மொத்த Performance போன்களும் விபூதி அடிச்ச புது OnePlus போன்.. 165Hz டிஸ்பிளே, 8000mAh பேட்டரி.. எந்த மாடல்?
ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் சீன சந்தையில் உள்ள ஒட்டுமொத்த பெர்பார்மென்ஸ் ஸ்மார்ட்போன்களுக்கும் விபூதி அடிக்கும் படியான அம்சங்களுடன் ஒரு புதிய கேமிங் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. அது ஒன்பிளஸ் ஏஸ் 6 அல்ட்ரா (OnePlus Ace 6 Ultra ) மாடலாகும்.
இந்தியாவில் அறிமுகமாகும் பல நோர்ட் சீரீஸ் (Nord Series) ஸ்மார்ட்போன்கள் ஆனது சீனாவில் வெளியான ஏஸ் சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் ரீபிராண்டட் வெர்ஷன்கள் தான் என்பதால், ஒன்பிளஸ் ஏஸ் 6 அல்ட்ரா மீது நாமெல்லாம் ஒரு கண் வைப்பதில் எந்த தவறும் இல்லை.

கேமிங் கண்ட்ரோலர் உடன் வரும் ஒன்பிளஸ் ஏஸ் 6 அல்ட்ரா: ஒன்பிளஸ் நிறுவனமானது இந்த போனுடன் சேர்த்து "ட்ரீம் கியர்" என்று அழைக்கும் ஒரு டிவைஸையும் வெளியிடுவதாக அறிவித்துள்ளது. இந்த டிவைஸின் பெயர் தெளிவற்றதாக இருந்தாலும், இதுகுறித்த புகைப்படங்கள் விஷயங்களை தெளிவுபடுத்துகின்றன.
ட்ரீம் கியர் என்பது ஒன்பிளஸ் ஏஸ் 6 அல்ட்ராவுடன் இணைந்து செயல்படும்படி வடிவமைக்கப்பட்ட ஒரு கிளிப்-ஆன் கன்ட்ரோலர் ஆக்சஸெரீ ஆகதெரிகிறது, இது ஸ்மார்ட்போனை ஒரு கையடக்க கன்சோலுக்கு நெருக்கமான ஒன்றாக மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த டீசர்களில் இருந்து - ஷோல்டர் ட்ரிக்கர்கள், எக்ஸ்ட்ரா பேக் பட்டன்கள் மற்றும் ஒரு சாதாரண ஆக்சஸெரீயை விட ஒரு முறையான கன்ட்ரோலரை போன்ற ஒரு அமைப்பை காண முடிகிறது
ஒன்பிளஸ் ஏஸ் 6 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் வேறு என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இது BOE உடன் இணைந்து உருவாக்கப்பட்ட 165Hz டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்பதையும் ஒன்பிளஸ் நிறுவனம் உறுதி செய்துள்ளது. ஒன்பிளஸ் தனது அனைத்து பிளாக்ஷிப் மற்றும் மிட்ரேன்ஜ் வகை போன்களிலும் 165Hz பேனலை பொருத்தி வருவதால், இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை
சிப்செட்டை பொறுத்தவரை ஒன்பிளஸ் ஏஸ் 6 அல்ட்ராவில் பிளாக்ஷிப் மீடியாடெக் டைமென்சிட்டி 9500 சிப்செட் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பேட்டரியை பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போனில் 100W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 8,000mAh பேட்டரி இடம்பெறலாம். இது 2 நாட்கள் வரையிலான நல்ல பயன்பாட்டை உறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
ஒன்பிளஸ் ஏஸ் 6 அல்ட்ரா எப்போது அறிமுகமாகும்? ஒன்பிளஸ் நிறுவனம் ஆனது ஒன்பிளஸ் ஏஸ் 6 அல்ட்ராவின் வெளியீட்டு தேதியை இன்னும் வெளியிடவில்லை, ஆனால் இது இந்த மாதம் (ஏப்ரல் 2026) சீனாவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்தியாவிற்கு இது ஒரு ரீபிராண்டட் வெர்ஷனாக வருமா என்பதையும் இப்போதே சொல்லிவிட முடியாது.
சமீபத்தில் இந்தியாவில் அறிமுகமான ஒன்பிளஸ் நோர்ட் 6 ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள்: இந்தியாவில் ஒன்பிளஸ் நோர்ட் 6 ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.38,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.41,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது ஃப்ரெஷ் மின்ட், பிட்ச் பிளாக் மற்றும் க்விக் சில்வர் ஆகிய 3 கலர்களில் வாங்க கிடைக்கிறது.
ஒன்பிளஸ் நோர்ட் 6 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: இது 6.78-இன்ச் 165ஹெர்ட்ஸ் அமோஎல்இடி டிஸ்பிளே, அட்ரினோ 825 GPU உடன் கூடிய ஸ்னாப்டிராகன் 8s ஜென் 4 சிப்செட், 50-மெகாபிக்சல் சோனி LYT-600 CMOS ப்ரைமரி கேமரா + 8-மெகாபிக்சல் ஆம்னிவிஷன் OV08F அல்ட்ரா-வைட் கேமரா, 32-மெகாபிக்சல் செல்பீ கேமரா, IP66 + IP68 + IP69 + IP69K ரேட்டிங், 80W சூப்பர்VOOC சார்ஜிங் ஆதரவு உடனான 9000mAh பேட்டரி ஆகியவைகளை கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








