மார்ச் 5 வரை எந்த போனும் வாங்காதீங்க.. 10001mAh பேட்டரி.. வருகிறது புது Realme 5ஜி போன்.. எந்த மாடல்?
ரியல்மி நிறுவனம் தனது புதிய ரியல்மி நார்சோ பவர் 5ஜி (realme Narzo Power 5G) வரும் மார்ச் 5-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் அட்டகாசமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவரும். மேலும் இந்த ரியல்மி ஸ்மார்ட்போனின் விவரக்குறிப்புகள் மற்றும் விலை குறித்த தகவல்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது.
ரியல்மி நார்சோ பவர் 5ஜி அம்சங்கள் (realme Narzo Power 5G Specifications): சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 7400 அல்ட்ரா 5ஜி சிப்செட் உடன் ரியல்மி நார்சோ பவர் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும்
குறிப்பாக 6.8-இன்ச் கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே உடன் ரியல்மி நார்சோ பவர் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate), 6500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 1.07 பில்லியன் கலர்ஸ் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

அதேபோல் ரியல்மி நார்சோ பவர் 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி கேமரா (Sony IMX882 சென்சார்) + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா உள்ளன. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவும் உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் மூலம் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.
இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியுடன் இந்த புதிய ரியல்மி போன் அறிமுகம் செய்யப்படும். IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் ரியல்மி நார்சோ பவர் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் மேம்பட்ட ஏஐ அம்சங்கள் உள்ளன.
அதுவும் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி உடன் ரியல்மி நார்சோ பவர் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த ரியல்மி ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.
புதிய ரியல்மி நார்சோ பவர் 5ஜி ஸ்மார்ட்போன் Realme UI 7.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கும்.

ரியல்மி நார்சோ பவர் 5ஜி ஸ்மார்ட்போன் 10001mAh பேட்டரி உடன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W வயர்டு சார்ஜிங் மற்றும் 27W வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவுகளும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.
5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய ரியல்மி போனில் உள்ளன. ஆன்லைனில் கசிந்த தகவலின்படி, ரூ.20,000 அல்லது ரூ.25,000 பட்ஜெட்டில் இந்த புதிய ரியல்மி போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








