Amazon அதிரடி.. Samsung-ன் 20W சவுண்ட் சரவெடி.. 65-இன்ச் மினி LED TV மீது ரூ.49000 விலை குறைப்பு.. எந்த மாடல்?
சாம்சங் (Samsung) நிறுவனத்தின் பிரீமியம் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல் ஒன்றின் விலையானது, பிரபல இகாமர்ஸ் வலைத்தளம் ஆன அமேசான் இந்தியாவில் (Amazon India) கடுமையாக குறைந்துள்ளது. என்ன மாடல்? எவ்வளவு குறைந்துள்ளது? என்னென்ன அம்சங்கள்? இதோ விவரங்கள்:
என்ன மாடல்? அது சாம்சங் 65-இன்ச் 4கே அல்ட்ரா எச்டி மினி எல்இடி நியோ க்யூஎல்இடி ஸ்மார்ட் டிவி (Samsung 65-inch 4K Ultra HD Mini-LED Neo-QLED Smart TV - QA65QN70FAULXL) மாடல் ஆகும். தற்போது இது அமேசானில் 32% நேரடி தள்ளுபடி விலையின் கீழ் பட்டியலிடப்பட்டு உள்ளது.

அதாவது சாம்சங்கின் இந்த 65 இன்ச் மினி எல்இடி ஸ்மார்ட் டிவி மாடலின் எம்ஆர்பி விலை ரூ.1,52,000 ஆகும். இருப்பினும் அமேசான் இந்தியாவானது 32% டிஸ்கவுண்ட்டின் கீழ், ரூ.49,010 விலை குறைப்பை அறிவித்து, இதை ரூ.1,02,990 க்கு விற்பனை செய்கிறது. தங்கள் வீட்டிற்கு ஒரு பிரீமியம் ஸ்மார்ட் டிவியை வாங்க வேண்டும் என்கிற திட்டத்தில் உள்ளவர்கள் இந்த ஆபரை பயன்படுத்தி கொள்ளலாம்.
65-இன்ச் சாம்சங் 4கே அல்ட்ரா எச்டி மினி எல்இடி நியோ க்யூஎல்இடி ஸ்மார்ட் டிவியின் முக்கிய அம்சங்கள்:
டிஸ்பிளேவை பொறுத்தவரை இது நியோ-க்யூஎல்இடி 4கே அல்ட்ரா எச்டி (3840 x 2160) மற்றும் 100Hz (144Hz வரை) ரெஃப்ரெஷ் ரேட் உடனான 65 இன்ச் டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
டிஸ்பிளே அம்சங்களை பொறுத்தவரை இது NQ4 AI ஜென் சிப், நியோ குவாண்டம் HDR, குவாண்டம் டாட் டிஸ்பிளே, எச்டிஆர் 10 பிளஸ், 4கே AI அப்ஸ்கேலிங், HDMI பிளாக் லெவல், கலர் பூஸ்டர் ப்ரோ, HLG (ஹைப்ரிட் லாக் காமா), மெகா கான்ட்ராஸ்ட், சுப்ரீம் UHD டிம்மிங், மோஷன் எக்ஸலரேட்டர், HDR பிரைட்னஸ் ஆப்டிமைசர், ஐகம்ஃபர்ட் மோட், ஃபிலிம்மேக்கர் மோட், ஃபிலிம் மோட் ஆகியவைகளை கொண்டுள்ளது.
சவுண்ட்டை பொறுத்தவரை, இது சக்திவாய்ந்த 20W சவுண்ட் அவுட்புட்டை வழங்குகிறடி. கூடவே இது ஆப்ஜெக்ட் டிராக்கிங் சவுண்ட் லைட், க்யூ-சிம்பொனி, ஆக்டிவ் வாய்ஸ் ஆம்ப்ளிஃபையர் ப்ரோ, ப்ளூடூத் ஆடியோ, அடாப்டிவ் சவுண்ட் ப்ரோ, 360 ஆடியோ ஆகிய அம்சங்களையும் கொண்டுள்ளது
கேமிங் அம்சங்களை பொறுத்தவரை இது ஆட்டோ கேம் மோடு (ALLM), கேம் மோஷன் பிளஸ், விஆர்ஆர் (VRR), டைனமிக் பிளாக் ஐக்யூ, சரவுண்ட் சவுண்ட், சூப்பர் அல்ட்ரா வைட் கேம் வியூ, கேம் பார், மினி மேப் ஜூம், ஃப்ரீசிங்க் பிரீமியம் ப்ரோ, HGiG, AI ஆட்டோ கேம் மோட் ஆகியவைகளை கொண்டுள்ளது
கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை இது வைஃபை, ப்ளூடூத், 4 HDMI போர்ட்கள், HDMI eARC, எனிநெட் பிளஸ் (HDMI-CEC), 2 USB-A, 1 USB-C, ஈதர்நெட் (LAN), டிஜிட்டல் ஆடியோ அவுட் (ஆப்டிகல்), RF இன், மற்றும் Ex-Link (RS-232C) ஆகியவற்றை வழங்குகிறது. இவை அனைத்தும் ஒரு ஒழுங்கான அமைப்பிற்காக சாம்சங் ஒன் கனெக்ட் பாக்ஸில் (Samsung One Connect Box) வசதியாக அமைக்கப்பட்டுள்ளன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
ஒருவேளை நீங்கள் இன்னும் மலிவான விலைக்கு ஒரு நல்ல 65-நச் ஸ்மார்ட் டிவி மாடலை வாங்க விரும்பினால், அதே அமேசான் இந்தியாவில் வாங்க கிடைக்கும் எல்ஜி 65-இன்ச் யுஏ82 ஏஐ சீரீஸ் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் வெப்ஓஎஸ் எல்இடி டிவி (LG 65-inch UA82 AI Series 4K Ultra HD Smart webOS LED TV - 65UA82006LA) மாடலை பார்க்கலாம்
எல்ஜி நிறுவனத்தின் இந்த 65 இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல் ஆனது, தற்போது அமேசான் இந்தியா வலைத்தளத்தில் 43% டிஸ்கவுண்ட்டை பெற்று அதன் எம்ஆர்பி விலையான ரூ.1,05,990 க்கு பதிலாக, ரூ.59,990 என்கிற ஆபர் விலையில் வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








