ஓடுங்க! பழுது அடைந்த NASA செயற்கைகோள்.. எந்த நாட்டில் விழும் என்று கணித்த விஞ்ஞானிகள்!

|

பழுது அடைந்த காரணத்தினால் பூமியை நோக்கி வரும் நாசா செயற்கைகோள் (NASA Satellite) ஒன்று, சரியாக எந்த நாட்டில் விழும் என்று விஞ்ஞானிகள் கணித்து உள்ளனர்.

அதுமட்டுமின்றி, குறிப்பிட்ட நாட்டு மக்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நாசா செயற்கைகோள் பழுதடைய என்ன காரணம்? அது எந்த நாட்டின் மீது விழுந்து நொறுங்கிப்போகிறது? இதோ விவரங்கள்:

மிகவும் பழைய செயற்கைகோள்!

மிகவும் பழைய செயற்கைகோள்!

பூமியை நோக்கி வரும் அமெரிக்க செயற்கைகோள் அந்த மிகவும் பழைய செயற்கைகோள் ஆகும். இது கடந்த 1984 ஆம் ஆண்டில் ஏவப்பட்ட எர்த் ரேடியேஷன் பட்ஜெட் சாட்டிலைட் (Earth Radiation Budget Satellite - ERBS) ஆகும்.

சூரியனிடம் இருந்து பூமி எவ்வாறு ஆற்றலை உறிஞ்சுகிறது என்பதை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட எர்த் ரேடியேஷன் பட்ஜெட் சாட்டிலைட், பல தசாப்தங்களுக்கு பிறகு பழுதடைந்துள்ளது.

திக் திக் நிமிடங்கள்! அது தான் பூமியின் கடைசி நாளாக இருக்கும்? நெடுநாள் மர்மத்தை உடைத்த NASA விஞ்ஞானிகள்!திக் திக் நிமிடங்கள்! அது தான் பூமியின் கடைசி நாளாக இருக்கும்? நெடுநாள் மர்மத்தை உடைத்த NASA விஞ்ஞானிகள்!

பெரும்பாலும் எரிந்து சாம்பலாகி விடும்.. ஆனாலும்?

பெரும்பாலும் எரிந்து சாம்பலாகி விடும்.. ஆனாலும்?

பொதுவாக பூமியின் வளிமண்டலத்திற்குள் (Earth Atmosphere) நுழையும் போது, பெரும்பாலான செயற்கைக்கோள்கள் தீக்கு இரையாகும்; அதாவது எரிந்துவிடும்.

இருந்தாலும் கூட செயற்கைகோளின் சில பகுதிகள் / பாகங்கள் - முழுமையாக சாம்பல் ஆகாமல், தீயை தாக்குப்பிடித்து - பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழையலாம்.

உயிர் சேதம் ஏற்படுமா?

உயிர் சேதம் ஏற்படுமா?

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவின் கூற்றுப்படி, பழுதடைந்துள்ள அமெரிக்க செயற்கைகோளின் எடை 5400 பவுண்டு ஆகும்; அதாவது சுமார் 2450 கிலோகிராம் ஆகும்.

இது பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழையும் போதும் / பயணிக்கும் போதும் "பெரும்பாலும்" எரிந்து விடும். ஆனால் சில பாகங்கள் மட்டும் பூமியில் வந்து விழும். ஆனாலும் கூட அவைகள் பூமியில் உள்ள எவருக்கும் தீங்கு விளைவிக்கும்படி இருக்காது என்று நாசா கணித்துள்ளது.

தயாரா இருங்க! 7 நிமிடங்கள் 32 நொடிகள் இருளில் மூழ்கப்போகும் பூமி! சரியான தேதியை கணித்துள்ள விஞ்ஞானிகள்!தயாரா இருங்க! 7 நிமிடங்கள் 32 நொடிகள் இருளில் மூழ்கப்போகும் பூமி! சரியான தேதியை கணித்துள்ள விஞ்ஞானிகள்!

இது எந்த நாட்டின் மீது விழும்?

இது எந்த நாட்டின் மீது விழும்?

விஞ்ஞானிகளின் கணிப்புப்படி, இந்த பழைய அமெரிக்க செயற்கைகோளானது கொரிய தீபகற்பத்தில் (Korean Peninsula) விழுந்து நொறுங்கலாம். இது குறித்து கொரிய மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

வெறும் இரண்டு ஆண்டுகள் மட்டுமே செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த செயற்கைகோள், கடந்த 2005 ஆம் ஆண்டு வரை நன்றாகவே செயல்பட்டது. பின்னர் இது ஒரு பெரிய விண்வெளி குப்பையாக (Space Junk) மாறியது; மெதுவாக பூமியை நோக்கி விழ ஆரம்பித்தது. இப்போது கூடிய விரைவில் கொரிய தீபகற்பத்தில் விழுந்து நொறுங்க உள்ளது!

சீனாவை தொடர்ந்து அமெரிக்கா!

சீனாவை தொடர்ந்து அமெரிக்கா!

பழுதடைந்த செயற்கைகோள் ஒன்று, பூமி மீது வந்து விழுவது இதுவொன்றும் முதல் முறை அல்ல. விண்வெளி ஆராய்ச்சியில் இது மிகவும் சகஜமான விஷயம் ஆகும்.

நினைவூட்டும் வண்ணம், கடந்த 2022 ஆம் ஆண்டில், சீனாவின் லாங் மார்க் 5 ராக்கெட் (Long March 5) ஆனது பூமியில் வந்து விழுந்தது. சுமார் 23 டன் எடையுள்ள இந்த சீன ராக்கெட் ஆனது பசிபிக் பெருங்கடலில் விழுந்ததால், அது எந்தவிதமான சேதங்களையும் ஏற்படுத்தவில்லை.

குறிப்பிட்ட சீன ராக்கெட்டை போலவே, பழுதடைந்த அமெரிக்க செயற்கைகோளும் பத்திரமாக விழுந்தால் நன்றாக இருக்கும்!

பூமியில் மோதும் செயற்கைக்கோளிற்கும், அணு குண்டுக்கும் உள்ள ஒற்றுமை!

பூமியில் மோதும் செயற்கைக்கோளிற்கும், அணு குண்டுக்கும் உள்ள ஒற்றுமை!

பூமியின் மீது, ஒரு செயற்கைக்கோளின் சிறிய பகுதி வந்து விழுந்தாலும் கூட, அவற்றின் அதிர்வுகள் கணிசமான சேதத்தை ஏற்படுத்தும்.

பூமி மீது வந்து மோதும் செயற்கைக்கோள்களின் இயக்க ஆற்றல் (Kinetic energy) அணு குண்டுகளை வீசுவது போல இருக்கும்.

இன்னொரு திகிலான தகவல் என்னவென்றால், செயல் இழந்தது பூமியில் மோதும் செயற்கைக்கோள்களுக்கும், அணு குண்டுகளுக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது - இந்த இரண்டிலுமே கதிரியக்கம் (Radioactive) இருக்கும்.

Photo Courtesy: NASA, Wikipedia

Best Mobiles in India

English summary
Scientists Guess The Old NASA Satellite Will Fall On Korean Peninsula and Do Not Make Any Harm

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X