Home
Mobile

விஸ்வரூப விற்பனை.. வெறும் ரூ.11,384 போதும்..7000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. IP64 ரேட்டிங்.. எந்த மாடல்?

ரியல்மி பி4 லைட் 5ஜி (Realme P4 Lite 5G) ஸ்மார்ட்போனின் விற்பனை தள்ளுபடி போக தொடங்கிவிட்டது. மலிவான விலைக்கு 7000mAh பேட்டரி மட்டுமல்லாமல், 15W ஃபாஸ்ட் சார்ஜிங், பைபாஸ் சார்ஜிங், ரிவர்ஸ் சார்ஜிங் கொடுத்து உள்ளது. 144Hz டிஸ்பிளே, டைமன்சிட்டி 6300 சிப்செட் போன்ற முக்கிய பீச்சர்களில் பட்டையை கிளப்பி இருக்கிறது. இந்த ரியல்மி பி4 லைட் 5ஜி ஸ்மார்ட்போனின் விலை, விற்பனை மற்றும் பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.

4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.12,999ஆகவும், 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.13,999ஆகவும் இருக்கிறது. 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.15,999ஆக இருக்கிறது. ரூ.1,000 அறிமுக சலுகை போக விற்பனைக்கு கிடைக்கிறது. ஆகவே, ரூ.11,999 ஆரம்ப விலைக்கு இந்த ரியல்மி பி4 லைட் 5ஜி மாடலை வாங்கலாம்.

விஸ்வரூப விற்பனை.. வெறும் ரூ.11,384 போதும்..7000mAh பேட்டரி.. மாடல்?

மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.615 தள்ளுபடி கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த தள்ளுபடியை பெற்றால், ரூ.11,384 விலைக்கு வாங்கி கொள்ளலாம். பிளிப்கார்ட் மட்டுமல்லாமல், ரியல்மி தளத்திலும் விற்பனைக்கு கிடைக்கிறது. மோசைக் கிரீன் (Mosaic Green) மற்றும் மொசைக் ப்ளூ (Mosaic Blue) ஆகிய கலர்களில் பிரீமியம் லுக் கொடுக்கிறது.

6 ஜிபி ரேம் + 8 ஜிபிக்கு விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) கிடைக்கிறது. ஆகவே, 14 ஜிபிக்கான டைனாமிக் ரேம் அவுட்புட் கொடுக்கும். இந்த செக்மெண்ட்டில் ஏர்ப்ளோவ் சேம்பர் கூலிங் சிஸ்டம் கொண்ட முதல் மாடலாகவும் இந்த ரியல்மி பி4 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் இருக்கிறது. ரியல்மி யுஐ 7.0 (realme UI 7.0) பேஸ்டு ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கிடைக்கிறது.

ஏஐ பூஸ்ட் (AI Boost) கிடைக்கிறது. கேமராவுக்கு ஏஐ ஸ்மார்ட் இமேஜ் (AI Smart Image), ஏஐ எரைசர் 2.0 (AI Eraser 2.0), ஏஐ கிளியர் பேஸ் (AI Clear Face), ஏஐ ஸ்மார்ட் இமேஜ் மேட்டிங் (AI Smart Image Matting) போன்ற பீச்சர்கள் கிடைக்கிறது. IP64 ரேட்டிங் கொடுக்கும்படி டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust & Splah Resistant) கிடைக்கிறது. MIL-STD 810H சர்டிபிகேஷன் கிடைத்து உள்ளது.

ரியல்மி பி4 லைட் 5ஜி அம்சங்கள் (Realme P4 Lite 5G Specifications): 6.8 இன்ச் (1570 x 720 பிக்சல்கள்) ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளேவை இந்த ரியல்மி பி4 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. 144Hz ரெஃப்ரெஷ் ரேட், எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் மற்றும் 180Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. மேலும், 900 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 256 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கொடுக்கப்பட்டு உள்ளது.

பான்டா எம்என்228 (Panda MN228) கிடைக்கிறது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட்டை கொடுத்து உள்ளது. மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Mali G57 MC2 GPU) கொடுக்கப்பட்டு உள்ளது. 13 எம்பி மெயின் கேமரா மற்றும் செகண்டரி லென்ஸ் கிடைத்து உள்ளது. 5 எம்பி செல்பீ கேமராவை கொடுத்து இருக்கிறது.

ஃபைபாஸ் சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் சார்ஜிங் கிடைக்கிறது. 15W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 7000mAh பேட்டரி கிடைக்கிறது. 8.4 எம்எம் தடிமன் மற்றும் 212 கிராம் எடை கொடுத்து உள்ளது. பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர்களை கொடுத்து உள்ளது. சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் கிடைக்கிறது. 3.5 எம்எம் ஆடியோ ஜாக் கொடுக்கப்பட்டு உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme P4 Lite 5G With 4GB RAM 64GB Storage Available At Rs 11384 on Flipkart Check Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X