சறுக்குனு ரூ.3000 விலை குறைக்கப்பட்ட Samsung 5ஜி போன்.. 5000mAh பேட்டரி, 45W சார்ஜிங், IP67.. எந்த மாடல்?
சாம்சங் (Samsung) நிறுவனத்தின் புதிய ஏ-சீரீஸ் ஸ்மார்ட்போன் ஆக கேலக்ஸி ஏ57 5ஜி உடன் சேர்த்து கேலக்ஸி ஏ37 5ஜி (Galaxy A37 5G) இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டதும், கடந்த மார்ச் 2025 இல் அறிமுகம் செய்யப்பட்ட சாம்சங் கேலக்ஸி ஏ36 5ஜி (Samsung Galaxy A36 5G) மாடலின் விலை - பல்வேறு தளங்களில் வெவ்வேறு மாதிரியான விலை குறைப்பை பெற்றுள்ளது.
அமேசான், பிளிப்கார்ட், சாம்சங் இந்தியா வலைத்தளம்: நினைவூட்டும் வண்ணம் சாம்சங் கேலக்ஸி ஏ36 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது கடந்த மார்ச் 2025 இல் மொத்தம் 3 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது: 8GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் - ரூ.32,999, 8GB ரேம் + 256GB ஸ்டோரேஜ் - ரூ.35,999 மற்றும் 12GB ரேம் + 256GB ஸ்டோரேஜ் - ரூ.38,999.

தற்போது, அமேசான் இந்தியாவில் கேலக்ஸி ஏ36 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.29,999 க்கு வாங்க கிடைக்கிறது. அதாவது ரூ.3000 நேரடி விலை குறைப்பின் கீழ் வாங்க கிடைக்கிறது. பேங்க் ஆபர் மற்றும் எக்ஸ்சேன்ஜை பயன்படுத்தினால், விலையை இன்னும் குறைக்க முடியும்.
ஆனால் இங்கே கவனிக்க வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் அமேசான் இந்தியா வலைதளத்தில் கேலக்ஸி ஏ36 5ஜி ஸ்மார்ட்போனின் ஒயிட் கலர் ஆப்ஷன் மட்டுமே மேற்கண்ட ஆபர் விலைக்கு (ரூ.29,999) பட்டியலிடப்பட்டுள்ளது. ஒருவேளை நீங்கள் வேறு கலர் ஆப்ஷனை தேர்வு செய்ய விரும்பினால் பிளிப்கார்ட்டுக்கு செல்லலாம்.
ஆனால் பிளிப்கார்ட்டில் உங்களுக்கு ரூ.500 விலை குறைப்பு மட்டுமே கிடைக்கும். பிளிப்கார்ட்டில் கேலக்ஸி 36 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் ஆப்ஷன் ரூ.32,499 க்கு வாங்க கிடைக்கிறது. இதே ஸ்டோரேஜ் ஆப்ஷன் சாம்சங் இந்தியா ஆன்லைன் வலைத்தளம் வழியாகவும் கூட ரூ.32,499 க்கு தான் வாங்க கிடைக்கிறது. ஆக அமேசான் வழியாக ஒயிட் கலர் ஆப்ஷனை வாங்கினால் மட்டுமே உங்களால் நிறைய பணத்தை மிச்சப்படுத்த முடியும்.
ஒருவேளை நீங்கள் கேலக்ஸி ஏ36 5ஜி ஸ்மார்ட்போனின் மற்ற ஸ்டோரேஜ் ஆப்ஷன்களை வாங்க விரும்பினால் அமேசான் இந்தியா வலைத்தளத்தில் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் ரூ.31,980 க்கு வாங்க கிடைக்கிறது. இதே ஆப்ஷன் பிளிப்கார்ட்டில் ரூ.35,499 க்கும், சாம்சங் இந்தியா ஆன்லைன் ஸ்டோரில் ரூ.36,499 க்கும் (விலை அதிகரித்துள்ளது) வாங்க கிடைக்கிறது.
சாம்சங் கேலக்ஸி ஏ36 5ஜி ஸ்மார்ட்போன்களின் முக்கிய அம்சங்கள்:
- 6.7-இன்ச் ஃபுல்எச்டி பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்பிளே
- எக்ஸினோஸ் 1580 சிப்செட்
- ஓஐஎஸ் ஆதரவுடன் 50எம்பி ப்ரைமரி சென்சார்
- 12 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- 5000mAh பேட்டரி
- 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்காக ஐபி67
புதிகாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள கேலக்ஸி ஏ57 5ஜி, கேலக்ஸி ஏ37 5ஜி விலை விவரங்கள்: சாம்சங் கேலக்ஸி ஏ57 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.56,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதே ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.62,499 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் ஆசம் நேவி, ஆசம் ஐசிப்ளூ மற்றும் ஆசம் லிலாக் ஆகிய 3 கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும். மறுபுறம் உள்ள சாம்சங் கேலக்ஸி ஏ37 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.41,999 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதே ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டுகளிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அவைகளின் விலைகள் முறையே ரூ.47,499 மற்றும் ரூ.52,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆசம் லாவெண்டர், ஆசம் சார்கோல் மற்றும் ஆசம் கிரேக்ரீன் ஆகிய 3 கலர்களில் வாங்க கிடைக்கும். இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுமே தற்போது அமேசானில் முன்பதிவுகளுக்காக பட்டியலிடப்பட்டுள்ளன, வருகிற ஏப்ரல் 2 ஆம் தேதி டெலிவரி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








