட்டு உள்ளது.

வாட்டர் டிராப் நாட்ச் (Water Drop Notch) கொண்ட 6.9 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. மேலும், 800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் வெட் டச் டெக்னாலஜி (Wet Touch Technology) கொடுக்கப்பட்டு உள்ளது.

32 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி செல்பீ கேமராவை இந்த ரெட்மி ஏ7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்து உள்ளது. 15W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 6300mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரியுடன் 8.15 எம்எம் தடிமன் மற்றும் 210 கிராம் எடை கொடுத்து உள்ளது. சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) கொடுக்கப்பட்டு உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
REDMI A7 Pro 5G With 6300mAh Battery 4GB RAM Available At Rs 11499 on Amazon Mega Deal Days Sale
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X