பேங்க் அக்கவுண்ட்.. ரூ.10,000 மேல அனுப்ப புது ரூல்ஸ்.. அமலுக்கு வருது முக்கிய மாற்றம்.. RBI 1 மணி நேர ரூல்ஸ்!
பேங்க் அக்கவுண்ட் வைத்து இருக்கும் ஒட்டுமொத்த கஸ்டமர்களுக்கும் ஆர்பிஐ (RBI) என்கிற இந்திய ரிசர்வ் வங்கியின் (Reserve Bank of India) புதிய விதிகள் வயிற்றில் புளியை கரைத்துள்ளது. ரூ.10,000 மேல் பணத்தை அனுப்புவதில் 1 மணி நேர தாமதம் ஏற்படப்போகிறது.
டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளில் யுபிஐ (UPI), ஐஎம்பிஎஸ் (IMPS), நெப்ட் (NEFT), ஆர்டிஜிஎஸ் (RTGS) தவிர்க்க முடியாததாக இருக்கிறது. இதில் நெப்ட் தவிர மற்ற டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் ஒரு பேங்க் அக்கவுண்ட்டில் இருந்து மற்றொரு பேங்க் அக்கவுண்ட்டுக்கு பணத்தை வேகமாக மாற்றி கொள்ளலாம். இதை ஒரு மணி நேரம் இடைநிறுத்த இந்திய ரிசர்வ் வங்கி ஆனது விரும்புகிறது.

ரூ.10,000 மேல் பணத்தை அனுப்பும்போது 1 மணி நேரம் அந்த பணம் இடைநிறுத்தம் செய்யப்படும். பணத்தை அனுப்பியவரின் பேங்க் அக்கவுண்ட்டில் இருந்து பணம் எடுக்கப்பட்டுவிடும். ஆனால், அதை பெற வேண்டிய நபரின் பேங்க் அக்கவுண்ட்டுக்கு செல்லாது. 1 மணி நேர இடைநிறுத்தத்துக்கு பிறகே செல்லும். இந்த நேரத்தில் அனுப்பிவர் மீண்டும் பணத்தை திரும்ப பெறலாம்.
அதாவது, ரூ.10,000 பணத்தை அனுப்பிய பிறகு 1 மணி நேரத்துக்கு (60 நிமிடங்கள்) முன்பாக அந்த பரிவர்த்தனையை கேன்சல் செய்ய விருப்பம் கொடுக்கப்படும். இந்த கேன்சல் விருப்பத்தை பயன்படுத்தினால், மீண்டும் பேங்க் அக்கவுண்ட்டுக்கு அனுப்பிய பணம் வந்துவிடும். இது தெரியாத அல்லது சந்தேகத்துக்கு உரிய நபர்களிடம் பணத்தை அனுப்பும்போது பயன்படுத்தப்படும் விதியாக இருக்கிறது.
ஆகவே, ஒட்டுமொத்த பரிவர்த்தனைகளுக்கும் இந்த விதிகள் அமலுக்கு வராது. அதாவது, தனிநபர்களுக்கு இடையே பரிமாற்றம் செய்யப்படும் பணத்தில் மட்டுமே இந்த 1 மணி நேர இடைநிறுத்த விதிகள் அமலுக்கு வரும். தனிநபர்களிடம் இருந்து வணிகர்களுக்கு (Merchants) அனுப்பப்படும் பணம் வழக்கம்போல வேகமாக பரிமாற்றம் செய்யப்படும்.
1. ரூ.10,000 கீழ் பணத்தை அனுப்பும்போது, வழக்கமான வேகத்தில் பரிமாற்றம் நடக்கும். இது தனிநபர்களுக்கும் பொருந்தும். வணிகர்களுக்கும் பொருந்தும். ஆகவே, இந்த பரிவர்த்தனைகளை பேங்க் கஸ்டமர்கள் வழக்கம்போல செய்து கொள்ளலாம். இதற்கு 1 மணி நேர இடைநிறுத்தம் பொருந்தாது.
2. ஒயிட்லிஸ்ட் செய்யப்பட்ட நபர்களுக்கு பணத்தை அனுப்பும்போது 1 மணி நேர இடைநிறுத்தம பொருந்தாது. அதாவது, யுபிஐ பேமெண்ட்களில் ஏற்கனவே மொபைல் நம்பரை சேமித்து வைத்திருந்தால், ஐஎம்பிஎஸ், ஆர்டிஜிஎஸ் பரிவர்த்தனைகளில் பெறுபவரின் பேங்க் அக்கவுண்ட் விவரங்களை ஏற்கனவே சேமித்து வைத்து இருந்தால் இந்த 1 மணி நேர இடைநிறுத்தம் பொருந்தாது.
ஏற்கனவே, நெப்ட் பரிவர்த்தனையில் இதுபோன்ற இடைநிறுத்தம் இருக்கிறது. அதாவது, பணத்தை அனுப்பிய பிறகு அதை சரிபார்ப்பு செய்ய காலஅவகாசம் எடுத்து கொள்ளப்படும். பிறகு சரியான நபருக்கு பணம் அனுப்பி வைக்கப்படும். இந்த சரிபார்ப்பு விதிகளே இப்போது மற்ற பரிவர்த்தனைகளுக்கும் கொண்டுவரப்பட இருக்கிறது.
ஆனால், இது வழக்கமாக நடக்கும் பரிவர்த்தனைகளை தாமதப்படுத்தாது. தெரியாத தனி நபர்களிடம் பணத்தை அனுப்பும்போது, அது தவறாக அனுப்பப்பட்டுவிட்டால், அதை திரும்பப் பெற பேங்குகளை நாடுவது எளிதாக இருப்பது கிடையாது. இதனாலேயே இந்திய ரிசர்வ் வங்கி இந்த 1 மணி நேர இடைநிறுத்த விதிகளை கொண்டுவர இருக்கிறது.
இது விருப்பத்தின் அடிப்படையில் கொண்டுவரப்படலாம் அல்லது ஒயிட்லிஸ்ட் செய்யப்படாத தனிநபர்களுக்கு பணத்தை அனுப்பும்போது கொண்டுவரப்படலாம். இதனால், பணத்தை இழக்கும் நபர்களின் எண்ணிக்கை குறைக்கப்படும். அதே நேரத்தில் சந்தேகமாக இருந்தால், 1 மணி நேரத்தில் பேங்குகள் அல்லது கஸ்டமர்கள் சுதாரித்து அந்த பரிவர்த்தனையை கேன்சல் செய்யலாம்.
இந்திய ரிசர்வ் வங்கியின் இந்த 1 மணி நேர இடைநிறுத்த விதிகள் உடனடியாக அமலுக்கு கொண்டுவரப்படாது. ஆகவே, இப்போது வழக்கம்போல யுபிஐ, ஐஎம்பிஎஸ், ஆர்டிஜிஎஸ் போன்ற டிஜிட்டல் பரிவர்த்தனைகளை செய்து கொள்ளலாம். பேங்க் கஸ்டமர்கள் அனுப்பும் பணம் வேகமாக பெறுபவரின் பேங்க் அக்கவுண்ட்டுக்கு சென்று சேரும்.


Click it and Unblock the Notifications








