வெச்சி செஞ்ச Vivo.. 200MP கேமரா.. 7000mAh பேட்டரி.. 90W பாஸ்ட் சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் விவோ வி70 எப்இ (Vivo V70 FE) ஸ்மார்ட்போன் வெளியாக இருப்பது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஆகவே, பீச்சர்கள் அடுத்தடுத்து உறுதி செய்யப்பட உள்ளன. 200 எம்பி கேமரா உறுதி செய்யப்பட்டுவிட்டது. இப்போது, வெளியீட்டு தேதி மார்கெட்டில் கசிந்துள்ளது. இந்த விவோ வி70 எப்இ ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
குளோபல் மார்கெட்டில் ஏற்கனவே இந்த விவோ வி70 எப்இ ஸ்மார்ட்போன் வெளியாகிவிட்டது. ஆகவே, பீச்சர்கள் மற்றும் டிசைனை குளோபல் வெர்ஷனை போலவே எதிர்பார்க்கலாம். இந்தியாவில் விரைவில் வெளியாகும் என்பதை உறுதி செய்த விவோ நிறுவனமானது, கேமரா பீச்சருடன் போஸ்டரை வெளியிட்டது. இதில் 200 எம்பி மெயின் கேமரா கிடைக்க இருப்பது உறுதியானது.
அதேபோல குளோபல் வெர்ஷனில் கிடைத்த லைட் பர்பிள் (Light Purple) கலரும் அப்படியே போஸ்டரில் இருக்கிறது. இந்த போஸ்டருடன் அமேசான் (Amazon) தளத்தில் மைக்ரோசைட் ஓப்பன் செய்யப்பட்டு உள்ளது. அடுத்த அப்டேட்டை வருகிற மார்ச் 26ஆம் தேதி கொடுக்க இருப்பதாகவும் அமேசான் தளத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்த நேரத்தில் ஏப்ரல் 2 ஆம் தேதி இந்த விவோ வி70 எப்இ மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு ஏற்பவே விவோ நிறுவனமும் பீச்சர்களை உறுதி செய்ய தொடங்கி இருக்கிறது. குளோபல் வெர்ஷனே இந்தியாவில் வெளியாகும் என்பதால் அதில் கிடைத்த பீச்சர்களை இப்போது தெரிந்து கொள்ளலாம். லைட் பர்பிள், சில்வர் (Silver) மற்றும் ப்ளூ (Blue) கலர்களில் கிடைக்க உள்ளது.

விவோ வி70 எப்இ அம்சங்கள் (Vivo V70 FE Specifications): ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி டர்போ 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7360 Turbo 4nm) சிப்செட்டை இந்த விவோ வி70 எப்இ ஸ்மார்ட்போன் கொடுத்து உள்ளது. ஓர்ஜின் ஓஎஸ் 6 (OriginOS 6) கொடுக்கப்பட்டு உள்ளது. 8 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் உள்ளது.
8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் கிடைக்கிறது. 90W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 7000mAh பேட்டரி கொடுக்கப்பட்டு உள்ளது. 6.83 இன்ச் (2800 x 1260 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கொடுக்கப்பட்டு உள்ளது. 120 Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1900 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது.
449 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, P3 வைடு கலர் காமட் கிடைக்கிறது. செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக 32 எம்பி செல்பீ கேமராவை இந்த விவோ வி70 எப்இ ஸ்மார்ட்போன் கொடுத்து உள்ளது. 200 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி வைடு ஆங்கிள் கேமரா கிடைக்கிறது. மெயின் கேமராவுக்கு ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி கிடைக்கிறது.
ஏஐ மேஜிக் வெதர் (AI Magic Weather), ஏஐ மேஜிக் லேண்ட்ஸ்கேப் (AI Magic Landscape), ஏஐ ஃபோர் சீசன் போர்ட்ராய்டு (AI Four-Season Portrait) உள்ளிட்ட ஏஐ கேமரா பீச்சர்களை கொடுத்து உள்ளது. டாப் ரேட்டெட் வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் கொடுக்க IP68 ரேட்டிங் & IP69 ரேட்டிங் கிடைக்கிறது. குளோபல் மார்கெட்டில் ரூ.40,000 பட்ஜெட்டில் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








