இந்திய மார்கெட் மிரளுது.. 200MP + 200MP கேமரா.. 100W சார்ஜிங்.. 6600mAh பேட்டரி.. OLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
விவோ எக்ஸ்300 எப்இ (Vivo X300 FE) மற்றும் விவோ எக்ஸ்300 அல்ட்ரா (Vivo X300 Ultra) ஸ்மார்ட்போன்கள் இந்திய மார்கெட்டில் வெளியாக இருப்பது, அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. மொபைல் போட்டோகிராபியில் டெலிபோட்டோ எக்ஸ்டெண்டர் கொடுக்கும் மாடல்களாக இந்த விவோ எக்ஸ்300 சீரிஸ் வெளியாக இருக்கிறது.
விவோ நிறுவனத்தின் எக்ஸ் சீரிஸ் மாடல்கள் பிரீமியம் கேமரா பீச்சர்களுடன் வெளியாகிவருகின்றன. ஏற்கனவே, ஜீஸ் ஆப்டிக்ஸ் கேமரா சிஸ்டம் கொண்ட மாடல்களாக களமிறக்கப்பட்டன. இப்போது, கேமரா கிரிப் கிட் மற்றும் ஜீஸ் டெலிபோட்டோ எக்ஸ்டெண்டர் 2 அல்ட்ரா (ZEISS Telephoto Extender Gen 2 Ultra) ஆகியவற்றுடன் விவோ எக்ஸ்300 அல்ட்ரா ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது.

இதில் 400 எம்எம் போகல் லென்த் உள்ளிட்ட பல லென்ஸ்களை அட்டாச் செய்து கொள்ள முடியும். அதேபோல 200 எம்எம் போகல் லென்த் வரையிலான லென்ஸ்களை விவோ எக்ஸ்300 எப்இ மாடலில் எக்ஸ்டென்ட் செய்து கொள்ளலாம். இந்த மாடல்கள் அமேசான் தளத்தில் விற்பனைக்கு கிடைக்க இருக்கின்றன. முக்கிய பீச்சர்களை பார்த்துவிட்டு, வெளியீட்டு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
விவோ எக்ஸ்300 எப்இ அம்சங்கள் (Vivo X300 FE Specifications): ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் ஜென் 5 (Octa Core Snapdragon 8 Gen 5) சிப்செட்டை கொடுக்க இருக்கிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.31 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கொடுக்க உள்ளது.

90W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 6500mAh பேட்டரியை இந்த விவோ எக்ஸ்300 எப்இ ஸ்மார்ட்போன் கொடுக்க உள்ளது. ஜீஸ் ஆப்டிக்ஸ் (ZEISS Optics) கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் கிடைக்கிறது. ஆகவே, 50 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி பெரிஸ்கோப் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது. 50 எம்பி செல்பீ ஷூட்டரை கொடுக்க உள்ளது.
விவோ எக்ஸ்300 அல்ட்ரா அம்சங்கள் (Vivo X300 Ultra Specifications): கியூஎச்டிபிளஸ் (QHD+) ரெசொலூஷன் கொண்ட 6.82 இன்ச் எல்டிபிஓ ஓஎல்இடி (LTPO OLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் மற்றும் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென்5 (Snapdragon 8 Elite Gen 5) சிப்செட் கிடைக்கிறது.
ஜீஸ் மாஸ்டர் கேமரா சிஸ்டம் கொண்டுள்ளது. 200 எம்பி மெயின் கேமரா + 200 எம்பி பெரிஸ்கோப் கேமரா + 50 எம்பி அல்ட்ரா வைடு கேமராவை கொடுக்க உள்ளது. கிளிம்பல் கிரேடு ஸ்டெபிலைசேஷன் கொண்ட கேமரா மாடலாக இந்த விவோ எக்ஸ்300 அல்ட்ரா ஸ்மார்ட்போன் கிடைக்க இருக்கிறது. ஓஐஎஸ் டெக்னாலஜி (OIS Technology) கிடைக்க உள்ளது.
50 எம்பி செல்பீ கேமராவை கொடுத்து உள்ளது. 100W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 6600mAh பேட்டரியை இந்த விவோ எக்ஸ்300 அல்ட்ரா ஸ்மார்ட்போன் கொடுத்து உள்ளது. 40W வயர்லெஸ் சார்ஜிங் கிடைக்கிறது. IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. மே மாதத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








