EPFO அக்கவுண்ட் இருக்கா.. பேலன்ஸ் எவ்வளவு இருக்கு.. உடனே இதை பண்ணுங்க.. எம்ஐடி டீ-லிங்க் செய்வது எப்படி?
இபிஎஃப்ஓ (EPFO) என்று சுருக்கமாக அழைக்கப்படும் பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (Employees Provident Fund Organization) ஆனது தவறாக உருவாக்கப்பட்ட மெம்பர் ஐடிகளை டீ-லிங்கிங் (MID De-Linking) செய்ய அவகாசம் கொடுத்தது. இப்போது, அவகாசத்தை நீட்டிப்பு செய்து உள்ளது. ஆன்லைனில் மெம்பர் ஐடிகளை டீ-லிங்கிங் செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்ளலாம்.
பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் அக்கவுண்ட் வைத்திருக்கும் நபர்களுக்கு யுஏஎன் (UAN) என்று சுருக்கமாக அழைக்கப்படும் யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர் (Universal Account Number) கொடுக்கப்படுகிறது. இந்த ஒரேவொரு அக்கவுண்ட் நம்பரின் கீழ் மெம்பர் ஐடிகள் இணைக்கப்படுகின்றன. அதாவது, ஒவ்வொரு கம்பெனிக்கும் ஒரு மெம்பர் ஐடி கொடுக்கப்படும்.

இப்படி எத்தனை கம்பெனிகளில் சேர்ந்தாலும், அதற்கு ஒரு மெம்பர் ஐடி உருவாக்கப்படும். இதில் கொடுக்கப்பட்ட விவரங்கள், பேங்க் அக்கவுண்ட், பான் கார்டு ஆகியவற்றுடன் பொருந்த வேண்டும். இல்லையென்றால், அதில் பரிவர்த்தனை செய்வது சிரமமாக இருக்கும். இப்படி தவறாக இருக்கும் மெம்பர் ஐடிகளை டீ-லிங்கிங் செய்ய இபிஎஃப்ஓ உத்தரவிட்டது.
இதை ஆன்லைனில் செய்து முடிக்க வழிவகை செய்தது. இப்போது, இதற்கான காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆகவே, பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் அக்கவுண்ட் வைத்திருக்கும் நபர்கள் தவறான மெம்பர் ஐடிகளை எளிதாக ஆன்லைனில் டீ-லிங்கிங் செய்து கொள்ளுங்கள். இதை எப்படி செய்வது என்பதை இப்போது பார்க்கலாம்.
எம்ஐடி டீ-லிங்க் செய்வது எப்படி?
1. அதிகாரப்பூர்வ இபிஎஃப்ஓ மெம்பர் ஹோம் (EPFO Member Home) போர்ட்டலுக்கு சென்று கொள்ளுங்கள். இப்போது, லாகின் பேஜ்ஜிக்கு சென்று, யுஏஎன் (UAN) மற்றும் பாஸ்வேர்ட் கொடுத்து ஓப்பன் செய்து கொள்ளுங்கள்.
2. மெனு ஆப்ஷனில் இருக்கும் சர்வீஸ் ஹிஸ்டரி (Service History) தோன்றும். இதை கிளிப் செய்து ஓப்பன் செய்தால், இபிஎஃப்ஓ அக்கவுண்ட்டுடன் லிங்க் செய்யப்பட்ட மெம்பர் ஐடிக்கள் காண்பிக்கப்படும். இதில் வியூ சரவீஸ் டீடெயில்ஸ் (View Service Details) இருக்கும்.
3. இதை கிளிக் செய்தால், மெம்பர் ஐடி (Member ID), பெயர், பணியில் சேர்ந்த தேதி (DOJ) மற்றும் பணியிலிருந்து விலகிய தேதி (DOE) உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றிருக்கும். இதை சரிபார்த்து கொள்ளுங்கள். இதில் தவறு இருக்கும் மெம்பர் ஐடியை தேர்ந்தெடுத்து, டீ-லிங்க் விருப்பத்தை கிளிக் செய்து கொள்ளுங்கள்.
4. இப்போது, டீ-லிங்க் செய்ய மெம்பர் ஐடியானது சரிபார்க்கப்படும். இதில் நிறுவனமும் சரிபார்ப்பில் அடங்கும். 2 வாரத்துக்குள் நிறுவனமானது, இந்த டீ-லிங்க் கோரிக்கையை ஏற்று கொள்ள வேண்டும் அல்லது சரியான காரணத்தை கூறி நிராகரிக்க வேண்டும். இல்லாதபட்சத்தில் இபிஎஃப்ஓ அதிகாரிகளுக்கு மாற்றப்படும்.
டீ-லிங்க் செய்யப்பட்டால் என்னவாகும்?
மெம்பர் ஐடி டீ-லிங்க் செய்யப்பட்டவுடன் அதில் இருக்கும் தொகை எஸ்ஆப்எப் (SRF) என்று சுருக்கமாக அழைக்கப்படும் சஸ்பென்ஸ் ரிசர்வ் ஃபண்ட் (Suspense Reserve Fund) அக்கவுண்ட்டுக்கு மாற்றப்படும். இந்த பணத்தை எப்படி பெறுவது என்பது குறித்து இபிஎஃப்ஓ வழிகாட்டுதல்களை வெளியிடும்.
ஆன்லைன் செயல்முறையாக இருப்பதால், சில நிமிடங்களில் முடிக்கலாம். தவறான மெம்பர் ஐடியில் குறைவான பேலன்ஸ் இருக்கும் போதே அதை டீ-லிங்க் செய்து கொள்ள வேண்டும். ஆகவே, இபிஎஃப்ஓ அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள், டீ-லிங்க் செய்யவில்லை என்றாலும், தவறாக இருக்கிறதா என்பதை ஆன்லைனில் அதை செக் செய்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








