Home
News

கோடிகளில் குவிந்து கிடக்கும் PF நிதி.. பணத்தை திருப்பிக் கொடுக்க அரசு திட்டம்.. இதோ முழு விவரம்..

EPFO ​​அமைப்பு தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது நாட்டில் உள்ள பல மில்லியன் கணக்கான ஊழியர்களுக்குப் பயன்படும் வகையில் இந்த அமைப்பு ஒரு திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. அதாவது பழைய வேலைகளை விட்டு வெளியேறும்போது, மக்கள் சிறிய இருப்புகளுடன் கூடிய PF கணக்குகளைப் புறக்கணிப்பது பெரும்பாலும் காணப்படுகிறது, இதன் காரணமாகக் கோடிக்கணக்கான ரூபாய்கள் அமைப்பில் தேங்கி நிற்கின்றன என்று தகவல் வெளிவந்துள்ளது.

இந்நிலையில் இந்திய அரசாங்கம் ரூ.1000 அல்லது அதற்குக் குறைவான தொகை டெபாசிட் செய்யப்பட்ட அனைத்து செயல்படாத EPFO ​​கணக்குகளின் பணத்தையும் தானாகவே திரும்பிக் கொடுக்க முடிவு செய்துள்ளது. அதுவும் இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த பணத்தைப் பெற நீங்கள் எந்த அலுவலகத்திற்குப் போக வேண்டியதில்லை. இதன் செயல்முறை குறித்து இங்கே சற்று விரிவாகப் பார்க்கலாம்.

 கோடிகளில் குவிந்து கிடக்கும் PF நிதி.. இதோ முழு விவரம்..

பிஎப் விதிகளின்படி ஒரு பிஎப் கணக்கில் தொடர்ந்து 36 மாதங்கள் அதாவது மூன்று ஆண்டுகளுக்கு ஊழியரிடமிருந்தோ அல்லது நிறுவனத்திடமிருந்தோ புதிய பங்களிப்புகள் எதுவும் டெபாசிட் செய்யப்படாவிட்டால் அது செயல்படாதது என்று கருதப்படுகிறது. அதுபோன்று இப்போது EPFO-வில் சுமார் 31.86 லட்சம் கணக்குகள் உள்ளன. அவற்றில் சுமார் ரூ.10.903 கோடி வைப்புத்தொகை உள்ளது. தற்சமயம் அரசாங்கம் முதலில் ரூ.1000-க்கு குறைவான இருப்பு உள்ள 7.11 லட்சம் கணக்குகளை அடையாளம் கண்டுள்ளது. இந்த கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்ட மொத்த ரூ.30.52 கோடி நேரடியாகச் சந்தாதாரர்களின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணம் பெறுவதற்கான செயல்முறை?
குறிப்பாக இந்த முயற்சியின் மிகப்பெரிய சிறப்பம்சம் அதன் தானியங்கி தன்மை. தொழிலாளர் அமைச்சகம் எந்த ஆவணங்களும் தேவையில்லை என்று முடிவு செய்துள்ளது. எனவே பிஎப் கணக்குகள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டு வங்கி விவரங்கள் (KYC) புதுப்பிக்கப்பட்ட கணக்கு வைத்திருப்பவர்கள் நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்குகளில் நிதியைப் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. அதேசமயம் அசல் கணக்கு வைத்திருப்பவர் இறந்துவிட்டால், அந்ததொகை அவர்களின் நாமினிக்கு அல்லது சட்டப்பூர்வ வாரிசுக்கு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உங்களது பிஎஃப் கணக்கில் எவ்வளவு பேலன்ஸ் இருக்கிறது என்பதை எஸ்எம்எஸ், மிஸ்டு கால் போன்ற வழிகளை பயனடுத்தி எளிமையாகத் தெரிந்துகொள்ள முடியும். சரி இப்போது பிஎஃப் கணக்கில் எவ்வளவு பேலன்ஸ் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வதற்கான வழிகளைப் பார்க்கலாம்.

1. உங்களது பிஎஃப் கணக்கோடு பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரில் இருந்து பின் வரக்கூடிய முறையில் ஒரு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். அதாவது EPFOHO UAN ENG என்ற முறையில் இந்த 7738299899 எண்ணுக்கு மெசேஜ் அனுப்ப வேண்டும். குறிப்பாக நீங்கள் எஸ்எம்எஸ் அனுப்பிய உடனே பிஎஃப் அமைப்பு உங்களது கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்ற விவரத்தை எஸ்எம்எஸ் வழியாக அனுப்பி வைத்து விடும்.

 கோடிகளில் குவிந்து கிடக்கும் PF நிதி.. இதோ முழு விவரம்..

2.அதேபோல் உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து 9966044425 என்ற எண்ணுக்கு ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் போதும். அடுத்த சில நொடிகளில் உங்கள் மொபைல் நம்பருக்கு எஸ்எம்எஸ் முறையில் உங்கள் பிஎஃப் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்ற விவரம் தெரிய வந்துவிடும்.

3. உங்களது போனில் Umang செயலி பயன்படுத்துகிறீர்கள் என்றால் அதில் இபிஎப்ஓ என கிளிக் செய்து பாஸ்புக் என்ற ஆப்ஷனில் கிளிக் செய்ய வேண்டும். அடுத்து அதில் உங்களது யுஏஎன் நம்பரை உள்ளீடு செய்தால் உங்களது பிஎஃப் கணக்கில் எவ்வளவு பேலன்ஸ் இருக்கிறது என்பதை சுலபமாகத் தெரிந்து கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
EPFO to Return Rs.1000 or Less from Inactive Accounts: Check Eligibility Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X