ஓட விட்டான் OPPO.. ஆளுக்கு 1 அள்ளும் பட்ஜெட் விலை.. 7000mAh பேட்டரி உடன் புது 5G போன்!
இந்த மார்ச் 2026 இல் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் பட்டியலில் இடம்பெறாத.. சைனீஸ் ஸ்மார்ட்போன் நிறுவனம் ஆன ஒப்போ (Oppo).. மற்ற ஸ்மார்ட்போன் நிறுவனங்களை எல்லாம் ஓடவிடும் விலை மற்றும் அம்சங்களுடன் ஒரு புதிய 5ஜி ஸ்மார்ட்போனை வருகிற மார்ச் 9 ஆம் தேதி அன்று இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது.
அது ஒப்போ கே14 5ஜி (Oppo K14 5G) ஸ்மார்ட்போன் ஆகும். இது சமீபத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒப்போ கே14எக்ஸ் 5ஜி (Oppo K14x 5G) ஸ்மார்ட்போனுக்கு அடுத்தபடியாக, ஒப்போ கே14 சீரீஸின் கீழ் வரும் புதிய 5ஜி மாடல் ஆகும்.

புதிய ஒப்போ கே14 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது மார்ச் இரண்டாவது வாரத்தில் (மார்ச் 9 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு) அன்று இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ஒப்போ இந்தியா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கூடவே ஒரு பிரத்யேக மைக்ரோசைட் மூலம் ஒப்போ கே14 5ஜி ஸ்மார்ட்போனின் வடிவமைப்பும், கலர் ஆப்ஷனைகளும் மற்றும் பேட்டரி கெப்பாசிட்டி உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
ஒப்போ கே14 5ஜி ஸ்மார்ட்போனுக்கான பிரத்யேக மைக்ரோசைட் ஆனது, இது பிரபல இ-காமர்ஸ் வலைத்தளம் ஆன பிளிப்கார்ட் (Flipkart) வழியாக நேரடியாக வெளியிடப்பட்டு, அதே தளம் வழியாக வாங்க கிடைக்கும் என்பதை உறுதிப்படுத்துகிறது. கூடவே இது ஒப்போ இந்தியா (Oppo India) ஆன்லைன் ஸ்டோர் வழியாகவும் வாங்குவதற்கு கிடைக்கும்.
ஒப்போ கே14 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஊதா மற்றும் வெள்ளை ஆகிய 2 கலர்களில் வெளியாகும் என்பதோடு சேர்த்து, இது 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவை கொண்டிருக்கும் என்பதும், இது கலர்ஓஎஸ் (ColorOS) உடன் அனுப்பப்படும் என்பதும், இது பெரிய 7000mAh பேட்டரியை கொண்டிருக்கும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது
வடிவமைப்பை பொறுத்தவரை, ஒப்போ கே14 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது டூயல் ரியர் கேமரா செட்டப் மற்றும் ஒரு சதுர வடிவிலான கேமரா மாட்யூலுக்குள் வைக்கப்பட்டுள்ள LED ஃபிளாஷ் ஆகியவற்றை கொண்டுள்ளது. பேக் பேனலில் கிரிஸ்டல்-போன்ற பேட்டர்ன்-ஐ கொண்டு உள்ளது. பிளாட் ஆன பேக் பேனலின் கீழ்-இடது மூலையில் ஒப்போ பிராண்டிங் உள்ளது.
ஸ்மார்ட்போனின் வலது பக்கத்தில் ஒரு பவர் பட்டன் மற்றும் சவுண்ட் கண்ட்ரோல்ஸ் உள்ளது; இடது பக்கத்தில் ஒரு சிம் ட்ரே ஸ்லாட் உள்ளது. விலையை பொறுத்தவரை ஒப்போ கே15 5ஜி இது பெரும்பாலும் ரூ.20,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் தான் வரும் என்று எதிர்பார்க்கிறோம். ஏனென்றால் ஒப்போ கே13 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ17,999 க்கும், ஒப்போ கே14எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது கடந்த பிப்ரவரி 10 அன்று இந்தியாவில் ரூ.14,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஒப்போ கே13 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- டூயல் சிம் (நானோ)
- 120ஹெர்ட்ஸ் 6.7-இன்ச் FHD+ AMOLED டிஸ்பிளே
- அட்ரினோ A810 ஜிபியு உடன் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 4 சிப்செட்
- டூயல் ரியர் கேமரா செட்டப்
- ஆட்டோஃபோகஸ் கொண்ட 50 மெகாபிக்சல் OV50D40 சென்சார்
- 2 மெகாபிக்சல் OV02B1B இரண்டாம் நிலை கேமரா
- 16 மெகாபிக்சல் சோனி IMX480 செல்பீ கேமரா
- தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்கான ஐபி65 ரேட்டிங்
- டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ்
- இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் சென்சார்
- 80W சார்ஜிங் ஆதரவுடன் 7,000mAh பேட்டரி


Click it and Unblock the Notifications








