Home
Deal of the day

SALE பிச்சிக்குது.. ரூ.6800 ஆஃபரில் சாம்சங்.. 4900mAh பேட்டரி.. 45W சார்ஜிங். OIS கேமரா.. எந்த மாடல்?

ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் மட்டுமல்லாமல், 7 வருடங்களுக்க ஓஎஸ் அப்டேட், ஆர்மர் அலுமினியம் ஃபிரேம் போன்ற பிரீமியம் பீச்சர்களுடன் மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் வெளியான சாம்சங் கேலக்ஸி எஸ்25 எப்இ (Samsung Galaxy S25 FE) ஸ்மார்ட்போனுக்கு அதிகப்படியான பேங்க் தள்ளுபடி கிடைக்கிறது. மார்கெட் விலையை விட மலிவான விலைக்கு கிடைப்பதால், விற்பனையில் பட்டையை கிளப்பி வருகிறது.

இந்திய மார்கெட்டில் சாம்சங் கேலக்ஸி எஸ்25 எப்இ ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.59,999ஆக இருக்கிறது. இதே விலைக்கு பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. ஆனால், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.6,800 தள்ளுபடி கிடைக்கிறது. மேலும், குறிப்பிட்ட டெபிட் கார்டுகளுக்கு ரூ.4,000 தள்ளுபடி கிடைக்கிறது.

SALE பிச்சிக்குது.. ரூ.6800 ஆஃபரில் சாம்சங்.. 4900mAh பேட்டரி!

ஆகவே, ரூ.55,999 விலைக்கு இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்25 எப்இ ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம். மேலும், இஎம்ஐ முறையில் வாங்கினாலும், ரூ.4,000 தள்ளுபடி கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் ஒன் யுஐ 8 (One UI 8) கிடைக்கிறது. 7 வருடங்களுக்கு ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட் மற்றும் 7 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட் கிடைக்கிறது.

கிளாஸ் பேக் கொடுக்கிறது. இருப்பினும், ஆர்மர் அலுமினியம் ஃபிரேம் (Armor Aluminum Frame) கொடுத்து உள்ளது. மேலும், IP68 ரேட்டிங்குடன் டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) கொடுத்து உள்ளது. வழக்கம்போல டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) கொண்ட மாடலாக இருக்கிறது. சிப்செட், டிஸ்பிளே உள்ளிட்ட பீச்சர்களை பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி எஸ்25 எப்இ அம்சங்கள் (Samsung Galaxy S25 FE Specifications): 6.7 இன்ச் (2340 x 1080 பிக்சல்கள்) இன்பினிட்டி-ஓ டைனாமிக் அமோலெட் (Infinity-O Dynamic AMOLED) டிஸ்பிளேவை கொடுத்து உள்ளது. ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் மற்றும் 120 Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1900 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டு உள்ளது.

மிட்-ரேஞ்ச் மாடலாக இருப்பதால், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ்பிளஸ் (Corning Gorilla Glass Victus+) பாதுகாப்பை கொடுத்து உள்ளது. டெகா கோர் சாம்சங் எக்ஸினோஸ் 2400 4என்எம் (Deca Core Samsung Exynos 2400 4nm) சிப்செட்டை இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்25 எப்இ ஸ்மார்ட்போன் கொடுத்து உள்ளது. மேலும், சாம்சங் எக்ஸ்கிளிப்ஸ் 940 ஜிபியு (Samsung Xclipse 940 GPU) கிடைத்து உள்ளது.

50 எம்பி மெயின் கேமரா + 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 8 எம்பி டெலிபோட்டோ கேமரா + 12 எம்பி செல்பீ கேமரா உள்ளது. ஓஐஎஸ் டெக்னாலஜி, 3X ஆப்டிகல் ஜூம் உள்ளது. டால்பி அட்மோஸ், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளன. 4900mAh பேட்டரியை இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்25 எப்இ கொடுக்கிறது. 45W ஃபாஸ்ட் சார்ஜிங் + 15W வயர்லெஸ் சார்ஜிங் உள்ளது.

8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மட்டுமல்லாமல், ரூ.65,999 விலைக்கு 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் ரூ.77,999 விலைக்கு 8 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட மாடல்களும் கிடைக்கின்றன. இந்த மாடல்களுக்கும் பேங்க் டிஸ்கவுண்ட் மற்றும் இஎம்ஐ டிஸ்கவுண்ட் கொடுக்கப்பட்டு உள்ளது. நேவி (Navy), ஜேட் பிளாக் (Jetblack) மற்றும் ஒயிட் (White) கலர்களில் கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S25 FE With 8GB RAM 128GB Storage Available At Rs 6800 Discount on Flipkart
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X