டைம்மிஷின் மூலம் நம்மை பார்க்க வரும் எதிர்கால மனிதர்கள் தான் ஏலியன்கள்..

|

இரவு நேரத்தில் வானத்தைப் பார்க்கும் போதெல்லாம், நட்சத்திரங்கள் நிறைந்த வானத்தில் தொடங்கி விண்வெளி பயணங்களை தவிர்த்து, நம் பிரபஞ்சத்தில் இருக்கும் மற்ற உயிர்களைப் பற்றி நம்மில் பெரும்பாலோர் நினைக்காமல் இருந்திருக்க முடியாது. நிச்சயமாக அப்படியொரு இனம் அல்லது அதைச் சார்ந்த பொருட்கள் எதையும் ஆதாரப்பூர்வமாக நாங்கள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்றாலும், சில சீரற்ற நிகழ்வுகள் அசாதாரணமானவை என்று நம்மை எண்ண வைக்கின்றன.

யுஎஃப்ஒக்கள்

யுஎஃப்ஒக்கள்

இதற்கு பல்வேறு கோட்பாடுகள் இருக்கும் நிலையில், சில ஏராளமான நம்பிக்கையை உருவாக்குகின்றன, சில தெளிவாக முட்டாள்தனமானவை. ஆனால் உண்மை என்னவென்றால் நாம் இதுவரை ஒரு ஏலியன் எனப்படும் வேற்றுகிரகவாசிகளை பார்த்ததில்லை, அதேசமயம் வானத்தில் சில விஷயங்கள் மர்ம பறக்கும் பொருட்கள் (யுஎஃப்ஒ) போல இருக்கக்கூடியவற்றை பார்த்துள்ளோம். எதுஎப்படியிருந்தாலும், நாம் கண்டறிந்த யுஎஃப்ஒக்கள் உண்மையில் எதிர்காலத்தில் இருந்து வந்த மனிதர்கள் என்று ஒரு ஆராய்ச்சியாளர் கருதுகிறார்.

மைக்கேல் மாஸ்டர்ஸின் கருத்து

மைக்கேல் மாஸ்டர்ஸின் கருத்து

புட்டேவில் உள்ள மொன்டானா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் உயிரியல் மானுடவியல் பேராசிரியரான மைக்கேல் மாஸ்டர்ஸின் கருத்து தான் இது. அவர் தனது புத்தகமான ‘அடையாளம் காணப்பட்ட பறக்கும் பொருள்கள்: யுஎஃப்ஒ நிகழ்வுக்கு ஒரு பன்முக அறிவியல் அணுகுமுறை' (Identified Flying Objects: A Multidisciplinary Scientific Approach To The UFO Phenomenon)இதுகுறித்து பேசியுள்ளார்.

தொழில்நுட்பம்

தொழில்நுட்பம்

நமது தொழில்நுட்பம் முன்னேறும் வேகத்துடன் ஒப்பிடும்போது, எதிர்கால மனிதர்கள் கடந்த காலத்திற்கு திரும்பிவருவதற்கான தொழில்நுட்பத்தை உருவாக்கியிருக்கலாம் என்று அவர் கருதுகிறார்.

 அறியப்படாத கேள்வி

அறியப்படாத கேள்வி

ஸ்பேஸ்.காம் உடனான உரையாடலில் அவர் கூறியதாவது "இந்த நிகழ்வின் விந்தைகளை புரிந்துகொள்வதற்கும் முயற்சி செய்வதற்கும் நான் ஒரு பன்முக அணுகுமுறையை கையாண்டேன். விஞ்ஞானிகளாகிய எங்கள் வேலை பெரிய கேள்விகளைக் கேட்டு, அறியப்படாத கேள்விகளுக்கான பதில்களைக் கண்டுபிடிக்க முயற்சிக்க வேண்டும். இங்கே ஏதோ நடக்கிறது எனும் மோது அதைப் பற்றி நாங்கள் உரையாட வேண்டும். அது என்ன என்பதைக் கண்டுபிடிக்கும் முயற்சிப்பதில் நாங்கள் முன்னணியில் இருக்க வேண்டும் " என்றார்.

கணிசமான நேரத்தில் பரிணமித்த மனிதர்களாக இருக்கலாம்

கணிசமான நேரத்தில் பரிணமித்த மனிதர்களாக இருக்கலாம்

வேற்றுகிரகவாசிகளுடன் கூடிய பெரும்பாலான சம்பவங்கள் அவற்றை இரு கால்களுடன், முடி இல்லாத, பெரிய கண்கள், சிறிய மூக்குகள் என பெரும்பாலும் மனிதனைப் போன்றவை என்று விவரிக்கின்றன. மூத்த ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப் படி, இது வெறுமனே கணிசமான நேரத்தில் பரிணமித்த மனிதர்களாக இருக்கலாம். உண்மையில், உலகெங்கிலும் உள்ள பல இடங்களில் தொல்பொருள் அகழ்வாராய்ச்சியின் மூலம் நாம் நமது கடந்த காலத்தை புரிந்துகொள்ள முயற்சிப்பது போலவே, இவர்களும் எதிர்கால விஞ்ஞானிகள், வரலாற்றாசிரியர்கள் என்று அவர் கருதுகிறார்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
UFOs And Aliens Are Just Future Humans Visiting Us In A Time Machine, Say Scientists : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X