புதிய தொழில்நுட்ப வசதியுடன் சாம்சங் கேலக்ஸி எஸ்-2 ஒஎம்ஏபி மொபைல்

புதிய தொழில்நுட்ப வசதியுடன் சாம்சங் கேலக்ஸி எஸ்-2 ஒஎம்ஏபி மொபைல்
கேலக்ஸி வரிசையில் புதிய எஸ்-2 ஒஎம்ஏபி என்ற ஸ்மார்ட்போனை மார்க்கெட்டிற்கு அறிமுகப்படுத்தி வைத்துள்ளது சாம்சங் நிறுவனம்.

இதற்கு முன் வெளிவந்த கேலக்ஸி குடும்பத்தை சேர்ந்த மொபைலை விடவும், தற்சமயம் வெளி வந்துள்ள கேலக்ஸி எஸ்-2 ஒஎம்ஏபி மொபைல் முற்றிலும் மேம்படுத்தப்பட்ட வகையில் உள்ளதாக தகவல்கள் கூறுகின்றது.

இந்த மொபைல் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் டியூவல் கோர் டிஎல் ஒஎம்ஏபி4430 பிராசஸர் மூலம் இயங்குகிறது. இது உயர்ந்த தொழில் நுட்பத்தினை வழங்கிறது.

4.3 இஞ்ச் சூப்பர் அமோல்டு திரை கொண்ட இந்த மொபைல் எதையும் தெளிவாக புலப்படுத்துகிறது. கிராஃபிக் தொழில் நுட்பம் கொண்ட விளையாட்டுக்களும் இதில் உள்ளது.

இந்த மொபைல் வெப் பிரவுசிங், ரீடர்ஸ் ஹப் போன்ற வசதியையும் கொடுக்கிறது.

கேலக்ஸி எஸ்-2 ஒஎம்ஏபி என்ற மொபைலில் ஆல்ஷேர் என்ற அப்ளிக்கேஷன் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த மொபைலை லேப்டாப், கம்ப்யூட்டர், டெலிவிஷன் போன்றவைகளில் இணைத்து பல தகவல்களை எளிய முறையில் பெறலாம்.

இதில் உள்ள 8 மெகா பிக்ஸல் கேமராவின் மூலம் உயர்ந்த துல்லியத்தைக் கொடுக்கும் வீடியோவினையும் பதிவு செய்யலாம்.

கேலக்ஸி குடும்பத்தில் ஒன்றான இந்த கேலக்ஸி எஸ்-2 ஒஎம்ஏபி மொபைல் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கிறது.

மார்க்கெட்டிற்கு விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் இந்த புதிய கேலக்ஸி வரிசை மொபைலின் விலை விபரங்களை சாம்சங் இதுவரை வெளியிடவில்லை.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்