யாரு சாமி அவன்.. 9020mAh பேட்டரி.. 90W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. முரட்டு Vivo ஸ்மார்ட்போன்.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் அதிக பேட்டரி கேபாசிட்டி கொண்ட விவோ மாடலாக விவோ டி5 ப்ரோ (Vivo T5 Pro) ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. பேட்டரி, டிஸ்பிளே, ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் ஓஎஸ் உள்ளிட்ட பீச்சர்கள் மார்கெட்டில் கசிந்துள்ளன. இந்த விவோ டி5 ப்ரோ ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
6500mAh பேட்டரி கொண்ட மாடலாக விவோ டி4 ப்ரோ (Vivo T4 Pro) ஸ்மார்ட்போன் வெளியாகியது. பேட்டரி மட்டுமல்லாமல், சோனி சென்சார் கேமரா, குவாட் கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே மற்றும் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 (Snapdragon 7 Gen 4) சிப்செட் கொண்ட மாடலாகவும் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. இதனால், விவோ டி5 ப்ரோ மாடலுக்கு எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது.

இந்த எதிர்பார்ப்பை பல மடங்கு உயர்த்தும்படி மிகப்பெரிய பேட்டரி சிஸ்டம் கிடைக்க இருப்பது தெரியவந்துள்ளது. இந்த விவோ டி5 ப்ரோ ஸ்மார்ட்போனின் முக்கிய பீச்சர்களை டிப்ஸ்டர் யோகேஷ் பிரார் (Yogesh Brar) அவரது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டு உள்ளார். இந்த பீச்சர்கள் பெரிய பேட்டரியை விரும்பும் பிரியர்களை தட்டித்தூக்கி இருக்கிறது.
விவோ டி5 ப்ரோ அம்சங்கள் (Vivo T5 Pro Specifications): 1.5K ரெசொலூஷன் மற்றும் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. 90W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 9020mAh பேட்டரி கொடுக்கப்படுகிறது. ஓர்ஜின் ஓஎஸ் 6 (OriginOS 6) கிடைக்கிறது. இந்த பீச்சர்கள் மட்டுமே யோகேஷ் பிரார் எக்ஸ் தளத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்திய மார்கெட்டில் விவோ டி4 ப்ரோ ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.27,999 ஆக இருக்கிறது. ஆகவே, இந்த விவோ டி5 ப்ரோ ஸ்மார்ட்போனை ரூ.31,999 பட்ஜெட்டில் எதிர்பார்க்கலாம். இந்த ஸ்மார்ட்போனின் மற்ற பீச்சர்களை தெரிந்து கொள்ள, விவோ டி4 ப்ரோ மாடலின் பீச்சர்களை பார்க்க வேண்டும்.
ஏனென்றால், இந்த மாடலில் இருந்து அப்கிரேட் செய்யப்பட்ட பீச்சர்களே விவோ டி5 ப்ரோ ஸ்மார்ட்போனில் கிடைக்கும். ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் ஃபன்டச் ஓஸ் 15 (Funtouch OS 15) ஆகியவை விவோ டி4 ப்ரோவில் கொடுக்கப்பட்டது. ஆகவே, ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) விவோ டி5 ப்ரோ ஸ்மார்ட்போனில் எதிர்பார்க்கலாம்.
விவோ டி4 ப்ரோ அம்சங்கள் (Vivo T4 Pro Specifications): 6.77 இன்ச் (2392 x 1080 பிக்சல்கள்) குவாட் கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே (Quad Curved AMOLED) கிடைக்கிறது. 120 Hz ரெஃப்ரெஷ் ரேட், 480Hz டச் சாம்பிளிங் ரேட், 5000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது. டயமன்ட் சீல்டு கிளாஸ் பாதுகாப்பு உள்ளது.
4என்எம் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 (4nm Qualcomm Snapdragon 7 Gen 4) சிப்செட் மற்றும் அட்ரினோ 722 ஜிபியு (Adreno 722 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. 50 மெகா பிக்சல் மெயின் கேமரா + 50 மெகா பிக்சல் பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா + 2 மெகா பிக்சல் டெப்த் கேமரா உள்ளது. சோனி ஐஎம்எக்ஸ் சென்சார்கள் கிடைக்கின்றன
ஆரா லைட் மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் உள்ளது. 32 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. 90W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 6500mAh பேட்டரி கிடைக்கிறது. இதில் ரிவர்ஸ் சார்ஜிங் கிடைக்கவில்லை. ஆனால், விவோ டி5 ப்ரோ மாடலில் கிடைக்க வாய்ப்புள்ளது. ஏனென்றால், 9000mAh பேட்டரி கொடுக்கப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications








