Home
Gadgets

BenQ அறிமுகம் செய்த புதிய 4K ப்ரொஜெக்டர்.. 120 இன்ச்.. டால்பி ஆடியோ.. கூகுள் டிவி ஓஎஸ்.. என்ன விலை?

இந்தியாவில் பென்கியூ (BenQ) நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ப்ரொஜெக்டர் மாடல்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. காரணம் என்னவென்றால் மற்ற நிறுவனங்களை விட தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் இந்நிறுவனத்தின் ப்ரொஜெக்டர் மாடல் வெளிவருவதால் அதிக வரவேற்பு உள்ளது. இந்நிலையில் பென்கியூ நிறுவனம் இந்தியாவில் புதிய ப்ரொஜெக்டர் மாடல் ஒன்றை தற்போது அறிமுகம் செய்துள்ளது.

அதாவது தற்போது பென்கியூ ஜிவி50பி லிமிடெட் எடிஷன் லேசர் போர்ட்டபிள் ப்ரொஜெக்டர் (BenQ GV50P Limited Edition Laser Portable Projector) மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது பென்கியூ நிறுவனம். அசத்தலான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் இந்த புதிய ப்ரொஜெக்டர் வெளிவந்துள்ளது. இப்போது பென்கியூ ஜிவி50பி மாடலின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

BenQ அறிமுகம் செய்த புதிய 4K ப்ரொஜெக்டர்.. 120 இன்ச்..  என்ன விலை?

பென்கியூ ஜிவி50பி ப்ரொஜெக்டர் அம்சங்கள் (BenQ GV50P projector Specifications): 1080p FULL HD நேட்டிவ் ரெசல்யூஷன் மற்றும் 4K ரெசல்யூஷன் கொண்டுள்ளது பென்கியூ ஜிவி50பி லிமிடெட் எடிஷன் லேசர் போர்ட்டபிள் ப்ரொஜெக்டர் மாடல். மேலும் எச்டிஆர் 10, நைட் ஷிப்ட் பிக்சர் மோட் ஆதரவுகளும் இந்த மாடலில் உள்ளன. குறிப்பாக இந்த ப்ரொஜெக்டர் மூலம் தெளிவான வீடியோக்களை பார்க்க முடியும்.

500 ANSI லுமென்ஸ் பிரைட்னஸ் வசதியுடன் பென்கியூ ஜிவி50பி லிமிடெட் எடிசன் லேசர் போர்ட்டபிள் ப்ரொஜெக்டர் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் சினிமாடிக் கலர் 92% REC709 ஆதரவும் இதில் உள்ளது. மேலும் 30,000 மணிநேரம் வரை லேசர் லைட் சோர்ஸ் லைஃப் (laser light source life) உடன் புதிய பென்கியூ புரொஜெக்டர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

BenQ அறிமுகம் செய்த புதிய 4K ப்ரொஜெக்டர்.. 120 இன்ச்..  என்ன விலை?

அதேபோல் இந்த சாதனத்தில் உள்ள இன்டெக்ரேடட் பேட்டரி (integrated battery) 150 நிமிட வீடியோ பிளே டைம் வழங்குகிறது. ஆட்டோ-ஃபோகஸ் (auto-focus), ஆட்டோ 2D கீஸ்டோன் கரெக்ஷன் (auto 2D keystone correction), அப்ஸ்டகிள்ஸ் அவாய்டன்ஸ் (Obstacles Avoidance), டிஜிட்டல் ஜூம் (Digital Zoom), ஆட்டோ ஸ்கிரீன் ஃபிட் (Auto Screen Fit) போன்ற வசதிகள் பென்கியூ ஜிவி50பி மாடலில் உள்ளன.

பென்கியூ ஜிவி50பி மாடல் மூலம் 120 இன்ச் வரையில் புரோஜெக்சன் (Projection) செய்து கொள்ள முடியும். எனவே இது ஒரு தியேட்டர் அனுபவத்தைக் கொடுக்கும் என்றே கூறலாம். 18W ஸ்பீக்கர்கள் இந்த புதிய ப்ரொஜெக்டரில் உள்ளன. மேலும் டால்பி ஆடியோ, சினிமா சவுண்ட் மோட் ஆதரவும் இதில் உள்ளது. எனவே பென்கியூ ஜிவி50பி மாடல் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.

கூகுள் டிவி இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு பென்கியூ ஜிவி50பி லிமிடெட் எடிஷன் லேசர் போர்ட்டபிள் ப்ரொஜெக்டர் மாடல் வெளிவந்துள்ளது. நெட்பிளிக்ஸ், பிரைம் வீடியோ, ஜீ5, சோனிலிவ், ஹாட்ஸ்டார், யூடியூப் உள்ளிட்ட அனைத்து ஓடிடி ஆப்களையும் இந்த பென்கியூ மாடலில் பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

BenQ அறிமுகம் செய்த புதிய 4K ப்ரொஜெக்டர்.. 120 இன்ச்..  என்ன விலை?

எச்டிஎம்ஐ (HDMI) போர்ட், யுஎஸ்பி (USB) போர்ட், ஒரு ஆடியோ அவுட் (Audio Out) போர்ட், புளூடூத், வைஃபை உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் பென்கியூ ஜிவி50பி லிமிடெட் எடிஷன் லேசர் போர்ட்டபிள் ப்ரொஜெக்டர் மாடலில் உள்ளன. இதுதவிர மேம்பட்ட கேமிங் அம்சங்களும் இந்த சாதனத்தில் உள்ளன.

பென்கியூ ஜிவி50பி லிமிடெட் எடிஷன் லேசர் போர்ட்டபிள் ப்ரொஜெக்டர் மாடல் ரூ.64999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த மாடல் அமேசான் தளத்தில் வாங்க கிடைக்கிறது. தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இஎம்ஐ முறையில் இந்த பென்கியூ மாடலை வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது.

Best Mobiles in India

English summary
BenQ GV50PP Limited Edition Laser Portable Projector Launched in India: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X