Home
Mobile

வேட்டிய மடிச்சு கட்டி இறங்கிய OnePlus.. 100W சார்ஜிங் + 7500mAh பேட்டரி காம்பினேஷனில் புது மினி போன்!

முன்னதாக, இன்னும் சரியாக சொல்லப்போனால் கடந்த ஜனவரி மாதத்தில், டிப்ஸ்டர் யோகேஷ் பிரார், கடந்த ஆண்டு வெளியான ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனின் அப்கிரேடட் வெர்ஷன் ஆன ஒன்பிளஸ் 15எஸ் (OnePlus 15s) ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுகம் கிட்டத்தட்ட ரத்து செய்யப்பட்டதாக கூறி இருந்தார்.

இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படும் ஒன்பிளஸ் 15டி (OnePlus 15T) ஸ்மார்ட்போனை அடிப்படையாக கொண்டதாக இருக்க வேண்டும், அதாவது "கடந்த முறையை" போலவே ஒன்பிளஸ் 15டி ஆக சீனாவில் அறிமுகமாகும் மாடல் உலகளாவிய சந்தைகளில் ஒன்பிளஸ் 15எஸ் ஆக அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது; ஆனால் அப்படி நடக்காமல் போகலாம் என்கிற தகவலும் வெளியானது.

OnePlus.. 100W சார்ஜிங் + 7500mAh பேட்டரி காம்பினேஷனில் புது மினி போன்

ஆனால் மேற்குறிப்பிட்ட அதே டிப்ஸ்டரின் கூற்றுப்படி, ஒன்பிளஸ் 15எஸ் ஸ்மார்ட்போன் மீண்டும் உருவாக்கத்தில் உள்ளது. ஆனால் மாற்றப்பட்ட "கேமரா செட்டப்பை" கொண்டிருக்கலாம். ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போன் ஆனது 200-மெகாபிக்சல் அல்லது 50-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா 50-மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமராவுடன் அறிமுகம் செய்யப்படலாம் என்றும், இதில் அல்ட்ரா-வைட் லென்ஸ் இல்லாமல் போகலாம் என்றும் கூறப்படுகிறது.

ஒருவேளை ஒன்பில்ஸ் ​​15டி ஸ்மார்ட்போனில் 200-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா இடம்பெறலாம் ஆனால் ஒன்பிளஸ் 15எஸ் ஸ்மார்ட்போனில் 50-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா பேக் செய்யப்படவும் வாய்ப்புள்ளது. தற்போதுவரை ​​இது ஒரு அனுமானம் மட்டுமே ஆகும். ஒன்பிளஸ் 15எஸ் ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்கள் இடம்பெறும் என்பதை பார்க்க மேலும் பல லீக்ஸ் அல்லது அறிக்கைகளுக்காக காத்திருப்பது நல்லது.

ஒன்பிளஸ் 15ஆர் கடந்த டிசம்பரில் அறிமுகமானது, அதாவது இரண்டு மாதங்களுக்கும் மேலாகிவிட்டது, ஒன்பிளஸ் நிறுவனம் இன்னும் எந்த புதிய ஸ்மார்ட்போன்களையும் அறிமுகப்படுத்தவில்லை. 2026 மார்ச் மாதத்தில் அறிமுகப்படுத்த ஏதேனும் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் உள்ளதா என்பதும் தெளிவாக தெரியவில்லை. ஏனெனில் குறிப்பிட்ட மாதத்தில் அறிமுகப்படுத்தப்படவிருந்த ஒன்பிளஸ் நோர்ட் 6 சீரீஸ் தாமதமாகும் என்பது போல் தெரிகிறது.

ஒன்பிளஸ் 15டி / ஒன்பிளஸ் 15எஸ் ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? நம்பகமான டிப்ஸ்டர்களில் ஒருவரான டிஜிட்டல் சாட் ஸ்டேஷனின் கூற்றுப்படி, ஒன்பிளஸ் நிறுவனமானது இந்த மாடலுக்கு வெள்ளை அல்லது சாம்பல் நிற விருப்பங்களில் ஒரு மேக்நட் ஸ்னாப்-கேஸை உருவாக்குவதில் பணியாற்றி வருகிறது

எதிர்பார்க்கப்படும் அம்சங்களை பொறுத்தவரை ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போனில் 6.3-இன்ச் 1.5K பிளாட் டிஸ்பிளேவை இடம்பெறலாம். இது AMOLED ஆக இருக்கலாம். மேலும் இது 165ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டையும் ஆதரிக்கலாம் என்றும் டிப்ஸ்டர் கூறுகிறார். ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போன் ஆனது ஒரு மெட்டல் ஃபிரேம் உடன் வரலாம்.

இது 3டி அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சார் கொண்ட ஸ்மார்ட்போனாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இது தவிர 100W பாஸ்ட் சார்ஜிங் உடனான 7500mAh பேட்டரியை கொண்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேமராக்களை பொறுத்தவரை பேக் பேனலில் டெலிஃபோட்டோ சென்சார் இடம்பெறலாம்.

இந்த ஸ்மார்ட்போன் 50 மெகாபிக்சல் ப்ரைமரி சென்சார் மற்றும் 50 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ லென்ஸ் உடனான டூயல் ரியர் கேமரா செட்டப்பை பெறலாம் . சிப்செட்டை பொறுத்தவரை இது பிளாக்ஷிப் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப் மூலம் இயக்கப்படலாம் என்று முந்தைய வதந்திகள் கூறுகின்றன.

லேட்டஸ்ட் ஆக அறிமுகமான ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போனின் விலை: பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜின் அசல் விலை ரூ.47,999 என்றும், ஹை-எண்ட் 12ஜிபி ரேம் + 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜின் அசல் விலை ரூ.52,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
New leak hints OnePlus 15s India launch with major camera sensor changes
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X