அண்டார்டிகாவில் விழுந்த அபூர்வ விண்கல்.. 7 கிலோ பாறைக்குள் ஒளிந்திருக்கும் 7 பிறவிகள் பற்றிய ரகசியம்?

|

விண்கல் (Meteorite) என்பது அறிவியல் உடன் தொடர்புடையது; அதே சமயம் "7 பிறவிகள்" என்பது ஆன்மீகத்துடன் தொடர்புடையது.

இந்த இரண்டையும் எப்படி ஒன்றாக சேர்க்க முடியாதோ, அதேபோல தான் - அறிவியலையும், ஆன்மீகத்தையும் இரண்டு துருவங்களாக பிரிக்கவும் முடியாது. ஒன்றுக்கொன்று ஏதோவொரு வகையில் தொடர்புடையது தான்!

அந்த அடிப்படையில், அண்டார்டிகாவில் (Antarctica) விழுந்துள்ள மிகவும் அபூர்வமான மற்றும் 7 கிலோ எடையுள்ள ஒரு விண்கல்லிற்குள் "7 பிறவிகள்" பற்றிய ரகசியமொன்று ஒளிந்துள்ளது!

அதென்ன ரகசியம்?

அதென்ன ரகசியம்?

7 கிலோ விண்கல்லிற்குள் ஒளிந்திருக்கும் ரகசியத்தை பற்றி தெரிந்துகொள்ளும் முன்னர், 7 பிறவிகள் என்றால் என்ன? என்பதை பற்றி நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.

அப்போது தான், 7 பிறவிகளையும், அண்டார்டிகாவில் விழுந்த அந்த விண்கல்லிற்குள் இருக்கும் ரகசியத்தையும் ஒன்றிணைக்கும் "விஷயத்தை" பற்றி நீங்கள் புரிந்துகொள்ள முடியும்!

ஏலியன்களை நெருங்கி விட்டோம்? 95% பூமியை போலவே இருக்கும் கிரகத்தை கண்டுபிடித்துள்ள NASA!ஏலியன்களை நெருங்கி விட்டோம்? 95% பூமியை போலவே இருக்கும் கிரகத்தை கண்டுபிடித்துள்ள NASA!

ஏழு பிறவிகள் என்றால் என்ன?

ஏழு பிறவிகள் என்றால் என்ன?

இந்துமத கோட்பாட்டின்படி, ஒரு ஆன்மா மறுபிறவி எடுக்காமல் நிரந்தரமாக இறைவனிடம் சேருவதற்கு முன்னர், அந்த ஆன்மா இந்த பூவுலகில் மொத்தம் 7 பிறவிகள் எடுக்க வேண்டியிருக்கும்.

அதாவது தாவரமாக, நீர்வாழ் உயிரினமாக, ஊர்வனவாக, பறவையாக, விலங்காக, மனிதனாக மற்றும் கடைசியாக தேவராக பிறவி எடுக்க வேண்டும்.

ஒரே புள்ளியில் இணையும் இரண்டு வெவ்வேறு விஷயங்கள்!

ஒரே புள்ளியில் இணையும் இரண்டு வெவ்வேறு விஷயங்கள்!

மேலே பார்த்த விளக்கத்தின்படி.. 7 பிறவிகள் என்பது (தேவர் என்கிற கடைசி பிறவியை தவிர்த்து மீதமுள்ள 6 பிறவிகளும்) இந்த ஒட்டுமொத்த பூமியையும், பூமியின் உருவாக்கத்தையும், அதன் இயல்பையும், அதில் உள்ள உயிரினங்களையும் ஒரே புள்ளியில் இணைக்கும் ஒரு "விஷயம்" ஆகும். அப்படித்தானே?

அதே "விஷயம்" தான் அண்டார்டிகாவில் விழுந்த மிகவும் அபூர்வமான 7 கிலோ விண்கல்லிற்குள்ளும் ஒளிந்துள்ளது!

சாபம் சார்.. யாரை விட்டுச்சு! செவ்வாய் கிரகத்திடம் சிக்கி சின்னாபின்னமான சீனாவின் கனவும், பணமும்!சாபம் சார்.. யாரை விட்டுச்சு! செவ்வாய் கிரகத்திடம் சிக்கி சின்னாபின்னமான சீனாவின் கனவும், பணமும்!

அப்படி என்ன விஷயம் ஒளிந்துள்ளது?

அப்படி என்ன விஷயம் ஒளிந்துள்ளது?

விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, அண்டார்டிகாவில் கிடைத்த 7 கிலோ எடையுள்ள விண்கல் ஆனது புவி அறிவியல் தொடர்பான ஆராய்ச்சிக்கு மிகவும் முக்கியமான ஒரு ஆதாரம் ஆகும்.

