Home
Tablets

ஏப்.30-ல் 13380mAh பேட்டரி உடன் புது OnePlus Pad.. இப்போதே ரூ.3000 விலை குறைந்த 12140mAh பேட்டரி மாடல்!

ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனமானது, இந்தியாவில் வருகிற ஏப்ரல் 30 ஆம் தேதி அன்று இந்திய நேரப்படி மதியம் 12 மணிக்கு ஒரு புதிய டேப்லெட்டை அறிமுகம் செய்யவுள்ளதை உறுதிப்படுத்தி உள்ளது. அது ஒன்பிளஸ் பேட் 4 (OnePlus Pad 4) மாடலாகும்.

பிளிப்கார்ட், அமேசான் மற்றும் ஒன்பிளஸ் இந்தியா ஆன்லைன் ஸ்டோரில் ஏற்கனவே இந்த டேப்லெட்டிற்கான பிரத்யேக மைக்ரோசைட்டுகள் நேரலைக்கும் வந்துள்ளன. இதோடு ஒன்பிளஸ் பேட் 4 ஆனது 13,380mAh பேட்டரி உடன் குவால்காமின் பிளாக்ஷிப் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட் மூலம் இயக்கப்படும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது ஒன்பிளஸ் 15 மாடலில் உள்ள அதே சிப்செட் ஆகும்.

ஏப்.30-ல் புது OnePlus Pad.. ரூ.3000 விலை குறைந்த 12140mAh மாடல்!

இப்படியாக "புதிய" ஒன்பிளஸ் பேட் 4 மாடலின் மீதான எதிர்பார்ப்புகள் ஒருபக்கம் எகிற, மறுபக்கம் இதற்கு முன்னதாக வெளியான "பழைய" ஒன்பிளஸ் பேட் 3 மீது பலமான பேங்க் டிஸ்கவுண்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் இந்தியா மற்றும் அமேசான் இந்தியா ஆகிய 2 தளங்களிலுமே ஒன்பிளஸ் பேட் 3 மாடலின் மீது ரூ.3000 பேங்க் டிஸ்கவுண்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ரூ.49,999 க்கு வாங்க கிடைக்கும் ஒன்பிளஸ் பேட் 3 மாடலின் விலையை ரூ.46,999 வரை குறைக்க முடியும். நினைவூட்டும் வண்ணம் அறிமுகத்தின் போது இந்த டேப்லெட்டின் ஆரம்ப விலை ரூ.47,999 ஆக இருந்தது. பின்னர் ரூ.2000 விலை உயர்வை பெற்று தற்போது ரூ.49,999 க்கு வாங்க கிடைக்கிறது. அதாவது இதுநேரடி விலை குறைப்பை பெறவில்லை. மாறாக பேங்க் டிஸ்கவுண்ட் வழியிலான விலை குறைப்பை மட்டுமே பெறுகிறது.

ஒன்பிளஸ் பேட் 3 முக்கிய அம்சங்கள்: ஒன்பிளஸ்-ன் இந்த புதிய டேப்லெட் ஆனது 144Hz வரையிலான ரெப்ரெஷ் உடனான 13.2-இன்ச் 3.4K LCD டிஸ்பிளே மற்றும் TÜV Rheinland ஐ கேர் 4.0 சான்றிதழை கொண்டுள்ளது. மேலும் ஸ்னாப்டிராகன் 8 எலைட் (Snapdragon 8 Elite) சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது, இது 16ஜிபி வரையிலான LPDDR5T ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இது 12140mAh பேட்டரியை பேக் செய்கிறது.

ஒன்பிளஸ் பேட் 3 விரிவான அம்சங்கள் (OnePlus Pad 3 Features Specifications):
- 13.2-இன்ச் 3.4கே (2400 × 3392 பிக்சல்ஸ்) எல்சிடி டிஸ்பிளே
- 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- 600 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- 540ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட்
- TÜV ரெயிண்லேண்ட் ஐ கேர் 4.0 சான்றிதழ்

- அட்ரெனோ 830 ஜிபியு
- ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்
- 16ஜிபி வரை LPDDR5T ரேம்
- 512GB வரை UFS 4.0 இன்டர்னல் ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அடிப்படையிலான ஆக்சிஜன் ஓஎஸ் 15 (OxygenOS 15)
- கூகுள் ஜெமினை (Google Gemini), சர்க்கிள் டூ சேர்ச் (Circle to Search) மற்றும் ஒன்பிளஸ் ஏஐ (OnePlus AI) அம்சங்கள்

- பின்புறத்தில் 13-மெகாபிக்சல் சென்சார்
- முன்பக்கத்தில் 8-மெகாபிக்சல் சென்சார்
- எட்டு ஸ்பீக்கர்ஸ்
- LHDC ஆடியோ கோடெக்கை ஆதரிக்கிறது
- ஹை-ரெஸ் ஆடியோ வயர்லெஸ் சான்றிதழுடன் வருகிறது
- வெப்ப மேலாண்மைக்கான கிராஃபீன் கம்போசைட் வேப்பர் சேம்பர்களை கொண்டுள்ளது.

- 80W சூப்பர்வூக் பாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவு
- 12140mAh பேட்டரி
- ப்ளூடூத் 5.4
- வைஃபை 7
- யூஸ்எஸ்பி டைப்-சி ஆதரவு
- ஒன்பிளஸ் ஸ்டைலோ 2 (OnePlus Stylo 2) மற்றும் ஒன்பிளஸ் ஸ்மார்ட் கீபோர்டுடன் இணக்கமானது
- அளவீட்டில் 289.61×209.66×5.97மிமீ
- எடையில் 675 கிராம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Pad 3 gets Rs 3000 Bank Discount Ahead OnePlus Pad 4 India Launch on April 30
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X