iQOO பொளந்து கட்டுது.. பட்ஜெட்ல 7200mAh பேட்டரி.. 44W சார்ஜிங்.. மார்ச் 12 க்கு வருது புதுசு.. எந்த மாடல்?
ஐக்யூ நிறுவனத்தின் பெரிய பேட்டரி மாடலான ஐக்யூ இசட்11எக்ஸ் (iQOO Z11x) ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும், பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் விவரங்களும் உறுதி செய்யப்பட்டு உள்ளன. இந்த ஐக்யூ இசட்11எக்ஸ் ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஏற்கனவே, அமேசான் (Amazon) தளத்தில் மைக்ரோசைட் ஓப்பன் செய்யப்பட்டு டிசைன், கலர் மற்றும் சிப்செட் விவரங்கள் உறுதி செய்யப்பட்டன. இப்போது, அதே மைக்ரோசைட்டில் மார்ச் 12ஆம் தேதி வெளியாக இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. 6 வருடங்களுக்கு பேட்டரி ஹெல்த் உறுதி செய்யப்பட்டுள்ளது. ரூ.23,000 பட்ஜெட்டுக்குள் வெளியாக இருப்பதும் உறுதியாகி இருக்கிறது.

ஐக்யூ இசட்11எக்ஸ் அம்சங்கள் (iQOO Z11x Specifications): 44W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 7200mAh பேட்டரியை இந்த ஐக்யூ இசட்11எக்ஸ் ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. மேலும், ரிவர்ஸ் சார்ஜிங் (Reverse Charging) சப்போர்ட் கிடைக்கிறது. 40 மணி நேரங்களுக்கு வீடியோ பிளேபேக் கிடைக்கும். 93 மணி நேரங்களுக்கு மியூசிக் பேக்கப் கொடுக்கப்படும்.
கேமிங் பிரியர்களுக்கு 15.4 மணி நேரங்களுக்கு பேக்கப் கிடைக்கும். இந்த பேக்கப்பை சிங்கிள் சார்ஜில் பெற்று கொள்ளலாம். ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 டர்போ எஸ்ஓசி (Octa Core MediaTek Dimensity 7400 Turbo SoC) கொடுக்கப்பட்டு உள்ளது. கிரீன் (Green) மற்றும் கிரே (Grey) கலர்களில் கிடைக்க உள்ளது. இந்த விவரங்கள் மட்டுமே உறுதி செய்யப்பட்டு உள்ளன.
மார்கெட்டில் கசிந்த விவரங்களை பொறுத்தவரையில், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் கிடைக்க உள்ளது. மேலும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டும் கிடைக்க இருக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் ஓர்ஜின் ஓஎஸ் 6 (OriginOS 6) கிடைக்க உள்ளது.
அமேசான் தளத்தில் இருக்கும் டிசைனில் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஆகவே, 50 எம்பி மெயின் கேமரா மற்றும் அல்ட்ரா வைடு கேமராவை எதிர்பார்க்கலாம். 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட எல்சிடி டிஸ்பிளேவை எதிர்பார்க்கலாம். முந்தைய வெர்ஷனிலும் எல்சிடி டிஸ்பிளே கொடுக்கப்பட்டது.
லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்களில் கிடைக்கும் எம்ஐஎல்-எஸ்டிடி- 810எச் (MIL-STD-810H) சர்டிபிகேஷன் இந்த ஐக்யூ இசட்11எக்ஸ் ஸ்மார்ட்போனிலும் கொடுக்கப்பட வாய்ப்புள்ளது. ஏனென்றால், ஐக்யூ இசட்10எக்ஸ் ஸ்மார்ட்போனில் இந்த எம்ஐஎல்-எஸ்டிடி- 810எச் சர்டிபிகேஷன் கொடுக்கப்பட்டது. மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி மாடல்களுக்கு இந்த சர்டிபிகேஷன் கிடைக்கும்.
IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் எதிர்பார்க்கலாம். ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 டர்போ எஸ்ஓசி வருவதால், 5ஜி என்எஸ்ஏ (5G NSA), எஸ்ஏ (SA) கனெக்டிவிட்டிகள் கிடைக்கும். மேலும், 4ஜி வோஎல்டிஇ (4G VoLTE), வை-பை 6 (Wi-Fi 6) மற்றும் ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4) கிடைக்கவும் வாய்ப்புள்ளது. ஓரிரு நாட்களில் அதிகரப்பூர்வமாக பீச்சர்கள் உறுதி செய்யப்படும்.


Click it and Unblock the Notifications