போட்டான் பாரு சாம்சங்.. ரூ.15,000 விலை எகிறிடுச்சு.. கேலக்ஸி A37, A57 ரெடி.. 50MP கேமரா, 5000mAh பேட்டரி!
இந்திய மார்கெட்டில் சாம்சங் கேலக்ஸி ஏ57 (Samsung Galaxy A57) மற்றும் சாம்சங் கேலக்ஸி ஏ37 (Samsung Galaxy A37) ஆகிய மாடல்கள் வெளியாக இருக்கின்றன. இந்த வெளியீட்டுக்கு முன்னதாகவே விலை விவரங்கள் கசிந்துவிட்டன. இது முந்தைய மாடல்களைவிட மிகவும் விலை அதிகமாக இருக்கிறது. இதுகுறித்த விவரங்கள் இதோ.
2025ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் சாம்சங் கேலக்ஸி ஏ56 மற்றும் சாம்சங் கேலக்ஸி ஏ36 மாடல்கள் வெளியாகின. இந்த மார்ச் மாதத்தில் கேலக்ஸி ஏ57, கேலக்ஸி ஏ37 வெளியாகி இருக்கின்றன. எப்போதும், முந்தைய மாடல்களைவிட ரூ.5,000 முதல் ரூ.10,000 வரையில் அதிகமான விலைக்கு கேலக்ஸி மாடல்கள் வெளியாகும்.

ஆனால், இந்த முறை ரூ.15,000 விலை அதிகமாக சாம்சங் கேலக்ஸி ஏ57 வெளியாக உள்ளது. அதேபோல ரூ.9,000 விலை அதிகமாக சாம்சங் கேலக்ஸி ஏ37 வெளியாக இருக்கிறது. இந்த விலைகளானது டிப்ஸ்டர் அபிஷேக் யாதவின் எக்ஸ் தளத்தில் வெளியாகி இருக்கிறது. இந்த விலை மற்றும் முந்தைய மாடல்களின் விலை ஒப்பிட்டு பார்க்கலாம்.
சாம்சங் கேலக்ஸி ஏ57 விலை (Samsung Galaxy A57 Price): 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.56,999 ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.62,499 ஆகவும் இருக்கிறது. இந்த 2 வேரியண்ட்கள் மட்டுமே கிடைக்க உள்ளது. இந்த விலையானது, முந்தைய மாடலைவிட மிகவும் அதிகமாக இருக்கிறது.
அதாவது, ஏற்கனவே இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி ஏ56 ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.41,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.44,999ஆகவும் இருந்தது. இந்த விலையில் இருந்து ரூ.15,000 அதிகமாக சாம்சங் கேலக்ஸி ஏ57 இருக்கிறது.
சாம்சங் கேலக்ஸி ஏ37 விலை (Samsung Galaxy A37 Price): 8ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.41,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.47,999ஆகவும் இருக்கிறது. மேலும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட டாப்-எண்ட் வேரியண்ட்டின் விலை ரூ.52,999ஆகவும் இருக்கிறது.
முன்னதாக அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி ஏ36 ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.32,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.35,999ஆகவும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.38,999ஆகவும் இருக்கிறது.
இந்த விலையில் இருந்து ரூ.9,000 அதிகமாக சாம்சங் கேலக்ஸி ஏ37 விலை இருக்கிறது. ஆகவே, கூடுதல் விலைக்கு சாம்சங் கேலக்ஸி ஏ57 மற்றும் சாம்சங் கேலக்ஸி ஏ37 அறிமுகம் செய்யப்பட இருப்பது தெரிகிறது. இருப்பினும், இது உறுதி செய்யப்பட்ட விலை கிடையாது. ஆகவே, அந்த ஸ்மார்ட்போன்கள் வெளியாகிய பிறகு உண்மை தெரியவரும்.
சாம்சங் கேலக்ஸி ஏ37 அம்சங்கள்
6.7 இன்ச் சூப்பர் அமோலெட் டிஸ்பிளே உள்ளது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் ஃபுல்எச்டிபிளஸ் ரெசொலூஷன் உள்ளது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொண்ட எக்ஸினோஸ் 1480 (Exynos 1480) சிப்செட் கிடைக்கிறது. ஒன் யுஐ 8.5 (One UI 8.5) கொடுக்கப்பட்டு உள்ளது. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷனுடன் 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது.
12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 5 எம்பி மேக்ரோ கேமரா கொடுக்கப்பட்டு உள்ளது. 12 எம்பி செல்பீ கேமராவை இந்த சாம்சங் கேலக்ஸி ஏ37 கொடுக்க உள்ளது. 5000mAh பேட்டரி மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. அவ்சம் சார்கோல், அவ்சம் கிரேகிரீன், அவ்சம் லாவெண்டர் மற்றும் அவ்சம் ஒயிட் ஆகிய கலர்களில் கிடைக்க உள்ளது.
சாம்சங் கேலக்ஸி ஏ57 அம்சங்கள்
6.7 இன்ச் சூப்பர் அமோலெட் டிஸ்பிளே கிடைக்கிறது. 45W சார்ஜிங் மற்றும் 5000mAh பேட்டரி உள்ளது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ், ஒன் யுஐ 8.5 கொண்ட எக்ஸினோஸ் 1680 (Exynos 1680) சிப்செட் உள்ளது. 50 எம்பி மெயின் கேமரா + 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 5 எம்பி மேக்ரோ கேமரா கிடைக்கிறது. 12 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








