Home
Mobile

மார்க்கெட்டை பொளந்து விட்ட POCO.. 16GB ரேம், 7560mAh பேட்டரி, 100W சார்ஜிங்.. புது ஸ்பெஷல் எடிஷன் போன்!

போக்கோ (POCO) நிறுவனம், மொபைல் மார்க்கெட்டில் பரபரப்பை கிளப்பும் அளவிலான முக்கிய அம்சங்களை கொண்ட 2 புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய தயார் ஆகி வருகிறது. அது போக்கோ எக்ஸ்8 ப்ரோ சீரிஸ் (Poco X8 Pro Series) ஸ்மார்ட்போன்கள் ஆகும்.

நேற்று வரையிலாக இந்த சீரீஸின் கீழ் போக்கோ எக்ஸ்8 ப்ரோ (Poco X8 Pro) மற்றும் போக்கோ எக்ஸ்8 ப்ரோ மேக்ஸ் (Poco X8 Pro Max) என்கிற 2 மாடல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது இந்த சீரிஸின் கீழ் "மூன்றாவதாக" ஒரு தீம் பேஸ்டு ஸ்மார்ட்போன் வேரியண்ட்டும் அறிமுகம் செய்யப்படலாம் என்கிற தகவல் கிடைத்துள்ளது.

16GB ரேம், 7560mAh பேட்டரி, 100W சார்ஜிங்.. POCO புது ஸ்பெஷல் எடிஷன்!

அது போக்கோ எக்ஸ்8 ஐயன் மேன் எடிஷன் (Poco X8 Pro Iron Man Edition) ஸ்மார்ட்போன் ஆகும். அறிமுகத்திற்கு முன்னதாக இந்த ஸ்மார்ட்போனின் புகைப்படம் ஆன்லைனில் லீக் ஆகியுள்ளது. அதன் மூலம் இது ம்யூடட் க்ரே கலர் பினிஷ், பிரேம்-ஐ சுற்றிய கோல்ட் கலர் அசென்ட்கள் மற்றும் சில பேக் டிசைன் எலிமென்ட்களை காண முடிகிறது. ஸ்மார்ட்போனின் பேக் பேனலின் நடுவே ஐயன் மேன் பறப்பதையும் பார்க்க முடிகிறது

இருப்பினும், ஒப்பனை தொடர்பான மாற்றங்களை தவிர்த்து அம்சங்கள் அடிப்படையில் இது ஸ்டாண்டர்ட் போக்கோ எக்ஸ்8 ப்ரோ மாடலை போலவே தான் இருக்கும். ஆக டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 1.5கே ரெசல்யூஷன் உடனான 6.59-இன்ச் முதல் 6.67-இன்ச் வரையிலான AMOLED டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம். இந்த பேனல் HDR திறன்களுடன் 120Hz முதல் 144Hz வரையிலான ரெஃப்ரெஷ் ரேட்டை ஆதரிக்கலாம்.

சிப்செட்டை பொறுத்தவரை போக்கோ எக்ஸ்8 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது Mali-G720-கிளாஸ் GPU உடன் இணைக்கப்பட்ட MediaTek Dimensity 8500 Ultra சிப்செட்டை பேக் செய்யலாம். ஸ்டோரேஜ் ஆப்ஷன்களை பொறுத்தவரை இது 12GB அல்லது 16GB LPDDR5X ரேம் மற்றும் 512GB வரை UFS 4.0 ஸ்டோரேஜை வழங்கலாம்.

கேமராக்களை பொறுத்தவரை, இது 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் ஆதரவு கொண்ட 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமராவை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்பக்கத்தில் 20எம்பி முதல் 32 மெகாபிக்சல்கள் வரையிலான செல்பீ கேமராவை எதிர்பார்க்கலாம்.

பேட்டரியை பொறுத்தவரை இது அதிகபட்சம் 7,560mAh வரையிலான பேட்டரியை கொண்டிருக்கும் என்றும், அது 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மூலம் ஆதரிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. மென்பொருள் விஷயத்தில், இது Android 15 அல்லது Android 16 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட ஷாவ்மீயின் ;லேட்டஸ்ட் HyperOS வெர்ஷன் உடன் அறிமுகம் செய்யப்படலாம்

கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை இது 5G, Wi-Fi 6, Bluetooth 5.4, NFC, IR blaster மற்றும் USB Type-C port ஆகியவைகளை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை இது Hi-Res ஆடியோ ஆதரவுடன் கூடிய டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார், AI- அடிப்படையிலான ஃபேஸ் அன்லாக் மற்றும் விலைக்கு ஏற்ற IP ரேட்டிங் உடன் வரலாம்.

போக்கோ எக்ஸ்8 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்கள் இடம்பெறலாம்? இந்த சீரீஸின் ப்ரோ மேக்ஸ் மாடல் ஆனது 120Hz ரெஃப்ரெஷ் ரேட் 2000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் மற்றும் 3840Hz PWM டிம்மிங் ரேஷியோ உடனான 6.83-இன்ச் 1.5K TCL M10 OLED டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போன் MediaTek Dimensity 9500s SoC ஆல் இயக்கப்படலாம், இது Immortalis-G925 MC12 மற்றும் ப்ரோ வேரியண்ட்டை போலவே LPDDR5x அல்ட்ரா ரேம் மற்றும் UFS 4.1 இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்படலாம். கேமராக்களை பொறுத்தவரை அதே 50-மெகாபிக்சல் ப்ரைமரி மற்றும் 8-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் ரியர் கேமரா செட்டப் இடம்பெறலாம். ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் ஆகிய மாடல்களுக்கு இடையேயான முக்கிய வேறுபாடாக ப்ரோ மேக்ஸ் மாடலின் ப்ரைமரி கேமராவில் OIS ஆதரவுடன் Light Hunter 600 இடம்பெறும் என்று கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Poco X8 Pro Iron Man Edition Tipped to launch Along With Poco X8 Pro Series What to Expect
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X