Home
Mobile

வெளுத்து கட்டிய விவோ.. பட்ஜெட்ல 200MP கேமரா.. 7000mAh பேட்டரி.. 90W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

விவோ நிறுவனத்தின் புதிய மாடலான விவோ வி70 எப்இ (Vivo V70 FE) ஸ்மார்ட்போனின் முழு பீச்சர்கள் மார்கெட்டில் கசிந்துள்ளன. விவோ வி70 சீரிஸ் மாடல்கள் ஏற்கனவே இந்திய மார்கெட்டில் கிடைப்பதால், அதைவிட மலிவான விலைக்கு இந்த மாடலை எதிர்பார்க்கலாம். இந்த விவோ வி70 எப்இ ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

இந்திய மார்கெட்டில் விவோ வி70 (Vivo V70) மற்றும் விவோ வி70 எலைட் (Vivo V70 Elite) ஆகிய மாடல்கள் வெளியாகிவிட்டன. இதே சீரிஸில் அடுத்த மாடலாக விவோ வி70 எப்இ வெளியாக இருக்கிறது. பிப்ரவரி 28ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு ஏற்ப முழு பீச்சர்களும் மார்கெட்டில் கசிந்துவிட்டன. இதை முதலில் பார்ப்போம்.

வெளுத்து கட்டிய விவோ.. பட்ஜெட்ல 200MP கேமரா.. 7000mAh பேட்டரி!

விவோ வி70 எப்இ அம்சங்கள் (Vivo V70 FE Specifications): 6.83 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைத்துள்ளது. 1.5K ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. ரவுண்டெட் கார்னர் டிசைன் கொண்டுள்ளது. 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொடுக்கப்பட்டு உள்ளது. 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கிடைக்க உள்ளது.

200 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா கொடுக்கப்பட்டு உள்ளது. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. மேலும், ஏஐ டிராவல் போர்ட்ராய்டு (AI Travel Portrait), ஏஐ ரீடச் (AI Retouch), ஏஐ பெஸ்ட் பேஸ் (AI Best Face) மற்றும் ஃபிலிம் போட்டோ மோட் (Film Photo Mode) கிடைக்கிறது.

செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக 32 எம்பி செல்பீ கேமராவை இந்த விவோ வி70 எப்இ ஸ்மார்ட்போன் கொடுத்து உள்ளது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7360 டர்போ 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7360 Turbo 4nm) சிப்செட் கொடுக்கப்பட்டு உள்ளது. ஓர்ஜின்ஓஎஸ் 6 (OriginOS 6) மற்றும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) உள்ளது.

6 வருடங்களுக்கு சிஸ்டம் அப்டேட் மற்றும் 5 வருடங்களுக்கு ஸ்மூத் பர்ஃபாமென்ஸ் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த விவோ வி70 எப்இ ஸ்மார்ட்போனில் 7000mAh பேட்டரி மற்றும் 90W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட பேக்கப் சிஸ்டம் கொண்டுள்ளது. மேலும், IP68 ரேட்டிங் மற்றும் IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உள்ளது.

டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Dual Stereo Speakers) கிடைக்கின்றன. மியூஸ் பர்பிள் (Muse Purple), ஓசன் ப்ளூ (Ocean Blue) மற்றும் டைட்டானியம் சில்வர் (Titanium Silver) ஆகிய கலர்களில் இந்த விவோ வி70 எப்இ ஸ்மார்ட்போன் கிடைக்க உள்ளது. பிப்ரவரி 28ஆம் தேதி வெளியாக வாய்ப்புள்ளது. விவோ வி70 மற்றும் விவோ வி70 எலைட் மாடல்களைவிட மலிவான விலைக்கு கிடைக்கும்.

இந்திய மார்கெட்டில் விவோ வி70 ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மெமரி கொண்ட ஆரம்ப வேரியண்ட்டின் விலை ரூ.45,999ஆக இருக்கிறது. ஆகவே, இந்த விவோ வி70 எப்இ ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை அதைவிட மலிவாக இருக்கும். ரூ.30,000 பட்ஜெட்டுக்குள் எதிர்பார்க்கலாம். ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வர வாய்ப்புள்ளது.

Best Mobiles in India

English summary
Vivo V70 FE With 7000mAh Battery 200MP Camera Specifications Leaked Ahead Of Launch
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X