Home
Mobile

SONY-யின் புது சிங்கக்குட்டி.. 3.5மிமீ ஹெட்போன் ஜாக், வயர்லெஸ் சார்ஜிங் காம்பினேஷனில் புது 5ஜி போன்!

சோனி (SONY) நிறுவனம் ஆனது ஹெட்போன் ஜாக் ஆதரவு உடனான ஒரு புதிய ஸ்மார்ட்போனை உலக சந்தைகளில், கூடிய விரைவில் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது சோனி எக்ஸ்பீரியா 1 VIII (Sony Xperia 1 VIII) மாடல் ஆகும்.

ஏற்கனவே இந்த ஸ்மார்ட்போனின் டிசைன் குறித்த விவரங்கள் லீக் ஆகி இருந்த நிலையில், தற்போது சோனி எக்ஸ்பீரியா 1 VIII ஸ்மார்ட்போன் ஆனது அமெரிக்க ஃபெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷன் (US Federal Communications Commission - FCC) இணையதளத்தால் அங்கீகரிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் இந்த ஸ்மார்ட்போனை பற்றிய கூடுதல் விவரங்கள் வெளியாகியுள்ளது.

SONY-யின் புது சிங்கக்குட்டி.. புது 5ஜி போன்!

மாடல் பெயர் குறிப்பிடுவது போலவே புதிய சோனி எக்ஸ்பீரியா 1 VIII மாடல் ஆனது, கடந்த ஆண்டு மே மாதம் அறிவிக்கப்பட்ட எக்ஸ்பீரியா 1 VII மாடலின் நெக்ஸ்ட் ஜெனரேஷன் மாடலாக வரும் என்று நம்பப்படுகிறது. தற்போதுள்ள மாடல் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்டில் இயங்குகிறது.

எப்சிசி லிஸ்டிங் வழியாக, வரவிருக்கும் இந்த சோனி எக்ஸ்பீரியா ஸ்மார்ட்போனில் வயர்லெஸ் சார்ஜிங் வசதி இருக்கும் என்று தெரியவந்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் வைஃபை 7 மற்றும் 5ஜி கனெக்டிவிட்டி வசதிகள் இருப்பதாகவும் தெரிவிக்கிறது. சுவாரசியமாக இதில் 3.5மிமீ ஆடியோ ஜாக் இருப்பதையும் எப்சிசி லிஸ்டிங் குறிப்பிடுகிறது.

அதாவது பெரும்பாலான லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்கள் 3.5மிமீ ஜாக்கை கைவிட்டு வரும் நிலையில், எக்ஸ்பீரியா 1 VIII ஆனது, எக்ஸ்பீரியா 1 VII மாடலின் அணுகுமுறையை பின்பற்றி ஹெட்போன் ஜாக்கை தக்கவைத்து கொள்ளும் என்று எப்சிசி லிஸ்டிங் குறிப்பிடுகிறது. இது இன்னமும் வயர்டு ஹெட்போன்களை விரும்பும் பயனர்களுக்கு உண்மையிலேயே ஒரு குட் நியூஸ் தான்!

முன்னரே குறிப்பிட்டபடி, சோனி எக்ஸ்பீரியா 1 VIII ஸ்மார்ட்போனின் டிசைன் குறித்த விவரங்களும் முன்னதாக வெளியாகி இருந்தது. அதன்படி இது மறுவடிவமைப்பு செய்யப்பட்ட சதுர வடிவ பின்புற கேமரா மாட்யூலை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த புதிய போன், சோனியின் தற்போதைய வடிவமைப்பு முறையிலிருந்து மாறுபட்டு, ஹோல்-பஞ்ச் டிஸ்ப்ளே வடிவமைப்பை கொண்டிருக்கும் என்றும் வதந்திகள் பரவி வருகின்றன.

அதாவது புதிய சோனி எக்ஸ்பீரியா 1 VIII ஸ்மார்ட்போன் ஆனது ரியர் கேமரா மாட்யூலைச் சுற்றி சிறிய கட்அவுட்களை கொண்டிருக்கக்கூடும். இது எல்இடி ஃபிளாஷுடன் கூடிய ட்ரிபிள் பின்புற கேமரா யூனிட்டை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது கடந்த ஆண்டு மே மாதம் வெளியிடப்பட்ட சோனி எக்ஸ்பீரியா 1 VII மாடலை விட மேம்படுத்தப்பட்ட அம்சங்களை வழங்கும் என்றும், பிளாக், க்ரீன் மற்றும் பர்பிள் கலர்களில் அறிமுகமாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டும் சோனி நிறுவனம் "இதேபோன்ற" கால அட்டவணையை (மே மாத வெளியீடு) பின்பற்றும் என்றும், வரும் வாரங்களில் இந்த ஸ்மார்ட்போனின் அறிமுகம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் நாம் எதிர்பார்க்கலாம். நினைவூட்டும் வண்ணம் சோனி எக்ஸ்பீரியா 1 VII ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஜிபிபி 1,399 (சுமார் ரூ.1,56,000) க்கு அறிமுகமானது

சோனி எக்ஸ்பீரியா 1 VII ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இது ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்கொண்டு இயங்குகிறது. இது 12ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது 5,000mAh பேட்டரியை பேக் செய்கிறது. இதில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உள்ளது. கடைசியாக இதில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.5-இன்ச் ஃபுல்-எச்டி பிளஸ் டிஸ்பிளே உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Sony Xperia 1 VIII With Headphone Jack Wireless Charging Support Launching Soon in global markets Report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X