அதாவது இந்த பூமி எப்படி உருவானது? இந்த பிரபஞ்சத்தில் நமது பூமிக்கு கொடுக்கப்பட்டுள்ள இடம் என்ன? என்பது தொடர்பான கூடுதல் புரிதலை வழங்க, இந்த விண்கல் உதவிகரமாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றன.

7 பிறவிகளையும், இந்த 7 கிலோ விண்கல்லையும் இணைக்கும் அந்த "விஷயம்" என்ன என்பது இப்போது உங்களுக்கு புரிந்து இருக்கும் என்று நம்புகிறோம்!

இது ஏன் அபூர்வமான விண்கல்லாக பார்க்கப்படுகிறது?

இது ஏன் அபூர்வமான விண்கல்லாக பார்க்கப்படுகிறது?

கடந்த 100 ஆண்டுகளில் அண்டார்டிகாவிலிருந்து சுமார் 45,000 விண்கற்கள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அவற்றில் சில நூறு விண்கற்கள் மட்டுமே அளவில் பெரியதாக உள்ளன.

பொதுவாக, விண்கற்கள் என்று வரும்போது அளவு என்பது ஒரு பெரிய விஷயமே இல்லை. இருப்பதிலேயே மிகச்சிறிய விண்கற்கள் கூட (அறிவியல் அடிப்படையில்) மிகவும் மதிப்புமிக்கதாக இருக்கும்.

அதே சமயம், அளவில் பெரிய விண்கல்லை கண்டுபிடிப்பதும் கூட மிகவும் அரிதான விஷயமே. அந்த அடிப்படையில் தான், அண்டார்டிகாவில் விழுந்த 7 கிலோ விண்கல் ஆனது ஒரு அபூர்வமான விண்கல்லாக பார்க்கப்படுகிறது!

திக் திக் நிமிடங்கள்! அது தான் பூமியின் கடைசி நாளாக இருக்கும்? நெடுநாள் மர்மத்தை உடைத்த NASA விஞ்ஞானிகள்!திக் திக் நிமிடங்கள்! அது தான் பூமியின் கடைசி நாளாக இருக்கும்? நெடுநாள் மர்மத்தை உடைத்த NASA விஞ்ஞானிகள்!

பெரும்பாலான விண்கற்கள் அண்டார்டிகாவில் இருந்து கண்டுபிடிக்கப்படுவது ஏன்?

பெரும்பாலான விண்கற்கள் அண்டார்டிகாவில் இருந்து கண்டுபிடிக்கப்படுவது ஏன்?

அண்டார்டிகா - ஒரு கடுமையான குளிர் பிரதேசம் ஆகும். அது மனிதர்கள் வாழ்வதற்கான ஒரு சிறந்த இடமாக இல்லாவிட்டாலும் கூட, விண்கற்களுக்கு மிகவும் ஏதுவான ஒரு இடமாக திகழ்கிறது. அதற்கு காரணம் அங்கிருக்கும் சீதோஷ்ண நிலை தான்!

அண்டார்டிகாவின் வறண்ட காலநிலையானது பூமியின் வளிமண்டலத்தில் நுழையும் போது, விண்கற்கள் எதிர்கொள்ளும் வானிலையின் அளவை குறைக்கிறது. ஆகையால், விண்கற்கள் வந்து சேர்வதற்கான சிறந்த இடமாக அண்டார்டிகா உள்ளது!

அண்டார்டிகாவிடம் இன்னொரு

அண்டார்டிகாவிடம் இன்னொரு "ரகசிய" திறமையும் உள்ளது!

அது அண்டார்டிகாவின் "நிறம்" ஆகும். பெரும்பாலான விண்கற்கள் ஆனது "கருப்பு நிறத்தில்" இருப்பதால், பனிமூட்டமான இடங்களில் மற்றும் ஐஸ் பாறைகளில் இருந்து அவற்றை கண்டுபிடிப்பது மிகவும் எளிமையான காரியம் ஆகும்.

ஒப்பீட்டளவில், பூமியில் உள்ள மற்ற இடங்களில் விழுந்த விண்கற்களை விட அண்டார்டிகாவில் விழுந்த விண்கற்களை கண்டுபிடிப்பது மிகவும் சுலபம்!

Photo Courtesy: Maria Valdes / Field Museum / NASA / Wikpedia

Best Mobiles in India

English summary
Scientists Discovered A Rare 7 Kg Meteorite In Antarctica Which Have Secrets About Earth Formation

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X