Home
Mobile

வீட்டுக்கு 2 வாங்கலாமே.. ரூ.5999 க்கு 6000mAh பேட்டரி, 50MP கேமரா, 120Hz டிஸ்பிளே.. SALE மார்ச் 11 முதல்!

ரியல்மி இந்தியா (Realme India) நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ-வான மாதவ் ஷெத் தொடங்கிய ஸ்மார்ட்போன் பிராண்ட் ஆன ஏஐ பிளஸ் (Ai Plus), இந்திய சந்தையில் அதன் 3வது ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. அது ஏஐ பிளஸ் பல்ஸ் 2 (Ai Plus Pulse 2) ஸ்மார்ட்போன் மாடல் ஆகும்.

பெயர் குறிப்பிடுவது போலவே இது முன்னதாக அறிமுகமான ஏஐ பிளஸ் பல்ஸ் 1 (Ai Plus Pulse 2) ஸ்மார்ட்போனுக்கு அடுத்தபடியாக வரும் மாடலாகும். இது வருகிற மார்ச் 11 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் ஷாப்ஸி (Shopsy) வழியாக விற்பனைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.5999 க்கு 6000mAh பேட்டரி, 50MP கேமரா, 120Hz டிஸ்பிளே!

ஏஐ பிளஸ் பல்ஸ் 2 ஸ்மார்ட்போன் ஆனது 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும். பேஸிக் 4ஜிபி ரேம் + 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.5,999 க்கும், 6ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.7,999 க்கும் வாங்க கிடைக்கும். இருப்பினும், இந்த விலைகள் விற்பனை தொடங்கும் முதல் 24 மணிநேரங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது ஏஐ பிளஸ் பல்ஸ் 2 ஸ்மாட்போனின் விற்பனை தொடங்கிய 24 மணி நேரத்திற்கு மட்டுமே மேற்குறிப்பிட்ட விலைகள் நேரலையில் இருக்கும். அதன் பிறகு ஏஐ பிளஸ் பல்ஸ் 2 ஸ்மார்ட்போனின் விற்பனை விலை மாற்றப்படும். ஏஐ பிளஸ் பிராண்ட் ஆனது இந்த ஸ்மார்ட்போனின் உண்மையான விற்பனை விலைகளை இன்னும் வெளியிடவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

ஏஐ பிளஸ் பல்ஸ் 2 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 450 நிட்ஸ் ப்ரைட்னஸ் உடனான 6.74-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது பல்ஸ் 1 மாடலில் இருந்த 90ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட்டை விட ஒரு நல்ல அப்கிரேட் ஆகும்.

மற்றொரு அப்கிரேட் செல்பீ கேமராவில் உள்ளது. பல்ஸ் 1 மாடலில் 5MP செல்பீ கேமரா உள்ளது. ஆனால் பல்ஸ் 2 மாடல் 8MP யூனிட்டாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இது இன்னும் தெளிவான செல்பீகள் மற்றும் வீடியோ காலிங் தரத்திற்கு வழிவகுக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

ரூ.5999 க்கு கவனிக்கப்பட வேண்டிய இன்னொரு முக்கியமான அம்சம் - 6000mAh பேட்டரி ஆகும். இந்த விலைக்கு வரும் பெரும்பாலான மாடல்களில் 5000mAh பேட்டரி தான் இருக்கும். இருந்தாலும் இந்த ஸ்மார்ட்போன் எவ்வளவு வேகமாக சார்ஜ் ஆகும் என்பதை ஏஐ பிளஸ் பிராண்ட் விவரிக்கவில்லை. இது 18W சார்ஜருடன் வருவது மட்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது

மேலும் சமீபத்தில் புதிதாக வெளியிடப்பட்ட பல ரூ.10,000 க்கும் குறைவான விலை நிர்ணயம் போன்கள் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் கொண்டு தொடர்ந்து இயங்கினாலும், ஏஐ பிளஸ் பல்ஸ் 2 ஆனது ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் அடிப்படையிலான நெக்ஸ்ட்குவாண்டம் ஓஎஸ் (NxtQuantum OS) உடன் வருகிறது. இதுவும் ஒரு நல்ல அப்கிரேட் ஆகும்.

ரியர் கேமராக்களை பொறுத்தவரை, பல்ஸ் 2 ஸ்மார்ட்போனில் முன்னதாக வெளியான பல்ஸ் 1 மாடலில் உள்ளதை போலவே 50எம்பி டூயல் ஏஐ ரியர் கேமராக்கள் உள்ளன. சிப்செட்டை பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போனில் மிகவும் பிரபலமான பட்ஜெட் சிப்செட் உள்ளது அது 12என்எம் அடிப்படையிலான யுனிசாக் டி7250 (Unisoc T7250) சிப்செட் ஆகும்.

VERDICT - நம்பி வாங்கலாமா? ரூ.5,999 என்கிற விற்பனை விலையைக் கருத்தில் கொண்டு ரூ.6,000 க்கு கீழ் என்கிற பட்ஜெட்டில் மேற்குறிப்பிட்ட சிப்செட்டை வழங்குவதால் ஏஐ ப்ளஸ் பிராண்டை நிச்சயம் பாராட்டலாம். சமீபத்தில் அறிமுகமான ரியல்மி பி4 லைட் மற்றும் டெக்னோ ஸ்பார்க் கோ 3 ஆகிய மாடல்களில் கூட இதே சிப்செட் தான் உள்ளது. மேற்குறிப்பிட்ட ஸ்மார்ட்போன்க்ளின் விலைகள் முறையே ரூ.9,999 மற்றும் 8,999 ஆகும். கூடவே இது பட்ஜெட் விலை வாசிகளை ஈர்க்கும் 6000mAh பேட்டரியையும் கொண்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Ai Plus Pulse 2 With 6000mAh battery Launched in India Offer Price Sale From March 11
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X