Home
Mobile

OnePlus ஒரே போடு.. OnePlus Nord 6, புது Buds, புது Tablet, OnePlus 15s என வரிசையாக 5 அறிமுகங்கள்.. எப்போது?

அப்புறம் என்னப்பா அறிவிச்சுடலாமா.. என்கிறபடியாக சாம்சங் நிறுவனத்தின் 2026 பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமான வேகத்தில் ஒன்பிளஸ் நிறுவனம் 2026 ஆம் ஆண்டில் என்னென்ன தயாரிப்புகளை எப்போது அறிமுகம் செய்யும் என்கிற ப்ராடெக்ட் ரோட்மேப் (Product Roadmap) குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளது

டிப்ஸ்டர் யோகேஷ் பிராரின் கூற்றுப்படி, ஒன்பிளஸ் நிறுவனம் ஐந்து தயாரிப்புகளை, கூடிய விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இது - மார்ச் மாத இறுதியில் அல்லது ஏப்ரல் மாத தொடக்கத்தில் ஒன்பிளஸ் நோர்ட் 6 (OnePlus Nord 6) ஸ்மார்ட்போனின் அறிமுகத்துடன் தொடங்குகிறது.

OnePlus ஒரே போடு.. வரிசையாக 5 அறிமுகங்கள்.. எப்போது?

இது முன்னதாக வெளியான - ஒன்பிளஸ் நோர்ட் 6 ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீடு குறித்து தகவல் உடன் சற்றே முரண்படுகிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போனின் அறிமுகம் 2026 ஏப்ரல் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் சமீபத்திய தகவல் - இந்தியாவில் ஒன்பிளஸ் நோர்ட் 6 ஸ்மார்ட்போன் 2026 மார்ச் மாத இறுதியில் அல்லது ஏப்ரல் மாத தொடக்கத்தில் அறிமுகமாகும் என்று பரிந்துரைக்கிறது.

லேட்டஸ்ட் தகவல் - துல்லியமாக இருந்தால், ஒன்பிளஸ் நோர்ட் 6 ஸ்மார்ட்போனின் அறிமுகம் விரைவில் நடக்கலாம். வழக்கமாக இந்த சீரீஸ் ஜூலை மாதத்தில் தான் அறிமுகம் செய்யப்படும். ஆனால் ஸ்மார்ட்போன் சந்தையில் நடுத்தர பிரிவில் உள்ள மாடல்களுக்கு மத்தியில் உள்ள கடுமையான போட்டிகள் - இந்த ஸ்மார்ட்போனை முன்கூட்டியே அறிமுகம் செய்ய ஒன்பிளஸ் நிறுவனத்தை தூண்டி இருக்கலாம்.

ஒன்பிளஸ் நோர்ட் 6 ஸ்மார்ட்போனை தொடர்ந்து ஒன்பிளஸ் நிறுவனத்தின் பிரீமியம் டேப்லெட் (Premium tablet) ஒன்று அறிமுகமாகும். அதை தொடர்ந்து புதிய பட்ஸ் ப்ரோ (Buds Pro) இயர்பட்ஸ் மாடல் ஒன்று அறிமுகம் செய்யப்படும். அதை தொடர்ந்து ஒன்பிளஸ் நிறுவனத்தின் 2வது காம்பாக்ட் பிளாக்ஷிப் (மினி ஸ்மார்ட்போன் ஆன ஒன்பிளஸ் 15எஸ் (OnePlus 15s) மாடல் அறிமுகமாகும்.

ஒன்பிளஸ் 15எஸ் ஸ்மார்ட்போன் ஆனது சீனாவில் ஒன்பிளஸ் 15டி (OnePlus 15T) ஆக அறிமுகம் செய்யப்படும் ரீபிராண்டட் வெறியன்ட் ஆக இருக்கலாம். கடைசியாக ஒரு புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். இது ஒன்பிளஸ் நோர்ட் சிஇ6 (OnePlus Nord CE6) மாடல் ஆக இருக்கலாம்.

ஒன்பிளஸ் 16 குறித்த லேட்டஸ்ட் லீக்: மேற்கண்ட தயாரிப்புகள் எல்லாம் ஒருபக்கம் இருக்க ஒன்பிளஸ்-ன் அடுத்த பிளாக்ஷிப் நம்பர் சீரீஸ் ஸ்மார்ட்போன் ஆன ஒன்பிளஸ் 16 குறித்து சீனாவிலிருந்து வந்த ஒரு புதிய லீக், இது அதன் அனைத்து பக்கங்களிலும் 1மிமீ-க்கும் குறைவான பெஸல்களை கொண்டிருக்கலாம் என்கிறது. சில அளவீடுகள் சுமார் 0.8மிமீ -ஐ கூட சுட்டிக்காட்டுகின்றன.

இது மட்டும் உண்மையாகும் பட்சத்தில்.. மேற்குறிப்பிட்ட "அளவுகள்" நடைமுறைக்கு வரும் பட்சத்தில், ஏற்கனவே மெலிதான 1.15மிமீ பார்டர்களை கொண்டிருக்கும் ஒன்பிளஸ் 15 மாடலை விட, ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போனில் இன்னும் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை நாம் காணலாம்.

பேப்பரில் பார்க்க, 1.15 மில்லிமீட்டரில் ஒரு சிறு பங்கை வெட்டுவது வியத்தகு முறையில் ஒரு பெரிய மாற்றமாக இருக்காது. ஆனால் கண்கள் கொண்டு பார்க்கும் போது இது நிச்சயமாக ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தும். மிக மெல்லிய சமச்சீர் ஆன பெஸல்கள் "ஆல் டிஸ்பிளே" தோற்றத்தை உருவாக்குகின்றன, இது கன்டென்ட்டை இன்னும் சிறப்பானதாக மாற்றும், குறிப்பாக நீங்கள் வீடியோக்களை பார்க்கும்போது அல்லது கேமிங் செய்யும்போது.

ஒன்பிளஸ் 16 குறித்த இந்த லேட்டஸ்ட் லீக் ஆனது பெரும்பாலும் பெஸல்களில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. ஆக டிஸ்பிளே குறித்த எந்த அம்சங்களும் இன்னும் தெளிவாக இல்லை. இருப்பினும், முந்தைய வதந்திகள் இது ஒரு பிளாட் ஆன 1.5K LTPO OLED பேனலை கொண்டிருக்கும் என்று குறிப்பிட்டுள்ளன. இது மீண்டும் BOE-விடம் இருந்து பெறப்பட்டிருக்கலாம். ரெஃப்ரெஷ் ரேட் விகிதங்கள் ஆனது 240ஹெர்ட்ஸ் வரை உயரும் என்கிற பேச்சுகளும் அடிபடுகின்றன.

Best Mobiles in India

English summary
OnePlus India Upcoming Launches 2026 Product Roadmap leaked First One Could be Nord 6 in March
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X