Home
Mobile

தலைவன் வந்தாச்சு.. 6500mAh பேட்டரி.. 90W சார்ஜிங்.. SONY கேமரா.. ஆஃபருடன் SALE க்கு வந்த Vivo V70 சீரிஸ்!

இந்திய மார்கெட்டில் விவோ வி70 மற்றும் விவோ வி70 எலைட் ஆகிய மாடல்களின் விற்பனை தொடங்கிவிட்டது. ஆஃபர் விலைக்கு கிடைப்பதால், விற்பனையில் பட்டையை கிளப்புகிறது. 6500mAh பேட்டரி, 90W சார்ஜிங், சோனி சென்சார் கேமரா போன்ற பீச்சர்களில் மிரளவிடுகிறது. இந்த விவோ வி70 சீரிஸ் மாடல்களின் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

விவோ வி70 ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ. 45,999ஆகவும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.49,999ஆகவும் இருக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.2,500 உடனடி தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.43,499 ஆரம்ப விலைக்கு வாங்கி கொள்ளலாம்.

தலைவன் வந்தாச்சு.. 6500mAh பேட்டரி.. 90W சார்ஜிங்.. SONY கேமரா.. ஆஃபரு

விவோ வி70 எலைட் ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.51,999ஆகவும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.56,999ஆகவும் இருக்கிறது. மேலும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.61,999ஆக இருக்கிறது. இந்த மாடலுக்கும் ரூ.2,500 கிரெடிட் கார்டு டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

அமேசான் (Amazon), பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் விவோ ஸ்டோர் (Vivo Store) ஆகிய தளங்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். விவோ வி70 ஸ்மார்ட்போனின் லெமன் எல்லோ (Lemon Yellow) மற்றும் பேஷன் ரெட் (Passion Red) ஆகிய கலர்கள் கிடைக்கின்றன. விவோ வி70 எலைட் மாடலில் ஆதன்டிக் பிளாக், சாண்ட் பெய்ஜ் மற்றும் பேஷன் ரெட் கலர்கள் உள்ளன.

விவோ வி70 அம்சங்கள் (Vivo V70 Specifications): 6.59 இன்ச் (2750 x 1260 பிக்சல்கள் அமோலெட் டிஸ்பிளே கிடைக்கிறது. 1.5K ரெசொலூஷன் உள்ளது. எச்டிஆர்10பிளஸ், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 4320Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி மற்றும் 5000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. ருவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 4என்எம் (Qualcomm Snapdragon 7 Gen 4 4nm) சிப்செட் உள்ளது.

அட்ரினோ 722 ஜிபியு (Adreno 722 GPU) கிராபிக்ஸ் கார்டு உள்ளது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS), ஓர்ஜின்ஓஎஸ் 6 (OriginOS 6) கொடுத்துள்ளது. 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. OIS டெக்னாலஜி, 4K வீடியோ ரெக்கார்டிங் மற்றும் ஆரா லைட் கொடுக்கப்பட்டு உல்ளது.

ஆட்டோ போகஸ் மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் கொண்ட 50 எம்பி செல்பீ கேமராவை இந்த விவோ வி70 ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. 6500mAh பேட்டரி மற்றும் 90W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) உள்ளன.

விவோ வி70 எலைட் அம்சங்கள் (Vivo V70 Elite Specifications): ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 4என்எம் (Octa Core Snapdragon 8s Gen 3 4nm) சிப்செட் மற்றும் அட்ரினோ 735 ஜிபியு (Adreno 735 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டு உள்ளது. மற்ற கேமரா, டிஸ்பிளே, பேட்டரி உள்ளிட்ட பீச்சர்கள் விவோ வி70 மாடலில் கிடைத்ததை போலவே இருக்கின்றன.

Best Mobiles in India

English summary
Vivo V70 Vivo V70 Elite With 6500mAh Battery Available For Purchase in India Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X