இதான் நல்ல நேரம்றது.. மார்ச் 25 வரும் 2 புது Samsung 5G போன்கள்.. இன்றே விலை குறைந்த முந்தைய மாடல்கள்!
சாம்சங் (Samsung) நிறுவனம் அடுத்த வாரம் இந்தியாவில், அதன் புதிய கேலக்ஸி ஏ-சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய தயாராக உள்ளது. அவைகள் சாம்சங் கேலக்ஸி ஏ57 5ஜி (Samsung Galaxy A57 5G) மற்றும் சாம்சங் கேலக்ஸி ஏ37 5ஜி (Samsung Galaxy A37 5G) ஸ்மார்ட்போன்கள் ஆகும்.
இந்த புதிய கேலக்ஸி ஏ-சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஆனது மார்ச் 25 ஆம் தேதி அன்று இந்திய நேரப்படி மாலை 5:30 மணிக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளன. இந்த அறிவிப்பு வெளியான வேகத்தில் முன்னதாக அறிமுகமான கேலக்ஸி ஏ56 5ஜி (Galaxy A56 5G) மற்றும் கேலக்ஸி ஏ36 5ஜி (Galaxy A36 5G) ஸ்மார்ட்போன்களின் விலைகள் அமேசான் இந்தியா மற்றும் பிளிப்கார்ட் ஆகிய 2 தளங்களிலுமே குறைக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ56 5ஜி ஸ்மார்ட்போன் மீதான விலை குறைப்பு: இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ56 5ஜி ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.41,999 க்கு அறிமுகமானது. ஆனால் தற்போது இது ரூ.1000 விலை குறைக்கப்பட்டு அமேசான் இந்தியா வழியாக ரூ.40,999 க்கு வாங்க கிடைக்கிறது
இதேபோல (பிளிப்கார்ட்டில்) 8ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷனும் ரூ.1000 விலை குறைக்கப்பட்டு ரூ.44,999 க்கு பதிலாக ரூ,43,999 க்கு வாங்க கிடைக்கிறது. கேலக்ஸி ஏ56 5ஜி ஸ்மார்ட்போனின் ஹை-எண்ட் வேரியண்ட் ஆன 12ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் ரூ.1000 விலை குறைக்கப்பட்டு ரூ.47,999 க்கு பதிலாக ரூ,46,999 க்கு வாங்க கிடைக்கிறது.
சாம்சங் கேலக்ஸி ஏ36 5ஜி ஸ்மார்ட்போன் மீதான விலை குறைப்பு: இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ36 5ஜி ஸ்மார்ட்போனின் மீதும் ரூ.500 விலை குறைக்கப்பட்டு உள்ளது. ரூ.32,999 க்கு அறிமுகமான 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் தற்போது பிளிப்கார்ட்டில் ரூ.32,499 க்கும், ரூ.35,999 க்கு அறிமுகமான 8ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் தற்போது பிளிப்கார்ட்டில் ரூ.35,499 க்கும் வாங்க கிடைக்கிறது.
சாம்சங் கேலக்ஸி ஏ56 5ஜி, சாம்சங் கேலக்ஸி ஏ36 5ஜி ஸ்மார்ட்போன்களின் முக்கிய அம்சங்கள்: சாம்சங் கேலக்ஸி ஏ36 5ஜி, சாம்சங் கேலக்ஸி ஏ36 5ஜி ஆகிய இரண்டுமே 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் கார்னிங் கொரில்லா விக்டஸ் பிளஸ் கிளாஸ் ப்ரொடெக்ஷன் உடனான 6.7-இன்ச் ஃபுல்எச்டி பிளஸ் (1080 x 2340 பிக்சல்ஸ்) சூப்பர் AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளன.
மேலும் இரண்டுமே ஆட்டோ டிரிம், பெஸ்ட் ஃபேஸ், ஏஐ செலக்ட் மற்றும் ரீட் அலவுட் போன்ற ஏஐ அம்சங்களை ஆதரிக்கின்றன. சிப்செட்டை பொறுத்தவரை சாம்சங் கேலக்ஸி ஏ56 5ஜி ஆனது எக்ஸினோஸ் 1580 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது, அதே நேரத்தில் சாம்சங் கேலக்ஸி ஏ36 5ஜி ஆனது ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 சிப்செட் உடன் வருகிறது. இரண்டுமே 12ஜிபி வரை ரேம், 256ஜிபி வரை இன்டர்னல் ஸ்டோரேஜை பேக் செய்கின்றன
கேமராக்களை பொறுத்தவரை கேலக்ஸி ஏ56 5ஜி ஆனது ஓஐஎஸ் ஆதரவுடன் 50எம்பி ப்ரைமரி சென்சார், 12எம்பி அல்ட்ராவைட் ஷூட்டர் மற்றும் 5 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி ஏ36 5ஜி மாடலும் இதே போன்ற செட்டப்பை தான் கொண்டுள்ளது. ஆனால் 8 மெகாபிக்சல் அல்ட்ராவைட் சென்சாரை கொண்டுள்ளது. மேலும் இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் 12 மெகாபிக்சல் செல்பீ கேமராக்கள் உள்ளன.
பேட்டரியை பொறுத்தவரை இரண்டுமே 5000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. மேலும் 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கின்றன மற்றும் தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்காக ஐபி67 ரேட்டிங் கட்டமைப்பை கொண்டுள்ளன. கடைசியாக, கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை 5ஜி, 4ஜி LTE, வைஃபை, ப்ளூடூத் 5.3, ஜிபிஎஸ், என்எப்சி மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகியவைகளை கொண்டுள்ளன.


Click it and Unblock the Notifications








