பொளக்கும் விற்பனை.. வெறும் ரூ.11,000 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 45W பாஸ்ட் சார்ஜிங்.. 18GB ரேம்.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் நடக்கும் பிளிப்கார்ட் மாத இறுதி மொபைல் சேல் (Flipkart Month End Mobile Festival Sale) என்னும் சிறப்பு விற்பனையில் மலிவான விலைக்கு ரியல்மி ஸ்மார்ட்போன்கள் கிடைக்கின்றன. இதில் ரியல்மி பி3 லைட் 5ஜி (Realme P3 Lite 5G) ஸ்மார்ட்போன் ரூ.11,000 பட்ஜெட்டில் வாங்க கிடைக்கிறது. இந்த தள்ளுபடி விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 6 ஜிபி ரேம் (12 ஜிபி விர்ச்சுவல் ரேம்) மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட மாடலுக்கு 14 சதவீத டிஸ்கவுண்ட் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த டிஸ்கவுண்ட் போக ரூ.11,999 விலைக்கு வாங்கி கொள்ளலாம். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.600 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.11,399 விலைக்கு இந்த ரியல்மி பி3 லைட் 5ஜி மாடல் கிடைக்கிறது.

பட்ஜெட் மட்டுமல்லாமல், ஸ்லிம் டிசைனில் ஸ்மார்ட்போனை விரும்பும் பிரியர்களுக்கு ஏற்பவும் இந்த ரியல்மி பி3 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. ஏனென்றால், 7.94 எம்எம் தடிமன் மட்டுமே கொடுத்துள்ளது. 197 கிராம் எடை கொடுத்துள்ளது. ஸ்லிம் மாடலாக இருப்பதால், பேட்டரி கேபாசிட்டி பெரியாக என்று சொல்ல முடியாது. இதில் 6000mAh பேட்டரி கிடைத்துள்ளது.
மேலும், டியூரபிலிட்டியிலும் எந்த குறையும் சொல்ல முடியாது. இந்த பட்ஜெட்டில் எதிர்பார்க்காத டிசைன் மட்டுமல்லாமல், மிலிட்டரி கிரேடு ஷாக் ரெசிஸ்டன்ஸ் (Military Grade Shock Resistance), டிராப் ரெசிஸ்டன்ஸ் கொடுத்துள்ளது. இதற்காக எம்ஐ-எஸ்டிடி-810எச் (MIL-STD 810H) சர்டிபிகேஷனை கொடுத்து உள்ளது. 300 சதவீத அல்ட்ரா சவுண்ட் பூஸ்ட் கொடுக்கப்பட்டு உள்ளது.
6 ஜிபி ரேம் மட்டுமல்லாமல், 12 ஜிபிக்கான விர்ச்சுவல் (Virtual RAM) கிடைத்துள்ளது. மேலும், 2 டிபிக்கு மைக்ரோஎஸ்டி கார்டு (microSD Card) சப்போர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது. ரெயின்வாட்டர் ஸ்மார்ட் டச் (Rainwater Smart Touch), ஐ புரொடெக்சன் (Eye Protection) டிஸ்பிளே கொடுக்கப்பட்டு உள்ளது. ஏஐ ஸ்மார்ட் சிக்னல் அட்ஜஸ்ட்மெண்ட் (AI Smart Signal Adjustment) கிடைக்கிறது.
ரியல்மி பி3 லைட் 5ஜி அம்சங்கள் (Realme P3 Lite 5G Specifications): 6.67 இன்ச் (720 x 1604 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளேவை இந்த ரியல்மி பி3 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்து உள்ளது. மேலும், எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் மற்றும் 120 Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கப்பட்டு உள்ளது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப் உள்ளது.
ஒரு வருட பழைய மாடலாக இருப்பதால், ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மட்டுமே கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும், ரியல்மி யுஐ 6.0 (realme UI 6.0) கிடைக்கிறது. சிப்செட்டுக்கு ஏற்ப அவுட்புட் கொடுக்கும்படி ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைத்துள்ளது. 6 ஜிபி ரேம் மட்டுமல்லாமல், 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி மாடலும் கிடைக்கிறது.
32 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி செல்பீ கேமராவை இந்த ரியல்மி பி3 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. 45W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொடுத்துள்ளது. 7.94 எம்எம் தடிமனில் 6000mAh பேட்டரி கொடுக்கிறது. பர்பிள் பிளாசம், மிட்நைட் லில்லி மற்றும் லில்லி ஒயிட் ஆகிய கலர்களில் இந்த ரியல்மி பி3 லைட் 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications