ஆரம்பமே ரூ.3000 ஆபர்.. Samsung புது 5ஜி போன்.. 5000mAh பேட்டரி, 6 வருட OS.. ஏப்.2 முதல் டெலிவரி.. எந்த மாடல்?
சாம்சங் (Samsung) நிறுவனம் அதன் புதிய ஸ்மார்ட்போன்களான கேலக்ஸி ஏ57 5ஜி (Galaxy A57 5G) மற்றும் கேலக்ஸி ஏ37 5ஜி (Galaxy A37 5G) ஸ்மார்ட்போன்களின் இந்திய விலை மற்றும் அறிமுக சலுகைகளை அறிவித்துள்ளது. என்ன விலை? என்னென்ன ஆபர்? எப்போது முதல் விற்பனை? என்னென்ன அம்சங்கள்?
சாம்சங் கேலக்ஸி ஏ57 5ஜி, கேலக்ஸி ஏ37 5ஜி ஸ்மார்ட்போன்களின் விலை, விற்பனை மற்றும் சலுகைகள்: இந்தியாவில், சாம்சங் கேலக்ஸி ஏ57 5ஜி ஸ்மார்ட்போனின் 8GB ரேம் + 256GB ஆப்ஷன் ரூ.56,999 என்றும், 12GB ரேம் மெ+ 256GB ஆப்ஷன் ரூ.62,499 என்றும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதே சமயம், சாம்சங் கேலக்ஸி ஏ37 5ஜி ஸ்மார்ட்போனின் 8GB ரேம் + 128GB ஆப்ஷன் ரூ.41,999 இல் இருந்து தொடங்குகிறது. இதே ஸ்மார்ட்போனின் 8GB ரேம் + 256GB ஸ்டோரேஜ் மற்றும் 12GB ரேம் + 256GB ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் முறையே ரூ.47,499 மற்றும் ரூ. 52,499 எஎன்று விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.
கேலக்ஸி ஏ57 5ஜி மற்றும் கேலக்ஸி ஏ37 5ஜி ஆகிய 2 மாடல்களுமே ரீடெயில் ஸ்டோர்கள், சாம்சங் எக்ஸ்க்ளூசிவ் ஸ்டோர்கள், சாம்சங் இந்தியா இணையதளம் மற்றும் பிற ஆன்லைன் தளங்களின் வழியாக வாங்க கிடைக்கும். ஆபர்களை பொறுத்தவரை வாடிக்கையாளர்கள் ரூ.3,000 பேங்க் அல்லது யுபிஐ கேஷ்பேக், முன்பணம் இல்லாத 24 மாத நோ காஸ்ட் இஎம்ஐ திட்டம் போன்ற சலுகைகளைப் பெறலாம் அல்லது ரூ.3000 அப்கிரேட் போனஸும் கிடைக்கும்.
கலர் ஆப்ஷன்களை பொறுத்தவரை சாம்சங் கேலக்ஸி ஏ57 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஆசம் நேவி, ஆசம் ஐசிப்ளூ மற்றும் ஆசம் லிலாக் ஆகிய 3 கலர்களில் கிடைக்கும். கேலக்ஸி ஏ37 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஆசம் லாவெண்டர், ஆசம் சார்கோல் மற்றும் ஆசம் கிரேக்ரீன் ஆகிய 3 கலர்களில் கிடைக்கும். இந்த போன்கள் இப்போது அமேசானில் முன்பதிவு செய்ய கிடைக்கின்றன, ஏப்ரல் 2 முதல் டெலிவரி தொடங்கும்.
சாம்சங் கேலக்ஸி ஏ57 5ஜி, கேலக்ஸி ஏ37 5ஜி அம்சங்கள்: இரண்டு ஸ்மார்ட்போன்களுமே ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ்-ஐ அடிப்படையாகக் கொண்ட ஒன் யுஐ 8.5கொண்டு இயங்குகின்றன. மேலும், இவைகள் 6 ஜெனரேஷன் ஆண்ட்ராய்டு மற்றும் ஒன் யுஐ அப்டேட்களையும், ஆறு ஆண்டுகள் வரையிலான செக்யூரிட்டி அப்டேட்களையும் பெறும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
டிஸ்பிளேவை பொறுத்தவரை இரண்டு போன்களிலும் 120ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட் உடன் கூடிய 6.7-இன்ச் ஃபுல் எச்டி+ சூப்பர் அமோஎல்இடிபிளஸ் டிஸ்ப்ளே உள்ளது. இந்த டிஸ்பிளே சாம்சங்கின் விஷன் பூஸ்டர் தொழில்நுட்பத்தை ஆதரிக்கிறது. சிப்செட்டை பொறுத்தவரை கேலக்ஸி ஏ57 மாடலில் எக்ஸினோஸ் 1680 உள்ளது. கேலக்ஸி ஏ37 மாடலில் எக்ஸினோஸ் 1480 சிப் உள்ளது
இந்த இரண்டு போன்களிலும் 12ஜிபி வரையிலான ரேம் மற்றும் 256ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் உள்ளது. கேமராக்களை பொறுத்தவரை, கேலக்ஸி ஏ57 5ஜி மற்றும் கேலக்ஸி ஏ37 5ஜி ஆகிய இரண்டுமே எப்/1.8 அபெர்க்ஷர் கொண்ட 50-மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் கேமராவை கொண்டுள்ளன.
ஆனால் கேலக்ஸி ஏ57 5ஜி ஸ்மார்ட்போனின் ரியர் கேமரா செட்டப்பில் எப்/2.2 அபெர்க்ஷர் கொண்ட 12-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமராவும், எப்/2.4 அபெர்க்ஷர் கொண்ட 5-மெகாபிக்சல் மேக்ரோ கேமராவும் உள்ளது. மறுபுறம் உள்ள கேலக்ஸி ஏ37 5ஜி மாடலில் எப்/2.2 அபெர்க்ஷர் கொண்ட 8-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் சென்சாரும், எப்/2.4 அபெர்க்ஷர் கொண்ட 5-மெகாபிக்சல் மேக்ரோ கேமராவும் உள்ளது. முன்பக்கத்தில் இரண்டுமே எப்/2.2 அபெர்ச்சர் கொண்ட 12 மெகாபிக்சல் செல்பீ கேமராவை கொண்டுள்ளன.
பேட்டரியை பொறுத்தவரை கேலக்ஸி ஏ57 5ஜி மற்றும் கேலக்ஸி ஏ37 5ஜி ஆகியவற்றில் 5000mAh பேட்டரி உள்ளது. இந்த பேட்டரி ஒரே சார்ஜில் 2 நாட்கள் வரை பேட்டரி லைஃப்பை வழங்கும் என்று கூறப்படுகிறது. இதில் உள்ள சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் 2.0 தொழில்நுட்பம் ஆனது, சுமார் 30 நிமிட சார்ஜிங்கில் இந்த ஸ்மார்ட்போன்களின் பேட்டரியை பூஜ்ஜியத்திலிருந்து 60 சதவீதம் வரை நிரப்பும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








